இந்தியாவுடன் திறந்த வான் உடன்பாட்டில் கைச்சாத்திட்டது இலங்கை!

இந்தியாவுடன் திறந்த வான் உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளது இலங்கை. நாசோவில் நடைபெற்ற சிவில் விமானப் பேச்சுக்களில் இந்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த உடன்பாட்டுக்கமைய, இந்தியாவின் ஆறு மெட்றோ விமானநிலையங்களுக்கு இலங்கையினால் கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ளமுடியும். சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூர் ஆகிய விமான நிலையங்களுக்கு கட்டுப்பாடற்ற விமானப் பயணங்களை மேற்கொள்ள...

இலவச கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் ஒழிக்கும் அரசின் முயற்சியை தோற்கடிப்போம்

மாலபே தனியார் வைத்தியக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழக சூழலில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளது. அதில் “இலவச கல்வியையும் இலவச சுகாதாரத்தையும் ஒழிக்கும் அரசின் முயற்சியை தோற்கடிப்போம்”, ” மாலேப திருட்டு கல்விக் கடையை காக்கும் மைத்திரி ரணில் அரசாங்கத்திற்கு எதிராக ஒன்றிணைவோம்” என என பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது.
Ad Widget

காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் விற்பனைக்கு!

காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமானநிலையம் மற்றும் திருகோணமலை எண்ணெக்குதம் போன்ற அரசாங்கச் சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக கூட்டு எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது தொடர்பாக அக்கட்சியின் நடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும தெரிவிக்கையில், விலைமனுக்கோரலின்றி எந்தவிதக் கொடுக்கல் வாங்கல்களும் இடம்பெறாது எனக் கூறியே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது....

தூசுகள், பூச்சிகளுடன் ஜெலி விற்பனையில்!

பாவனைக்குதவாத வகையிலான ஜெலியை விற்பனை செய்த நிறுவனத்திற்கு கால அவகாசத்துடன் தண்டம் விதித்து தீர்ப்பளித்தார் பருத்தித்துறை நீதவான் சிவகுமார். யாழ்ப்பாணத்தில் தூசு, இறந்த நிலையிலுள்ள பூச்சிகள் கலந்த ஜெலிகளை விற்பனை செய்த நிறுவனத்திற்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் பாவனையாளர் அதிகார சபையால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே நேற்றயதினம் நீதவான் தண்டம் விதித்ததுடன் அந்த...

215 குடும்பங்களில் 50 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக நோய்!

வவுனியா வடக்கின் எல்லைக் கிராமங்களின் நிலக்கீழ் நீர் விரைவாக கல்சிய அதிகரிப்புக்குள்ளாகி வருகின்றது. இதனால் போரில் அழிந்தது போக மிகுதியாக ஊர் திரும்பியவர்களை சிறுநீரக நோய் அரிக்கின்றது. உதாரணத்திற்கு வவுனியா வடக்கில் இருக்கும் கற்குளம் கிராமத்தை எடுத்துக்கொள்வோம். நெடுங்கேணி பிரதேச சபைக்கு கீழ் உள்ள கிராமங்களில் கற்குளம் கிராமமும் ஒன்றாகும். தனி கிராம சேவகர் பிரிவாக...

சிறுமியை காணவில்லை!

குரும்பசிட்டி கிழக்கு, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியொருவர் காணாமல் போயுள்ளார் என்று, அவரது பெற்றோரால், தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறுமி, கடந்த 12ஆம் திகதி திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. மகேந்திரன் வினித்தா என்ற மேற்படி சிறுமி, கடந்த 12ஆம் திகதி மாலை வேளையில், வீட்டில் இருந்த போதே,...

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம்

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம்...

பொருத்து வீட்டுத்திட்டத்தை எதிர்த்து போராட்டம்

பொருத்து வீட்டுத்திட்டத்துக்குகு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடைய நிதிப்பங்களிப்புடன் நிரந்தர வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் 13,000...

இலங்கை அகதிகள் 18 பேர் நாடு திரும்பினர்

இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 18 பேர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர். 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே நாடு திரும்பியுள்ளனர்.

இளைஞர் பாராளுமன்ற தேர்தல் 18ம் திகதி

நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தல் எதிர்வரும் 18ம் திகதி இடம்பெற உள்ளது. காலை 7.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நாடு பூராகவும் 661 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தெரிவிக்கின்றது. தேர்தலுக்காக 916 இளைஞர் யுவதிகள் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பதுடன், வாக்களிப்பதற்காக 340,000 வாக்காளர்கள்...

யாழ். பல்கலை மாணவர்கள் படுகொலை: பொலிஸாரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி...

கொழும்பு சொகுசு பேருந்து மர்ம நபர்களால் தீக்கிரை

கொழும்பு போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் சொகுசு பேருந்தொன்று இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. திருகோணமலை சிவன் கோயிலடியில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பேருந்தே இவ்வாறு மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் நகரசபை தீயணைப்பு பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். எனினும்...

ஜனாதிபதி மைத்திரிக்கு உத்தியோக பூர்வ கடிதம் எழுதி சர்ச்சையில் சிக்கினார் சசிகலா

கச்சதீவு திருவிழாவில் அதிக மீனவர்கள் பங்கேற்க அனுமதிக்குமாறு தமிழகத் தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழக அரசின் சார்பில் உத்தியோகபூர்வ கடிதம் எழுதியமையால் சர்ச்சைக்குள் சிக்கியுள்ளார். இந்திய மத்திய அமைச்சர் பொன். இராதா கிருஷ்ணன் மற்றும் சசிகலா ஆகியோர் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் அதிக...

5000 ரூபா தொடர்பில் வெளியான தகவல் உண்மையல்ல!

இலங்கையிலுள்ள 5000 ரூபா நாணயத் தாள்களை இந்தியாவைப் போன்று செல்லுபடியற்றதாக ஆக்கப் போவதாக தான் கூறவில்லையென நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மறுத்துரைத்தார். நேற்று நிதி அமைச்சில் இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறினார். கடந்த காலத்தில் காணப்பட்ட எதிர்க் கட்சியின் சில தவறான நிதி முன்னெடுப்புக்கள் பற்றியே நான் விளக்கமளிக்க...

அடப்பன்குளம் மக்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது

வீட்டுத்திட்டத்தில் தாம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வவுனியா அடப்பன்குளம் கிராம மக்கள் முன்னெடுத்துவந்த உண்ணாவிரத போராட்டம், நேற்று (வியாழக்கிழமை) இரவுடன் கைவிடப்பட்டுள்ளது. செட்டிகுளம் பிரதேச செயலாளருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் தொடர்புகொண்டு தாம் வீடுகளை பெற்றுத்தருவதாக வழங்;கிய வாக்குறுதியினை அடுத்தே ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது....

முல்லைத்தீவில் பெரும்பான்மையை இழக்கும் தமிழ் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கூடிய விரைவில் தமிழ் மக்கள் சிறுபான்மை இனமாக மாறும் நிலை ஏற்படும் என வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களை சிறுபான்மையாக்குவதற்கான அடித்தளங்கள் இடப்பட்டு வருகின்றன. மக்களிருக்கும் நிலங்களை...

ஓமந்தை சோதனைச் சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம்

பொது மக்களுக்குச் சொந்தமான ஓமந்தை சோதனைச் சாவடி காணியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். குறித்த காணிக்கு மாற்றீடாக வேறு 6 ஏக்கர் காணியை இராணுவத்தினருக்கு வழங்கவும் மாவட்ட அரசாங்க அதிபர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று ஓமந்தைச்...

யாழ்ப்பாணத்தில் எட்டாவது தடவையாக மாபெரும் வர்த்தகக் கண்காட்சி!

எட்டாவது தடவையாக யாழ் மாநகரசபை மைதானத்தில் எதிர்வரும் ஜனவரி 27தொடக்கம் 29 வரை இடம்பெறும் வர்த்தகக் கண்காட்சியில் க.பொ.த சாதாரண, உயர்தர மாணவர்கள் பயன்பெறும் விதத்தில் “கல்வி யாழ்ப்பாணம் 2017” என்ற பெயரில் உயர்கல்வி தொழில் கண்காட்சியொன்றும் இடம்பெறவுள்ளது. இந்தக் கண்காட்சியில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், கல்வி நிலையங்கள், கணனி கற்கை நிலையங்கள், ஹோட்டல் நிர்வாகமும் உல்லாசப்...

யாழில் இருந்து சிதம்பரத்திற்கு கப்பல் சேவை!

திருவாதிரை திருவிழாவுக்குச் செல்வதற்கு சைவர்களுக்காகச் யாழில் இருந்து சிதம்பரத்துக்குக் கப்பல் சேவை நடாத்த இலங்கை இந்திய அரசுகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஈழம் சிவசேனை அமைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள செய்திக்குறிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புத்தர்கள் வழிபாட்டுப் பயணமாகக் கயா செல்ல அரசு வசதிகள் செய்கிறது. கிறிஸ்தவர்கள்...

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர்கள் வடக்கு மாகாணசபையில்!

வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேக்கு ஆயுதப் பயிற்சி வழங்கியவர்கள் மாகாணசபையில் உள்ளனர் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன் வடக்கு மாகாணசபையின் தீர்மானங்களைக் குப்பைத்தொட்டிக்குள் வீசுமாறு அண்மையில் நீதியரசர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார். வெகு விரைவில் அவரே குப்பைத் தொட்டிக்குள் வீசப்படுவார் எனவும் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் 2017ஆம்...
Loading posts...

All posts loaded

No more posts