STARTUP WEEKEND நிகழ்வு கிளிநொச்சியில்

Techstar அமைப்பின் வணிக புத்தாக்குநர்களுக்கான Startup Weekend நிகழ்வு, இலங்கையில் முதன்முறையாக யாழ்ப்பாணத்தில், இவ்வாண்டு ஜூன் மாதம் 24ஆம் திகதி தொடக்கம் 26ஆம் திகதி வரை யாழ்.ரில்கோ விடுதியில் நடாத்தப்பட்டது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இரண்டாவது நிகழ்வு, இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் ஆறாம் திகதி கொழும்பில் இடம்பெற்றது. அடுத்த 3வது நிகழ்வான...

இலங்கையில் வானொலி ஒலிபரப்புக்கு 91 வருடங்கள்

இலங்கையில் வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாகி இன்றுடன் 91 வருடங்கள் பூர்த்தியாகின்றன. 1925ஆம் ஆண்டு டிசெம்பர் 16ஆம் திகதி பிரிட்டன் ஆளுனர் சேர் ஹியூ கிளிபெர்ட் தலைமையில் இலங்கையில் வானொலி ஒலிபரப்பு ஆரம்பமானது. பிரிட்டன் ஏகாதிபத்திய ஆட்சியாளர்களது கட்டுப்பாட்டில் இருந்த காலனித்துவ நாடுகளில் முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட வானொலிச் சேவை இதுவாகும் தொலைத்தொடர்பாடல் திணைக்களத்தின் கீழ் வானொலிச் சேவை...
Ad Widget

எதிர்வரும் மார்ச் மாதம் உள்ளுராட்சி தேர்தல்

எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சித் தேர்தலை நடத்தக்கூடியதாக இருக்கும் என மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழுவின் அறிக்கை அடுத்த 27 ஆம் திகதி கிடைத்ததும் 28 ஆம் திகதி அதனை வர்த்தமானியில் வெளியிட உத்தேசித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று...

கேபிக்கு எதிரான வழக்கு வரும் மார்ச் மாதம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மனாதனை கைதுசெய்ய உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிற்போட்டுள்ளது. அதன்படி குறித்த மனுவை வரும் மார்ச் மாதம் 17ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி விஜித் மல்லேகொட உத்தரவிட்டுள்ளார். மக்கள் விடுதலை...

அரிசி ஒரு கிலோ 60 ரூபாவுக்கு விற்கப்படும்

எதிர்வரும் 2 மாதங்களுக்குள் ஒரு கிலோகிராம் அரிசி 60 ரூபாவிற்கு விற்பனை செய்ய எதிர்பார்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர கூறுகின்றார். அரசின் வாழ்க்கைச் செலவுக் குழு ‍கூட்டத்தின் போது சந்தையில் காணப்படுகின்ற அரிசி விலை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக அவர் கூறுகின்றார். இந்தமுறை உயர் பருவகாலத்தில் தேவையான மழை பெய்யவில்லை என்பதனால் அடுத்த ஆண்டு உணவு...

மக்களிடம் கருத்துக் கோருகிறது போக்குவரத்து அமைச்சு

போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை திருத்தம் சம்பந்தமாக யோசனைகள் மற்றும் கருத்துக்களை முன்வைக்குமாறு சிவில் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடம் போக்குவரத்து அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர் அது தொடர்பிலான கருத்துக்களை எழுத்து மூலமாக வழங்குமாறு அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர கூறினார். செயலாளர், போக்குவரத்து மற்றும் சிவில் விமானப்...

துயிலும் இல்லத்தில் இராணுவ முகாம்: உணர்வுகளை மழுங்கடிக்க வேண்டாமென மக்கள் கோரிக்கை

அம்பாறை கஞ்சிக்குடிச்சாற்றில் தமிழ் மக்களுக்கு சொந்தமான இடத்தில் புதிதாக இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு இராணுவம் முயற்சிப்பதை எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதென கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார். யுத்தத்தில் உயிரிழந்த போராளிகளின் உடல்கள் விதைக்கப்பட்டுள்ள துயிலும் இல்லத்தின் மேல் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சியை தடுத்து நிறுத்துமாறு பிரதேச மக்கள் விடுத்த...

எமில் காந்தனுக்கு திறந்த பிடியாணை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நிதியளிப்பாளராக இருந்த எமில் காந்தனை கைது செய்யுமாறு, கொழும்பு மேல் நீதிமன்றம் திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. ராடா, வழக்கு தொடர்பிலேயே அவருக்கு இவ்வாறு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வீட்டுத்திட்டம் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அடப்பன்குளம் மக்கள் தமக்கு வீட்டுத்திட்டம் வழங்க வேண்டும் என கோரி இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அடப்பன்குளம் அம்மன் கோவில் வளாகத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமான இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் வீட்டுத்திட்டம் கிடைக்காத 20பேர் வரையில் கலந்து கொண்டுள்ளனர். தமது கிராமத்திற்கு வழங்கப்பட்ட...

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய கிளிநொச்சியில் இருவர் கைது

கிளிநொச்சி ஆனந்தபுரம் கிராமத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து வந்த இருவர், ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் மதுபான விற்பனை இடம்பெறுவதால் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக தெரிவித்து, கிராம மக்களால் ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனாதிபதி செயலகத்தால் விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கமைய குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, ஒவ்வொன்றும்...

முன்னாள் போராளிகள் அடுத்தடுத்து மரணம்!!

ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும் புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு, விஷ ஊசி ஏற்றியிருக்கின்றார்கள் என்ற சந்தேகம் தொடர்ந்தும் வலுப்பெற்று வருவதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா அச்சம் வெளியிட்டுள்ளார். புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், காய்ச்சல் காரணமாக...

பாம்பு தீண்டி சிறுவன் உயிரிழப்பு

பாம்புக்கடிக்கு இலக்கான ஆறு வயது சிறுவன் ஒருவன், புதன்கிழமை (14) உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். மயிலியதனை தொண்டைமானாறு பகுதியைச் சேர்ந்த கேதீஸ்வரன் நளநிதி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புதன்கிழமை (14) காலை 8 மணியளவில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென்று மூச்சுவிடுவதற்கு அவதிப்பட்டுள்ளான். இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று போதும், சிறுவன் இடை...

ஒற்றையாட்சி மூலம் ‘சமஷ்டி’ பண்புகளை பெறமுடியாது

ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாதென்றும் அதனை ஏற்றுக்கொள்ள தயாரில்லையென்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சமஷ்டி என்ற சொல்லில் தங்கியிருக்கக் கூடாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் வகையில் மாவை மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார். அத்தோடு, 13ஆவது திருத்தச்...

முல்லைத்தீவில் குதிரையோடியவர் கைது

முல்லைத்தீவு குமுழமுனை மகாவித்தியாலய பரீட்சை நிலையத்தில் இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் பிறிதொரு நபருக்காக பரீட்சை எழுதிய நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வருடம் கணிதபாட பரீட்சையில் தோல்வியுற்ற ஒருவருக்கு பதிலாக பரீட்சை எழுதியவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து உரிய பரீட்சாத்தியையும் கைது...

யாழில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு!

யாழ்ப்பாணம் செம்மணி மயானத்திற்கருகிலும், பருத்தித்துறை குடத்தனை மயானத்திற்கருகிலும் 60 இலட்சம் பெறுமதியான கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணப் பிராந்திய போதைப்பொருள் முறியடிப்புப் பிரிவுக் காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலையடுத்தே குறித்த பிரதேசங்கள் சுற்றிவளைக்கப்பட்டு குறித்த போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. வெளிமாவட்டம் ஒன்றுக்குக் கடத்திச் செல்வதற்காக யாழ்ப்பாணம் செம்மணி மயானத்திற்கருகிலுள்ள குப்பைமேட்டில் குப்பைகள்போன்று 7 கஞ்சாப்...

வடக்கு மாகாணத்தின் தேசிய அடையாளங்களை மக்களின் மீள்பரிசோதனைக்கு விடத் தீர்மானம்!

வடக்கு மாகாணத்தின் தேசிய அடையாளங்களான விலங்கு, பூ, பறவை என்பவற்றை மக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு மீள் பரிசீலனைக் குழுவொன்றை அமைக்க வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபையின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் நேற்று கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபைக் கட்டடத்தில் நடைபெற்றது. குறித்த அமர்வில் ஏற்கனவே வடக்கு மாகாணத்திற்காக...

நாட்டில் தொழில் பற்றாக்குறை இல்லை; தகுதியானவர்கள் பற்றாக்குறை

நாட்டின் புதிய பரம்பரையை தொழில் மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் கூடிய மனித வளமாக கட்டியெழுப்பவதற்கு தேவையான வழிகாட்டல்கள் மற்றும் வளங்களை குறைவின்றி பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். தற்போது நாட்டில் ஏற்பட்டிருப்பது, தொழில் பற்றாக்குறை இல்லை என்றும் தொழில் துறைக்கு அவசியமான தகுதியுள்ளவர்களின் பற்றாக்குறையே என்றும் ஜனாதிபதி கூறினார். ஹிக்கடுவ,...

யாழில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திற்காக நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்து மீளாத்துயிலில் உறங்கிக் கொண்டிருக்கும் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து...

ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து யாழில் குடும்பமொன்று உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்பு

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவு தூபிக்கு முன்னாள் கொக்குவிலை சேர்ந்த குடும்பத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். தமது காணி பிரச்சினைக்கு ஜனாதிபதி தீர்வை பெற்று தரக்கோரியே மேற்படி குடும்பம் இவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி இப் போராட்டத்தில் இளம் தாய், அவரது குழந்தை மற்றும் வயதான...

வட மாகாண சபையில் 2017 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் முன்வைப்பு

வட மாகாண சபைக்கான 2017 ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத் திட்டம் இன்று முதலமைச்சர் சீ.வி. வினேஸ்வரனினால் வாசிக்கப்பட்டது. வட மாகாண சபையில் ஒருங்கிணைந்த கட்டமைப்புக்கூடாக ஐந்து மாவட்டங்களிலும் செயற்படுத்தப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நிதி ஆணைக்குழுவினால் 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய வரவு செலவுத்திட்டத்தினூடாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டு வட...
Loading posts...

All posts loaded

No more posts