- Monday
- August 17th, 2026
2017ம் ஆண்டு ஆரம்பத்தில் சனி பெயர்ச்சியும் ஆகஸ்ட் மாதம் ராகு கேது பெயர்ச்சியும், செப்டம்பரில் குரு பெயர்ச்சியும் நிகழ உள்ளது. அவரவருக்கென்று தனியாக இருக்கும் ஜாதக லக்கினம் தசாபுத்தி பலன்கள், குணாதிசயம், ராசி பலன்கள் மாறுபடலாம். ஜாதகத்தில் சுபபலன்கள் தரக்கூடிய தசை புக்தி அந்தரங்கள் நடக்குமானால் இங்கே கோசார ரீதியாக சொல்லப்பட்டுள்ள நற்பலன்கள் கூடும் கெடுபலன்கள்...
2017ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் நடுப்பகுதி வரையில் தமிழ் மக்களின் உடனடிப்பிரச்சினைகள் தொடர்பில் தேசிய அரசாங்கம் முன்னெடுக்கப்போகும் செயற்பாடுகளின் அடிப்படையிலேயே தமது ஜெனீவா கூட்டத் தொடரில் தமது முடிவும் அமையும் எனவும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் பெப்ரவரி 27ஆம் திகதி முதல் மார்ச்...
அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுனான சந்திப்பு ஆலையடிவேம்பு பிரதேசசெயலக கலாசார மண்டபத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா, ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் தமிழ்மக்களையும் ஐ.நா.தீர்மானத்தினையும் ஏமாற்றினால் தென்னிலங்கையில் ஆட்சியினை நடாத்தாது தடுக்கும்...
எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் சமஷ்டியைக் கோரவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர உட்பட சில முக்கியமான அரசாங்க தரப்பினர் பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்கும் என எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கணித்திருந்தார். இவ்விரு விடயங்கள் தொடர்பாக வினவியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான...
மயிலிட்டி மட்டுமல்லாது இன்னும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பல்வேறு தேவைகளுக்கென கையகப்படுத்தப்பட்டுள்ள எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து குடியிருப்பு, விவசாய மற்றும் கடல்தொழில் சார்ந்த இடங்கள் யாவும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். மயிலிட்டி பகுதியை...
இயலாமையுடன் கூடிய ஆட்களை அடையாளப்படுத்துவதற்கான வடமாகாண சபையின் மருத்துவ சான்றிதழ் வழங்கும் செயற்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்ட வலுவிழந்தோருக்கான புனர்வாழ்வு நிறுவனம் மேற்கொண்ட நடவடிக்கையில் சுமார் 400 பேர் நன்மையடைந்துள்ளனர். வடமாகாண சபையின் சமூக சேவைகள் திணைக்களம் வடமாகாண சுகாதார அமைச்சுடன் இணைந்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வவுனியா வடக்கு...
ஒற்றையாட்சிக்குள் தீர்வு, வடகிழக்கு இணைப்பு இல்லை, பௌத்தத்திற்கு முதலிடம் என தமிழ் மக்களின் கோரிக்கைகள் மறுதலிக்கப்படும் சந்தர்ப்பத்தில் வழிகாட்டல் குழுவில் இருந்து இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் உடனடியாக வெளியேற வேண்டுமென ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். 21 பேர் கொண்ட வழிகாட்டல் குழுவில் இரா.சம்பந்தனும், சுமந்திரனும் கூட்டமைப்பினைச் சேர்ந்தவர்களாக...
யுத்தத்திற்குப் பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரையான காலப்பகுதியில், ஒரு இலட்சத்திற்கும் 30ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை குடியமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் புள்ளி விபரத்தின்படி, 42 ஆயிரத்து 158 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 33 ஆயிரத்து 750 அங்கத்தவர்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர். கரைத்துறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவான மக்கள் மீள்குடியேறியுள்ளனர். இதன்பிரகாரம்...
பால்மா விலையை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர் சங்கம் விடுத்த கோரிக்கையை நுகர்வோர் அதிகார சபை நிராகரித்துள்ளது. பால்மா கிலோகிராம் ஒன்றின் விலையை 810 ரூபாயிலிருந்து 927 ரூபாய் வரை அதிகரிக்குமாறு பால்மா இறக்குமதியாளர் சங்கம், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கைக்கு அமைய, 325 ரூபாய்க்கு விற்கப்படும் 400 கிராம் பால்மா, 375...
சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அல்லாரை கிராமத்தில் உள்ள தும்பு தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று காலை இந்த பகுதிக்கு சென்ற வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா. டெனீஸ்வரன் மாகாணசபை உறுப்பினர் கேசவன் சயந்தன் ஆகியோர் இத்தொழிற்துறையில் ஈடுபட்டுள்ளோர்களின் பிரச்சினைகள் பற்றி கவனம் செலுத்தினர். கடந்த...
நாட்டில் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு ஊவா , வடமத்திய மத்திய மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது மழை எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் மழை அல்லது மழை...
பாணின் விலை உயர்த்தப்படாது என திறைசேரி அறிவித்துள்ளது. பாண் மற்றும் பணிஸ் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகளை உயர்த்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என திறைசேரியின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். சீனி மற்றும் பாம் எண்ணெய் ஆகியனவற்றின் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளதாகவும் இந்த வரி உயர்விற்கு சமாந்திரமாக வெதுப்பக உற்பத்திகளை அதிகரிக்க நேரிடும் எனவும் வெதுப்பக...
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றின்மீது காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தியதில் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றதாகவும் திருகோணமலை உட்துறைமுக வீதி கிழக்கு மாகாண சபை கட்டிட பகுதிக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளதாவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, தம்பலகாமம் பிரதேசத்தில் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்...
முல்லைத்தீவு முள்ளியவளை வற்றாப்பளை பகுதியில் இராணுவத்தினர் பயணித்த அம்புலன்ஸ் வண்டி, துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மீது மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவிடத்திலேயே உயிரிழந்துள்ளார். வற்றாபளை பகுதியிலிருந்து முள்ளியவளைநோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த நபர் மீது, பின்னால் வந்த கேப்பாபுலவு இராணுவ முகாமின் இராணுவ அம்புலன்ஸ்வண்டி மோதியது. இன்று புதன்கிழமை காலை (28) இடம்பெற்ற இச்சம்பவத்தில் வற்றாப்பளையைச் சேர்ந்த...
“வடமாகாண முதலமைச்சர் முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் வெளியிட்ட கருத்து உண்மைக்கு புறம்பானது" என வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்துள்ளார் “வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் முதல்வர் முன்வைக்கும் கருத்துக்கள் தரவுகள் அனைத்துமே மீள்பரிசீலனைக்கு உட்படுத்தப்படல் அவசியமாகும். வடக்கு மாகாணசபையில் முழுநாள் விவாதமொன்று நடாத்தப்பட்டு வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலான நிலைப்பாடுகளும் கருத்துக்களும் தெளிவுபடுத்தப்படல் அவசியமாகும்...
வடமாகாண சபையில் இதுவரை 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். வடமாகாண சபையின், இவ்வருடத்தின் இறுதி அமர்வாக இன்றைய அமர்வு இடம்பெற்றது. “வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு முதலாவது அமர்வு 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் 25 ஆம் திகதி இடம்பெற்றதிலிருந்து இன்று புதன்கிழமை (28) இடம்பெற்ற அமர்வுகள் வரை 337 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன” என...
வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசியர்களின் நிரந்தர நியமனத்தினை உடன் வழங்குமாறு கோரி இன்று உண்ணாவிரதப் போராட்டதை முன்னெடுத்தனர். இப்போராட்டம் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது. கடந்த 05 மாதம் வடமாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட தொண்டராசியர்கள் நிரந்தர நியமனத்தினை வழங்க வலியுறுத்தி நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தின் போது, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்...
எங்களுடைய விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று அவர் பிரதமராகியிருப்பார் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று 28-12-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், கடந்த செப்டம்பர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த வியாபாரிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...
என்ன முட்டுக்கட்டை வந்தாலும் பொருத்து வீட்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என மீள்குடியேற்றம், புனா்வாழ்வு, சிறைசாலைகள் மறுசீரமைப்பு மற்றும் இந்து சமய விவகார அமைச்சா் டி.எம் சுவாமிநாதன் தெரிவித்தார். கிளிநொச்சி பொதுச் சந்தையில் தீயினால் எரிந்த கடை உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் குறிப்பிடும்...
வடக்கிலுள்ள காணி உரித்தாளர்களை நீண்டதூரத்தில் குடியமர்த்தியமை உள்ளிட்ட காரணங்களால் தரிசு நிலங்களாகியுள்ள வடக்கின் காணிகளை, அதன் உரிமையாளர்களுடன் தொடர்புகொண்டு அவற்றை குத்தைக்கு எடுத்து வளப்படுத்த தென்னை பயிர்ச்செய்கை சபை முன்வர வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வடக்கு மாகாணத்தின் தென்னை அபிவிருத்தி சபையின்...
Loading posts...
All posts loaded
No more posts
