சர்வதேச மாற்றுவலுவுள்ளோர் தினத்தை முன்னிட்டு, யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவுடன் இணைந்து யாழ். ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிறுவனத்தினால் குறித்த இரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில், ஜெய்ப்பூர் நிறுவன பயனாளிகள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டு இரத்த கொடை செய்திருந்தனர்.
உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையும், உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் டிசம்பர் 3ஆம் திகதியை சர்வதேச மாற்றுவலுவுள்ளோர் தினமாக ஐ.நா சபை பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
