- Monday
- August 17th, 2026
முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைக்கப்பட்ட காந்தி சிலை உடைக்கப்பட்டமையானது பெரும் மனவேதனை தரும் விடயமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, இச்செயலானது காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேயின் கொடிய செயலைவிட மிக கொடுமையானதும் கோழைத்தனமானதுமாகும் என்றும் விசனம் வெளியிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மு.சிவமோகனின் ஏற்பாட்டில்...
முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் என்கின்ற சொற் பிரயோகங்களை சர்வதேசஅளவில் மாத்திரமன்றி தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் தமது சுயலாபங்களுக்கு பயன்படுத்தி வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஒற்றுமையை பொறுத்தவரையில் அது ஒரு ஆரோக்கியமான விடயமல்ல. இன்றுவரைக்கும் அது ஒரு பிரச்சினையாக இருந்துகொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் புதிய...
2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று முதல் அமுல்படுத்தப்படுவதாகவும், அதன்படி பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது. இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் கடந்த நவம்பர் 10ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது....
பொதுமக்களுக்கு கூடுதலான நன்மைகளை வழங்கும் பொருட்டு நேற்றைய தினத்திலிருந்து லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் லொத்தர் சீட்டுக்களின் விலை தொடர்பாக இடம்பெற்ற ஊடவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்விலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், லொத்தர் சீட்டுக்களின் விலை அதிகரிப்புக்கு எதிராக பல்வேறு பிரதேசங்களில் எதிர்ப்பு போராட்டங்கள் இடம்பெற்று...
2009ஆம் ஆண்டு இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது கணவரை மீட்டுத் தாருங்கள் என புவனேந்திரராசா இராசேஸ்வரி என்ற குடும்பத் தலைவி கோரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தினரின் அறிவிப்புக்கேற்ப சரணடைந்த தனது கணவனை மனநோயாளியாக்கி காணாமல் போகச் செய்துள்ளனர் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கிளிநொச்சி – கல்லாறு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதான அருணாச்சலம்...
வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம்முறைப்பாடுகள், யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி கந்தையா தியாகராஜா, சனிக்கிழமை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ககையில், நெல்லியடி,...
“கேப்பாப்புலவுக்கு வருகை தரும் ஜனாதிபதியிடம் இராணுவ முகாம்களை அகற்றி கேப்பாப்புலவு கிராமத்தினை முழுமையாக விடுவிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்துவோம்” என கேப்பாப்புலவு மக்கள் தெரிவிக்கின்றனர். “இடம்பெயர்ந்த போது, இராணுவத்தினர் எமது கிராமத்தினை முழுமையாகக் கைப்பற்றி இராணுவ முகாம்களை எமது பூர்வீக நிலத்தில் அமைத்தனர். எம்மை நலன்புரி நிலையங்களில் இருந்து அழைத்து வந்த இராணுவத்தினர், 2012ஆம் ஆண்டில்...
“மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தங்கியிருந்த அரசாங்க உத்தியோகபூர்வ இல்லத்தை எனக்கு வழங்குவதாக வெளிவரும் செய்தி தொடர்பில், எனக்கு எதுவும் தெரியாது” என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். மறைந்த முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்கவின் இல்லம், எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு வழங்கப்படவுள்ளதாக வெளிவந்த செய்தி தொடர்பில்...
உத்தேச புதிய அரசியலமைப்பு வரைபில் நாட்டுக்குத் தீமையான எந்தவொரு அம்சமும் உள்ளடக்கப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அஸ்கிரிய பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரிடம் தெரிவித்துள்ளார். இது எந்தவகையிலும் நாட்டைத் துண்டாடும் ஆவணமல்ல என்றும் தேரரிடம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உறுதியளித்தார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்புக்கு எதிராக சிலர் எத்தகைய கருத்துக்களை முன்வைத்தபோதும்...
கடந்த வாரம் பிரித்தானியாவில் தமிழர் தகவல் மையத்தினால் நடாத்தப்பட்ட ‘புலம் பெயர்வாழ் தமிழர்’ மாநாட்டில் ஆற்றிய உரையின் தமிழாக்கம் டயஸ்போறா’ (Diaspora) என்ற சொற்பதம் கிரேக்க மொழியில் புலம் பெயர்வாழ் மக்களை குறிப்பிடுகிறது. இச் சொற்பதம், சிதறல் என பொருள்படுகிறது. இச் சொற்பதத்தைஅழமாக ஆராயுமிடத்து, தாயாக பூமியிலிருந்து சிதறியவர்களென கூறுகிறது. இவ் அடிப்படையில், இலங்கைதீவில் தமது...
முத்தையன்கட்டுக்குளத்தை நம்பி விவசாயத்தை மேற்கொள்ளும் 1000 பேருக்கு வரட்சி நிவாரணமாக வடமாகாண விவசாய அமைச்சு நேற்று சனிக்கிழமை (31.12.2016) உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளது. ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு உணவுப் பொதிகளை வழங்கி வைத்துள்ளார். முத்தையன்கட்டுக் குளத்தின்கீழ் பயிரிடப்படும் நிலப்பரப்பின் அளவை 6000...
2017ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடமைப்பு, ஊர்காவற்றுறை மற்றும் காரைநகருக்கிடையிலான பாலம் அமைப்பு என்பன முக்கியமானதாகுமென யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில் செயற்படுத்தப்பட்ட திட்டங்கள், புதுவருடத்தில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அவற்றிற்கான நிதி பங்களிப்பு என்பன குறித்து விளக்கமளிக்கும் வகையில் யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற...
யாழ்.மாநகரசபை தற்காலிக சுகாதார பணியாளர்களை நிரந்தரமாக்கும் விடயத்தில் பிரச்சனைகள் எதுவும் இல்லை என தெரிவித்துள்ள மாகாணசபை உறுப்பினரும், உள்ளூராட்சி அமைச்சு விடயங்களை கையாளும் அங்கீகாரமளிக்கப்பட்ட உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வர்த்தக நிலையங்களின் கழிவுகள் மற்றும் விலங்கு கழிவுகளை அகற்றும் பணியை தனியாருக்கு வழங்குவதிலும் எதுவித ஆட்சேபனையும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மாநகரசபையில் தற்காலிகமாக கடமையாற்றும் சுகாதார ஊழியர்களது...
சிங்கள, பௌத்த தீவிரவாதத்தை தூண்டி, தமிழ் மக்களுக்கு எதிரான இனத்துவேசத்தை வளர்த்து, அதனூடாக ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்சவினுடைய இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் எவ்வாறான மாற்று நடவடிக்கை எடுக்கப் போகின்றது...
புதிய ஆண்டிலாவது மைத்திரி – ரணில் அரசு என்னைப் பழிவாங்குவதை நிறுத்தவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். என்னைப் பழிவாங்குவதை நிறுத்திவிட்டு அரிசித் தட்டுப்பாட்டுக்கு சிறந்த தீர்வினை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். அம்பலாங்கொடையில் உள்ள சிறீவர்த்தனாராமய விகாரையில் நேற்று நடைபெற்ற சமய விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,...
எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள திருவாதிரை நிகழ்வுக்கு காங்கேசன் துறைமுகத்தினூடாக சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது. கடந்த மாதம் சிவசேனை அமைப்பினால் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரேயூடாக வடக்கின் காங்கேசன் துறைமுகத்திலிருந்து சிதம்பரத்திற்கு கப்பல் மூலம் செல்வதற்கு சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. இதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி...
1 கிலோ 800 கிராம் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த மணல்காடு பிரதேசத்தினை சேர்ந்த 26 வயதுடைய இளைஞனை, உப்புவல்லை பகுதியில் வைத்து சனிக்கிழமை (31) கைதுசெய்துள்ளதாக, காங்கேசன்துறை குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். சிவில் உடையில் சென்ற பொலிஸார், சந்தேகிக்கப்பட்ட இளைஞன் ஒருவரிடம் தாமும் கஞ்சா வாங்குவது போல் பாசாங்கு செய்து அவரைக் கைதுசெய்துள்ளனர். மேலதிக விசாரணைகளுக்காக...
சமாதானத்தைத் தொடர்ந்தும் உறுதிப்படுத்தி அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கத்தின் எதிர்பார்ப்புக்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று வளமான நாட்டு மக்கள் என்ற வகையில் முன்னேறும் அபிலாஷையுடன் 2017ஆம் ஆண்டை வரவேற்க இலங்கை மக்கள் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு பிறந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் பட்டாசு கொழுத்தி மக்கள் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடந்த சில வருடங்களுக்குள் இலங்கை அடைந்துள்ள...
யாழ்ப்பாணம் மற்றும் கற்பிட்டி குடாக்களில் வசிக்கும் மக்களுக்கு கடல் நீரைத் தூய்மைப்படுத்தி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று அமைச்சர் ரவூவ் ஹக்கீம் தெரிவித்துள்ளார். பொது மக்களுக்கான தூய குடிநீரை வழங்கும் செயற்றிட்டம் இந்த வருடம் முன்னெடுக்கப்படும் என்றும் குறிப்பிட்ட அமைச்சர் மழை நீரை தூய்மைப்படுத்தி மக்களுக்கு வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
ஜனநாயகம் மற்றும் ஒழுக்கநெறி மிக்க முன்னேற்றகரமான நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாம் மேலும் ஆற்ற வேண்டிய பாரிய பல பணிகள் நம் முன்பே உண்டு என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது: தற்போதைய நல்லாட்சி...
Loading posts...
All posts loaded
No more posts
