- Monday
- August 17th, 2026
நாட்டில் ஏற்பட்ட கொடிய யுத்தம் பெண்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மீன்பிடித்தொழில், இறால் கூடு கட்டுதல், நண்டுக் கூடு கட்டுதல் போன்ற தொழில்கள் ஆண்களினாலேயே மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆனால் இன்று பெண்கள் பலர் குறித்த தொழில்களை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டார். காரைநகர், ஊரிக்காடு மற்றும் அராலித்துறைப் பகுதிகளில் சிறியரக...
யாழ்ப்பாணத்தில் இருவேறு இடங்களில் நீராடச் சென்ற ஆசிரியர் மற்றும் மாணவர் ஒருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கீரிமலை - மாதகல் - 5, கண் கடற்கரையில் நீராடச் சென்ற ஆசிரியர் ஒருவர் நேற்றைய தினம் நீரில் மூழ்கி பலியானார். யாழ். - இளவாலை பகுதி பாடசாலை ஒன்றின் ஆசிரியரான நகுலன் (வயது - 31) என்பவரே...
தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் எமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள் என, அவர்களது பெற்றோர் மற்றும் மனைவிமார் உள்ளிட்ட உறவினர்கள் இன்று (27) கிளிநொச்சியில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பத்து பேர் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் பெண்ணொருவர் ஆகியோரின் உறவுகள் கிளிநொச்சியில்...
முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க இன்று காலமானார் . இறக்கும்பொழுது இவருக்கு 83 வயது. சுகயீனம் காரணமாக இவர் கடந்த 21ம் திகதி தனியார் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்ட்டிருந்தார். 2000ம் ஆண்டிலிருந்து 2001ம் ஆண்டுவரையிலும் 2005 ம்ஆண்டிலிருந்து 2010 ம் ஆண்டு வரையிலும் இவர் பிரதமராக பதவியிலிருந்தார். ரட்ணசிறி விக்ரமநாயக்க மில்லிவேவ ஆரம்ப பாடசாலையிலும்...
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வாள் வீச்சில் மூவர் காயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மட்டக்களப்பைச் சேர்ந்த குடும்பஸ்தரான கிறிஸ்தோபர் பிரனீத், நவாலியைச் சேர்ந்த வின்சன், முச்சக்கர வண்டி சாரதியான சாய்மாறன் ஆகியோரே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் வாள் மற்றும் கத்திகளுடன் வந்த...
யாழ்ப்பாணத்தின் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சிக்கியா என அழைக்கப்படும் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து பணம் மற்றும் நகைகளை கைப்பற்றியுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்த சிக்கியா என்றழைக்கப்படும் யோகேஸ்வரன் என்பவர் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டவர். இவர் ஏற்கனவே திருட்டு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டிருந்த நிலையில் அதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவ்வாறான நிலையில் சிறைக்காலம் முடிந்து...
பூமி எமது தாய். தமிழ்மொழியில் மாத்திரம் அல்ல் உலகில் பேசப்படுகின்ற அனைத்து மொழிகளிலுமே பூமியை அன்னை என்றும் பூமாதேவி என்றும் பூமிக்கு உயிர்கொடுத்துத்தான் அழைத்து வருகிறார்கள். ஆனால், பூமியின் குழந்தைகள்போல நாங்கள் நடந்து கொள்வதில்லை. பூமியில் நாங்கள் ஒட்டுண்ணிகளாகவே வாழ்ந்து வருகிறோம். அதன் விளைவுதான் இயற்கைப்பேரழிவுகள் என்று வடக்கு சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு...
சிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், ஒரு சில மாகாண சபைகள் பொருத்திருந்து தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது. எமது மக்களின் அரசியல் உரிமை பிரச்சினைத் தீர்வு தொடர்பில் ஓர் ஆரம்பமாக நாங்கள் ஆரம்பந்தொட்டு கூறிவருகின்றவாறு, 13வது அரசிலமைப்புச்...
வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஒத்துழைக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கல்முனையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான நடராஜா ரவிராஜின் கொலை வழக்கின் தீர்ப்பானது ஒரு புதிரின் சிறுபகுதியாகும் என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன், “இந்தப் படுகொலைச் சம்பவம், இன்றைக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது. ஆனால், அந்தச் சம்பவத்துக்குக் கட்டளையிட்டவர் யார் என அறிய நாம் இன்னும் காத்திருக்கிறோம்” என்று தெரிவித்தார். இந்தியாவின்...
மருத்துவ பீட கற்கைநெறி கட்டடத் தொகுதி போதனா வைத்தியசாலை (Professorial Department Complex Teaching Hospital Jaffna) மேற்படி கட்டிடத் தொகுதி ஆனது யாழ் போதனா வைத்தியசாலையின் மேற்குப் பகுதியில் மருத்துவப் பீடத்திற்கு ஒதுக்கப்பட்ட 4 பரப்பு காணியில் அமைக்கப்பட உள்ளது. இக்கட்டிடத் தொகுதி உயர்கல்வி அமைச்சின் 720 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கட்டப்பட உள்ளது....
கொழும்பு கோட்டையிலிருந்து நேற்றிரவு (26) பதுளை நோக்கி பயணிக்கவிருந்த தபால் ரயிலில் குண்டு இருப்பதாக பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலையடுத்து, ரயில் இரண்டரை மணித்தியாலங்கள் தாமதமாகியதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. ரயிலில் குண்டுப் பொதியொன்று இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தவுடன், இரவு 8.00 மணிக்கு ரயிலில் இருந்த சகல பயணிகளும் இறக்கப்பட்டு, விசேட அதிரடிப்படைப்...
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள கின்னஸ் சாதனைக்கான உலகின் மிக உயர்ந்த செயற்கை நத்தார் மரம் திட்டமிட்ட உயரத்தை விடவும் குறைவாகவே அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிக உயரமான நத்தார் மரம் என்ற சாதனையைப் படைக்கும் நோக்கில், காலிமுகத்திடலில் சுமார் 80 ஆயிரம் டொலர் செலவில் பிரமாண்ட நத்தார் மரம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டு கட்டுமானப் பணிகள்...
இயற்கை அனர்தங்களால் ஏற்படும் அநாவசிய உயிரிழப்புகள் மற்றும் உடமைச் சேதங்களை கட்டுபடுத்தக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். நேற்றய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதேமேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2004ம் ஆண்டு ஏற்பட்ட...
வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு நகர்பகுதியில் இந்திய நாட்டின் அகிம்சாவாதியான மகாத்மா காந்திக்கான நினைவுச்சிலை அமைக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் நேற்றையதினம் காலையில் அந்தச் சிலை உடைந்துவிழுந்த நிலையில் காணப்பட்டிருக்கின்றது. இந்த சிலை உடைப்பு தொடர்பில் முல்லைத்தீவு காவல் நிலையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகனால் முறையிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணையில் முல்லைத்தீவு...
யாழ். பண்ணை பகுதியில் தொலைத் தொடர்பு கோபுரம் விழுந்ததில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பண்ணை பகுதியில் உள்ள சிறீலங்கா ரெலிகோம் நிறுவனத்திற்கு சொந்தமான கோபுரமே இவ்வாறு விழுந்துள்ளது. 184 மீற்றர் உயரமான இந்த தொலைத் தொடர்புக் கோபுரத்தைக் கழற்றிக் கொண்டிருக்கும்போது மீதமாக இருந்த கோபுரத்தின் பகுதி அடியோடு சாய்ந்து விழுந்துள்ளது. இதன்போது வீதியால் பயணித்து கொண்டிருந்த...
அனுராதபுரத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த வாகனம் ஒன்றும் வவுனியாவிலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற கொள்கலன் ஒன்றும் இன்று அதிகாலை 5.30 அளவில் மோதி விபத்துக்குள்ளானதாக மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஏ9 பிரதான வீதி, இரட்டை பெரியகுளம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விபத்தில்...
தனியார் ஊடகங்களுக்கு பொலிஸ் செய்திகளை மின்னஞ்சல் ஊடாக அனுப்பும் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உத்தரவிட்டுள்ளதாக வெளியான செய்தியை பொலிஸ் ஊடகப் பிரிவு மறுத்துள்ளது. இது குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொலிஸ் மா அதிபரிடமிருந்து தமக்கு அவ்வாறானதொரு உத்தரவு கிடைக்கவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயிரும் தினமும்...
அமைச்சரவையின் அனுமதி கிடைத்தால் வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றுவோர் நிரந்தரமாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இராசா ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இதேவேளை வடமாகாணத்திற்கு மூவாயிரத்து 200 ஆசியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வடமாகாணத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடம் குறித்து வினவியபோதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். வடக்கில் 15 ஆயிரத்து...
இன்று வரும் சினிமாப்படங்கள் கத்திச்சண்டை போன்ற பெயர்களில் எல்லாம் வருகின்றன. இதை பார்க்கும் பிள்ளைகள் நத்தாருக்குக் கூட கத்தி பொல்லுடன் சண்டைக்குத் தான் செல்வார்கள். இப்படியான உலகத்தில் வாழும் பெற்றோர்கள், உங்களுடைய பிள்ளைகளை இரக்கம் உடையவர்களாக வளர்க்க வேண்டும். இல்லையேல் நாங்கள் அழிவோம். இவ்வாறு யாழ்.மறைமாவட்ட பேராயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கேட்டுக் கொண்டார்....
Loading posts...
All posts loaded
No more posts
