வவுனியா பன்றிக்கெய்தகுளம் கிராமத்திலுள்ள கிணற்றில் விழுந்து தாயும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
சதீஷ்வரன் சுதாஜினி (வயது – 30) என்ற தாயும் சதீஷ்வரன் டினோஷன் (வயது – 7) என்ற மகனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் தாய் இன்று (திங்கட்கிழமை) காலை வீட்டிலிருந்து வெளியே சென்றபோது தாயும் மகனும் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்ததாகவும் திரும்பி வந்தபோது இருவரையும் காணவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து அயலவர்களின் உதவியுடன் நடத்தப்பட்ட தேடுதலில் அருகிலுள்ள கிணற்றிலிருந்து இருவரது சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன.
நீதவான் விசாரணைக்காக சடலங்கள் குறித்த பிரதேசத்திலேயே வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.