Ad Widget

யாழ். பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக 26 முறைப்பாடுகள்

வடமாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக, கடந்த வருடம் 26 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இம்முறைப்பாடுகள், யாழ். மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி கந்தையா தியாகராஜா, சனிக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்ககையில்,

நெல்லியடி, அச்சுவேலி, யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, மானிப்பாய், வவுனியா, தெல்லிப்பழை, மல்லாவி, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, கிளிநொச்சி, கொடிகாமம், மாங்குளம், புதுக்குடியிருப்பு, முள்ளியவளை, காங்கேசன்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக இம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதியில், பொதுமக்கள் ஒரு சிலர், தமது பிரச்சினைகளை பற்றி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் மேற்கொண்டுள்ளனர்.

இருந்த போதும், எந்த விதமான நடவடிக்கைகளும் பொலிஸ் நிலையத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டிலேயெ பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக இம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பில் அவ் பொலிஸ் பரிவுக்குட்பட்ட பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு, அவற்றில் 20 முறைப்பாடுகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

“தமது முறைப்பாடுகள் தொடர்பில், பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாயின், அது தொடர்பாக பொதுமக்கள் நேரிலோ,அல்லது கடிதம் மூலமாகவோ யாழ். கச்சேரியில் அமைந்துள்ள வடமாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு அலுவலகத்தில் அறிவிக்கமுடியும்.

இதன் மூலம், உரிய பொலிஸ் நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் குறைவாகவுள்ளது. இது தொடர்பில், தற்போது பிரதேச செயலக மட்டத்தில், கிராமசேவையாளர் பிரிவுகளில், விழிப்புணர்வு நடவடிக்கை, கூட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன” என அவர் மேலும் கூறினார்.

Related Posts