அத்தியாவசியப் பொருட்களின் விலைகளில் மாற்றம்!

2017ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் நேற்று முதல் அமுல்படுத்தப்படுவதாகவும், அதன்படி பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் கடந்த நவம்பர் 10ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் இவ்வருடத்துக்கான வரவு செலவு திட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய உள்நாட்டில் உற்பத்திசெய்யப்படும் பால்மாவின் விலை 295ரூபாவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதெனவும், சமையல் எரிவாயுவின் விலை 25 ரூபாவாலும், மண்ணெண்ணையின் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 2 ரூபாவாலும் நெத்தலி கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளன. உருளைக்கிழங்கு கிலோ ஒன்றின் விலை 5 ரூபாவாலும், பருப்பு கிலோ ஒன்றின் விலை 10 ரூபாவாலும், பயறு 15 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருமான வரியின் சதவீதத்திலும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Related Posts