- Monday
- August 17th, 2026
முன்வைக்கப்படவுள்ள புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தேசிய பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றை இந்த வருடம் அடைய முடியும் என எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் வெளியிட்டுள்ள புத்தாண்டுச் செய்தியில்: எதிர்காலச் சந்ததியினருக்காக பன்முகத் தன்மைகளை எவரும் தடையாக எடுத்துக் கொள்ளக்கூடாது என அவர்...
இன்று முதல் அரசாங்க வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களுக்கு தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 31ம் திகதியளவில் அரசாங்கத்தினால் சகல பரிசோதனை கூட வசதிகளும் உள்ள வைத்தியசாலைகளுக்கு இரத்த பரிசோதனை செய்யும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது. அரசாங்கத்திலுள்ள வைத்தியசாலைகளில்...
பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை விரைவில் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பேக்கரி உற்பத்தியின் மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நோயாளிகளின் நலன்கருதி அவர்களுக்கான மருந்துப் பொருட்களினதும், பயன்படுத்தப்படும் வைத்திய உபகரணங்களினதும் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதார போஷாக்கு மற்றம் சுதேச மருத்துவத்தறை அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் டொக்டர் ராஜித்த சேனாரட்ன மேலும் தெரிவித்தாவது: முதற் கட்டமாக செயற்கை கண் வில்லைகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த...
பாடசாலை மாணவர்கள் இலவச சீருடைகளை பெற்று கொள்வதற்காக வழங்கப்பட்டுள்ள கொடுப்பனவு பத்திரத்தின் காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை எதிர்வரும் 2 ஆம் திகதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை...
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதன்படி இரவு 09.00 மணி தொடக்கம் அதிகாலை 05.00 மணி வரை அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு சாரதி அனுமதி பத்திரம் பெற்றுக்கொடுப்பது தொடா்பாக உரிய அமைச்சு மற்றும் திணைக்களங்களுக்கு விபரங்கள் அனுப்ப வேண்டியிருப்பதனால் வாகனங்களை பாவிக்கும் மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய விபரங்களை கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா் சங்கத்திடம் வழங்குமாறு குறித்த சங்கம் அறிவித்துள்ளது. சாரதி அனுமதி பத்திரம் தேவையான மாற்றுத்திறனாளிகள் முதலில் தங்களுடைய விபரங்களை கிளிநொச்சி உதயநகா்...
யாழ்ப்பாணத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசங்களின் நிலைமைகளை நேரடியாக பார்வையிட வேண்டும் என தையிட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வலி. வடக்கில் கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் தமது காணிகள் மற்றும் வீடுகள் அனைத்து வளங்களுடன் காணப்பட்டதாகவும் தற்போது தங்களது வீடுகள் உடைக்கப்பட்டு, பற்றைக்காடாக...
இருட்டிலிருந்த தமிழ் மக்களின் பிரச்சனைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தவர் தலைவர் பிரபாகரனே. அவர் மீது தமிழ் மக்களுக்கிருக்கும் மரியாதையை ஒருபோதும் இல்லாமலாக்கமுடியாது. அதன்காரணமாகவே விஜயகலா மகேஸ்வரனும் தலைவர் பிரபாகரன் தொடர்பாக கருத்து வெளியிட்டிருந்தார் என நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். நவசம சமாஜக் கட்சி அலுவலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைவர்...
சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருகும் விதத்தில் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக கூடுதல் தண்டனை வழங்கக்கூடிய யோசனை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதென்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்டொக்டர் மஹிபால மேலும் தெரிவித்தார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் கூடுதலான டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டிருந்தாலும், டெங்கு மரணங்களின் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சுகாதார...
காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி நேற்று இலங்கை வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக அரசு உடன் பொறுப்பு கூற வேண்டும். தவறினால் வரும் ஜனவரி மாதம் 21 ஆம் திகதி முதல் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்கப் போவதாக காணாமல் ஆக்கப்பட்டுள்ளவர்களின் உறவினர்கள்...
வடமாகாண கால்நடை அமைச்சால் அனலைதீவில் 25 தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நல்லின ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. அனலைதீவு ஐயனார் கோவிலடியில் நேற்று வெள்ளிக்கிழமை (30.12.2016) நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கி வைத்துள்ளார். வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சு பின்தங்கிய கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை...
“நாம் தற்பொழுது இலங்கையின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலப்பகுதியை கடந்துச் செல்கின்றோம். இன்னு ஒரு சில நாட்களில் புத்தாண்டு மலரவுள்ளது. அது மிகவும் எதிர்பார்ப்புள்ள ஆண்டாகும். எதிர்வரும் ஆண்டில் இருள் சூழ்ந்த கடந்த காலத்தை பின்தள்ளி வைத்துவிட்டு ஒரு நாடாக ஒன்றினைந்து சௌபாக்கியத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன்...
இலங்கை கடற்பரப்பை ஊடுருவும் இந்திய மீனவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் சகலரையும் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விடுதலை செய்வதென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கிரியங்கள்ளிய நீர்த்தேக்கத்தை மையமாகக் கொண்டு மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு வள்ளங்கள் உள்ளிட்ட மீன்பிடி...
காணாமல் போனோர் தொடர்பாக நல்ல முடிவை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து வவுனியாவில் இன்று (வெள்ளிக்கிழமை) அடையாள உண்ணாவிரதப்போராட்டம் இடம்பெற்று வருகின்றது. தாயகப் பகுதியில் கையளிக்கப்பட்டு மற்றும் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி கண்டறியும் சங்கம் ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா கச்சேரிக்கு முன்பாக உள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு முன்பாக இடம்பெற்று வருகின்றது....
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.ரி.சிவலிங்கம் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர்...
கோரிக்கைகள் முன்வைக்கப்படும் பட்சத்தில், மாதவிடாய் ஏற்படும் காலத்தில், பெண்களுக்கு ஒரு நாள் விடுமுறை வழங்குவற்கான யோசனை அடங்கிய அமைச்சரவைப் பத்திரத்தை, அமைச்சரவையில் சமர்ப்பிக்கத் தான் தயாராக உள்ளதாக, மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார். இதுபோன்றதொரு நடைமுறை, சீனாவிலும் அமுலில் உள்ளதாகத் தெரியவந்துள்ளதை அடுத்து, அந்த முறைமையை இலங்கைக்கும் கொண்டுவருவதற்கு யோசனைகளை முன்வைத்துள்ளதாக அவர்...
வாகன உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவு அபாராதம் செலுத்தாமல் வாகனங்களின் உரிமையை தற்போதைய உரிமையாளர்களின் பெயர்களுக்கு மாற்றிக் கொள்வதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 01ம் திகதி முதல் இந்த நிவாரணக் காலம் வழங்கப்பட்டிருந்ததாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஜகத் சந்திரசிறி கூறுகிறார். அந்தக்...
பிரபாகரன் குறித்த விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை பிரதமர் ஏற்றுக் கொள்வாரா விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருந்திருந்தால், இன்று அவர் பிரதமராகியிருப்பார் என்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இனவாதக் கருத்தை, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்வாரா என்று பாராளுமன்ற உறுப்பினர் விமல்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமர் பதவியொன்று வழங்கப்படும் பட்சத்தில் இணைந்து கடமையாற்ற தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிததுள்ளார். கொழும்பில் நேற்று வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த சந்தர்ப்பத்திலேயே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த சந்திப்பின் போது, “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் பிரதமர் பதவியொன்று வழங்கப்படும் பட்சத்தில், ஜனாதிபதியுடன் இணைந்து...
Loading posts...
All posts loaded
No more posts
