Ad Widget

மின்கம்பம் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

யாழில் தற்போது நிலவும் காற்றுடன் கூடிய மழை காரணமாக அச்சுவேலி தொண்டமனாறு பிரதான வீதியில் பிரதான மின்கம்பங்கள் இரண்டு சரிந்து வீழந்துள்ளன.

இதனால் யாழ்ப்பாணம் பருத்தித்துறை 751 மார்க்க வீதிக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் அனைத்து வாகனங்களும் மாற்றுவழியூடாக பயணிக்கின்றன.

குளிர்காற்றுடன் கூடிய மினிசூறாவளி தொண்டமானாறு பகுதியினை தாக்கியுள்ளது. இதனால் இரண்டு மின்கம்பங்கள் வீதியின் குறுக்கே சரிந்து வீழந்துள்ளன. இது தொடர்பில் மின்சார சபை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts