கடற்தொழிலுக்கு சென்ற மீனவரின் சடலம் குருநகர் பகுதியில் கரையொதுங்கியுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநகர் இறால் வளர்ப்பு திட்டப் பகுதியைச் சேர்ந்த ஆர்.ஜெகன் (வயது 31) என்ற நபரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் குருநகர் கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற வேளை, ஏற்பட்ட சுறாவளியின் போது சுழியில் சிக்கி இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இன்று கடலுக்குச் சென்ற மீனவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதன் பிரகாரம், கைப்பற்றப்பட்ட சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.