Ad Widget

சிங்கள, பௌத்த தீவிரவாதத்தை தூண்டி, ஆட்சி மாற்றத்தை கொண்டுவர மஹிந்த முயற்சி

சிங்கள, பௌத்த தீவிரவாதத்தை தூண்டி, தமிழ் மக்களுக்கு எதிரான இனத்துவேசத்தை வளர்த்து, அதனூடாக ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவினுடைய இவ்வாறான நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் எவ்வாறான மாற்று நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பது கேள்வியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

தற்பொழுதைய அரசாங்கத்தைக் கவிழ்த்து, தான் மீண்டும் ஜனாதிபதியாக வர வேண்டும் என்றும் அல்லது தனது கட்சியைச் சேர்ந்தவர்கள் வர வேண்டும் என்ற தேவை மஹிந்த ராஜபக்சவிற்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவை மஹிந்த ராஜபக்சவிற்கு உள்ளதாகக் குறிப்பிட்ட சுரேஸ் பிரேசந்திரன்,

அவரது குடும்பத்தின் மீது கொலை முயற்சி மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றியமை, பாரிய அளவிலான ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதன் ஊடாகவே தனது குடும்பத்தை பாதுகாக்க வேண்டும் என்பது இயல்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளை அழித்த மாவீரரன் என்றதொரு தோரணையைக் காட்டி, தங்கள் பக்கத்திலே மக்கள் சக்தி அதிகாரம் உள்ளதென மஹிந்த ராஜபக்ச காட்ட முனைவதன் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றை அச்ச நிலைக்குள் வைத்திருப்பதற்கும் அவர்கள் முயற்சித்து வருவதாகவும் சுரேஸ் பிரேமச் சந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Posts