காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அடையாள உண்ணாவிரத போராட்டம்

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் உரிய பதில் வழங்குமாறு கோரி அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டம் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அலையும் சங்கத்தினால் இன்று வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து வவுனியாவிலும், கிழக்கு...

சிறுவர் வைத்தியசாலை அமைக்க இடம் வழங்குமாறு கோரிக்கை!

2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கமைய யாழ்ப்பாணத்தில் சிறுவர் வைத்தியசாலை அமைப்பதற்கு மத்திய அரசாங்கத்தினால் 1000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுவர் வைத்தியசாலையானது போதனா வைத்தியசாலையுடன் இணைந்ததாகவே அமைக்கப்படவேண்டுமென்பதால், யாழ். போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இதற்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அருகில் 1.5...
Ad Widget

பலாலியில் 137 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தி

மீளக்குடியேற்றம் செய்து வைக்கப்பட்ட பலாலி வடக்கில் 137 வீடுகளின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடைந்துள்ளதாக தெல்லிப்பழை பிரதேசச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீள்குடியேற்ற அமைச்சின் 8 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அன்ரனிபுரம் பகுதியில் 30 வீடுகளின் பணி நிறைவடைந்துள்ளது. அதேபோல் காணி அற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அரச காணியில் கட்டப்பட்ட 107 வீடுகளின் பணிகளும்...

கீரிமலை வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்

கீரிமலையில் காணி இல்லாதவர்களுக்கு, காணியுடன் கூடிய வீடமைக்கும் பணி, இராண்டாம் கட்டமாக இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெல்லிப்பழை பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையினை அண்டிய அரச காணியில், ஏற்கெனவே 100 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் குறித்த வீட்டுத்திட்டத்துக்கு “நல்லிணக்கபுரம்” என பெயர் சூட்டப்பட்டிருந்தது. இதனையடுத்து, முகாம்களில்...

கல்வி அமைச்சின் முன் அதிபர்கள் போராட்டம்

வடமாகாணத்தில் அதிபர் தரத்தில் சித்தி அடைந்து பாடசாலைகள் கிடைக்கப்பெற்று ஆனால் பாடசாலைகளை பொறுப்பேற்க அனுமதி கிடைக்காத 98 அதிபர்கள், வடமாகாண கல்வி அமைச்சின் முன், புதன்கிழமை (28) போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்போது, போராட்டத்தில் ஈடுபட்ட அதிபர்களை சந்தித்த வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், கலந்துரையாடினார். இதனையடுத்து, வடமாகாண கல்வி அமைச்சருடன் கலந்துரையாடிய அமைச்சின் செயலாளர்,...

விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

யாழ். தொழில்நுட்பவியல் கல்லூரியின் 2017ஆம் கல்வி ஆண்டுக்கான கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், தொலைத்தொடர்பு தொழில் நுட்பவியல், நிர்மாண தொழில்நுட்பவியல், கணிய அளவையியல் தொழில்நுட்பவியல், மோட்டார் வாகன தொழில்நுட்பவியல், தேசிய கணக்கீடு, ஆங்கிலம் மற்றும் கல்வியியல் போன்ற கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புவோர் எதிர்வரும் ஐனவரி மாதம் (13)...

நல்லாட்சியை கவிழ்ப்பதே இலட்சியம்

எதிர்வரும் 2017ஆம் ஆண்டில், தற்போதுள்ள நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதே தனது இலட்சியம் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையின் வெளிநாட்டு செய்தியாளர்களின் சங்கத்துக்கு, கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கச்சதீவில் மிதக்கும் துறைமுகம்

வருடாந்த திருவிழாவுக்கு பக்தர்கள் வந்து செல்ல வசதியாக கச்சதீவில் மிதக்கும் துறைமுகம் ஒன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் செயலாளர் என்.வேதநாயன், தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,“ சுற்றுலாதுறை அமைச்சின் நிதியுதவியுடன் 7 மில்லியன் ரூபாய் செலவில் மிதக்கும் துறைமுகம் அமைக்க உத்திதேசிக்கப்பட்டுள்ளது. கச்சதீவு ஆலய பங்குத்தந்தை விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இத் துறைமுகம்...

போலி கடவுச்சீட்டுடன் இலங்கையர் இருவர் இந்தியாவில் கைது

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி வேறு நாடுகளுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயற்சித்த இலங்கை பிரஜைகள் இருவர், கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் கொல்கத்தா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயற்சித்த நிலையில், விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆவண சோதனையின் போது, போல கடவுச்சீட்டு...

யாழ் பல்கலையில் தொல்பொருள் கண்காட்சி

மன்னார் கட்டுக்கரைத் தொல்லியல் அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர் தொன்மையயை வெளிப்படுத்தும் தொல்பொருட் சின்னங்களை காட்சிப்படுத்தும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்.பல்கலைகழக தொல்லியல் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள இக்காட்சிக்கூடத்தை யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் செல்வி வசந்தி அரசரட்ணம் நேற்று காலை திறந்து வைத்தார். சுமார் ஆறு மாதகாலமாக மன்னார் கட்டுக்கரை பகுதியில்இ யாழ் பல்கலைக் கழக தொல்லியல் துறை...

வீதிகளில் குப்பைகளை கொட்டினால் ஆயிரம் ரூபா தண்டம்

யாழ்.நகர மக்கள் தமது வீடுகளில் நாளாந்தம் சேரும் கழிவுகளை உக்கக்கூடிய கழிவுகள், உக்காத கழிவுகள் என தரம் பிரித்து வைப்பதன்மூலமே அவற்றை அகற்றுவது இலகுவாக இருக்குமென யாழ் மாநகரசபை ஆணையாளர் பொ. வாகீசன் தெரிவித்தார். யாழ் மாநகர சபையில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,...

வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் ஜனவரி முதல் அமுல்

வரவு செலவுத் திட்ட யோசனை திருத்தம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படுத்தப்படும் என, நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் வரி தொடர்பான திருத்தங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் செயற்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை!

கடந்த 23ம் திகதி முதல் தங்களது விடுதலையை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையினை மனிதாபிமான முறையில் பரிசீலித்து அவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கூடிய நடவடிக்கையினை எடுத்து உதவுமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்களுக்கு...

செயற்கைக் கள்ளுக்குத் தடை! வடக்கு மாகாணசபையில் தீர்மானம்

தென்னிலங்கையிலிருந்து வடக்கு மாகாணத்துக்குள் கொண்டுவந்து விற்பனை செய்யப்படும் செயற்கைக் கள்ளுக்கு தடைவிதிக்கும் தீர்மானம் நேற்று நடைபெற்ற வடக்கு மாகாணசபையின் அமர்வில் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், மாகாணசபைக்குட்பட்ட பனை, தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களால் உற்பத்தி செய்யப்படும் கள்ளுக்கும் உடனடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாகாணக் கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை மன்றில் முன்மொழிந்து கருத்துத் தெரிவிக்கையில், மாகாண பனை,...

கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை?

கிளிநொச்சியில் மாலை நேர வகுப்புகளுக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் மற்றும் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் புதன்கிழமை (28) மாலை நேர வகுப்புக்கள் முடிந்து மாணவிகள் சென்ற வேளை சில இளைஞர்கள் மாணவிகளுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளனர். இவ்விடயம் சிறுவர்...

மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு!

யுத்தம் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கைகளை அடுத்த வருடம் மார்ச் மாத காலப் பகுதிக்குள் நிறைவு செய்ய முடியும் என, அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். தற்போது வரை 4600 ஏக்கர் நிலப்பரப்புகளில் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கையிலுள்ள 31 நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள சுமார் ஆயிரம் குடும்பங்கள்...

பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிக்குமாறு அமைச்சர் சுவாமிநாதன் கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அமைத்து கொடுக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்குமாறு மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார். பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் பிரதேச செயலகங்களின் ஊடாக பதிவு செய்யுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வவுனியா, கற்பகபுரம் கிராமத்தில் 370 குடும்பங்களுக்கு...

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்துக்கு நிறுவனங்கள் உதவ வேண்டும்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்துக்கு நிறுவனங்கள் செய்யும் உதவிகள் இன்றியமையாததாக உள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ.ஒ.சி நிறுவனத்தின் நிதியில் புனரமைப்பு செய்யப்பட்டு பாசையூரில் அமைந்துள்ள யாழ். மாநகர சபையின் ஆரம்ப சுகாதார நிலையம் புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் உரையாற்றும் போது...

‘வடக்கு ஸ்தம்பிக்கும்’ கடற்றொழிலாளர் சம்மேளனம் எச்சரிக்கை!!

“இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங்கத்துக்கு அடிபணிந்து, கோரிக்கைகளில் மாற்றத்தினை ஏற்படுத்தினால், வடபகுதி ஸ்தம்பிக்கும் வகையிலான பாரிய போராட்டத்தினை முன்னெடுப்போம்” என்று, வடமாகாண கடற்றொழிலாளர் சம்மேளனம், எச்சரிக்கை விடுத்தது. யாழ். ஊடக அமையத்தில், நேற்று (28) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அச்சம்மேளனம், மேற்கண்டவாறு குறிப்பிட்டது. “நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31), கொழும்பில் நடைபெறவிருந்த...

ரட்ணசிறியின் வீடு சம்பந்தருக்கு?

மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தனுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன என்று, நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இலங்கையின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அரசாங்கத்தின் செலவில் உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவரான சம்பந்தனுக்கு, அவ்வாறான உத்தியோகபூர்வ இல்லமொன்று, இதுவரை...
Loading posts...

All posts loaded

No more posts