Ad Widget

வடக்கு கிழக்கு மாகாண இணைப்பு சாத்தியமற்றது ; சுமந்திரன்

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், எனினும் உடனடியாக இரு மாகாணங்களையும் இணைப்பது நடைமுறைச் சாத்திமற்றது என குறிப்பிட்டுள்ளார்.



வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கு முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்பு பெறப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைப்பது தொடர்பாக முஸ்லிம் தரப்பினருடன் கலந்துரையாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் யுத்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான உணர்வுகள் அவர்களின் மனங்களில் காணப்படுகின்றன. அந்த உணர்வுகள் முஸ்லிம் மக்களிடமிருந்து களையப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் புதிய அரசியலமைப்பில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் இணைக்கப்படுவதற்கான பொறிமுறை முன்வைக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Related Posts