Ad Widget

அரிசி விலை 20 ரூபாவினால் குறைவு?

சுங்க வரி இல்லாமல் நாட்டுக்கு அரிசி இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினருக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதால், தற்பொழுது காணப்படும் அரிசியின் விலையிலிருந்து 20 ரூபாய் குறைவாக நுகர்வோருக்கு வழங்க முடியும் என நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அரிசி, சுங்க வரி இல்லாமல் இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இறங்குமாதி செய்யப்படும் அரிசி ஜனவரி முதலாம் வாரத்திலிருந்து சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளது.

பெரும்போகத்தின் போது வறட்சி எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் நெல் பயிர்ச்செய்கையை குறைத்துள்ளமை மற்றும் அரிசி வியாபாரிகள் அரிசி தட்டுப்பாடு ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதால், அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்கும் நோக்கிலேயே அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

அதேவேளை சந்தையில் தற்பொழுது அரிசியின் விலை பாரியளவில் உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts