புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில் எதிர்கால அரசியல் திட்டமிடல்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பாராளுமன்றஉறுப்பினர் சுமந்திரன் ஆகியோருடையபெயரைக் குறிப்பிட்டு இவ்விருவரும் அரசியலமைப்பை உருவாக்கும் பிரதான வழிப்படுத்துதல் குழுவிலிருந்து இராஜனாமா செய்யவேண்டுமென கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களே அறிக்கைகளை வெளியிடுவது அவசரப்படும் காரியமாகும்.
அது மாத்திரமல்ல அது புத்திசாலித்தனமான விடயமாகவும் இருக்கமுடியாது. அவ்வாறு நடக்குமாயின் ராஜதந்திர ரீதியான போக்குகளை எமக்கெதிராக மாற்றிக்கொள்ளும் நடவடிக்கையாகவும் இனவாதிகளுக்கு தீனிபோடும் காரியமாகவும் அமைந்துவிடும். நாம் தெளிவாகச் சிந்தித்து முடிவெடுக்கவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளசிலர் தன்னிச்சையாக இரா.சம்பந்தனும் சுமந்திரனும் பாராளுமன்ற வழிப்படுத்துதல் குழவிலிருந்து வெளியேறவேண்டுமென பத்திரிகைகளுடாக அறிக்கைகளைn வளியிட்டு வருகின்றார்கள். இதனை பத்திரிகைச் செய்தியாக்குவதை விட தழிம்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் பேசுவதே பொருத்தமாகும்.
தற்பொழுது தான் 6 உப குழுக்களின் அறிக்கைகள் பாராளுமன்றத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளன. இவற்றின் அறிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு அதன் பின் வழிகாட்டல் குழுவினாலும் இடைக்கால அறிக்கையொன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென்ற முனைப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதி,பிரதமர் உட்பட்ட தலைமைகளுடன் விவாதிக்க வேண்டிய தேவையுள்ளது. உப குழுக்கள் ஏலவே 44 தடவைகள் சந்தித்துகலந்துரையாடியுள்ளன. இதில் இணக்கங்கள் காணப்பட்டவிடயங்களும் உள்ளன,அத்துடன் காணப்படாதவிடயங்களும் உள்ளன.
இதுதவிரவழிகாட்டல் குழுவில்21 எம்.பி.க்கள் உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் நியமிக்கப்பட்ட நிபுணர்களும் இதில் உள்ளடங்கியிருக்கின்றார்கள். இக்குழுவில் இனங்காணப்பட்ட அல்லது இனங்காணப்படாத அல்லது பேசப்பட்ட விடயங்களை வெளியில் தெரிப்பதில்லையென அனைத்துதரப்பினரும் உடன்பாடுகண்டிருந்தோம்.
இதை மீறிதென்னிலங்கையில் உள்ள சில கட்சிகள் உண்மைக்குமாறான விடயங்களை பத்திரிகைகளுக்கு தெரிவித்து உண்மைக்குமாறாகவும் விசமத்தனமாகவும் செய்திகளை வெளியிட்டுவருகின்றார்கள். அரசியல் தீர்வு சம்பந்தமாக ஜனாதிபதியும் பிரதமரும் பௌத்தகுருமார்களுடனும் மஹாநாயக்கர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றார்கள்.
அதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இனப்பிரச்சினைக்கான தீர்வினைப் பெறுவதற்காக முன்வைத்திருக்கின்ற தீர்வு திட்டத்தில் எதை ஏற்பதுஎதை ஏற்க கூடாது என்ற விடயம் சம்பந்தமாககட்சிகளுடன் பேசுவதற்காகநிகழ்ச்சிநிரல் ஒன்றைத்தயாரித்துள்ளது.
இது விடயம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் பெறும் கட்சிகளின் சமதலைமைகளுடனும் பாராளுமன்றஉறுப்பினர்களுடனும் உரையாடி வந்துள்ளோம், உரையாடவும் இருக்கின்றோம். சர்வதேசசமூகம் என்றவகையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களும் ராஜதந்திரிகளுடைய அக்கறைகளும் இனப்பிரச்சினைக்கான தீர்வைக்காண்பதில் அக்கறை செலுத்திவருகின்றன.
இந்நிலையில் நாங்களாவே பாராளுமன்ற வழிநடத்தல் குழவிலிருந்து வெளியேறுவது என்பது புத்திசாலித்தனமான காரியமாகவோ அரசியல் சாணக்கியமாகவோ இருக்கமுடியாது.தீர்வுத் திட்டத்தை நாங்களாகவே முறித்துக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகியநாம் கவனமாக இருக்கின்றது.
அடுத்த விடயமாக சர்வதேசசமூகத்தின் தலையீடுகள் தொடர்ச்சியாக இருந்துவருகின்றநிலையில் எங்களுக்கும் சர்வதேசசமூகத்திற்கும் இடையிலானதொடர்பாடல்களும் தொடர்ந்துபேணப்படுகின்றநிலையில் அரசியல் தீர்வுதொடர்பில் எங்களால் முன்வைக்கப்படுகின்ற விடயங்களும் நாங்கள் கொள்ளுகின்ற அபிப்பிராயங்களும் ராஜதந்திர ரீதியாக கொண்டு செல்லப்பட வேண்டிய சந்தர்ப்பம் தற்பொழுது வந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதையும் கவனத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கின்றது. இதை முறித்துக்கொள்வது என்பது தவறான செயற்பாடாகும். அரசியல் தீர்வுகாணப்பட வேண்டிய நடவடிக்கைகளை இனவாதமாகவும் முரண்பாடாகவும் பார்க்கின்ற ராஜபக்ஷவும் அவருடையகுழுவினரும் தங்களுடைய ஊழல்களையும் குடும்ப ஆட்சியையும் மறைப்பதற்காக தற்பொழுது இனவாதமாக செயற்பட்டுவருகின்றார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு மக்கள் தந்த ஆதரவை இல்லாமல் ஆக்குவதற்காக அதனுடைய தலைவர்கள் மீதுசேறுபூசும் நடடிவக்கைகளை மேற்கொண்டுவருவதை நாம் காணுகின்றோம். சிங்கள மக்கள் மத்தியில் இவர்கள் மிகக் கொடூரமான இனவாதங்களைகக்கி தமிழ் மக்களுக்கு கிடைக்கிவிருக்கின்ற தீர்வை நாசமாக்கும் குழுவினராகவே இயங்கி வருகின்றார்கள் என்பதை நாம் அறியாமல் இல்லை.
இக்குழுவினருடைய செயற்பாடுகள் அனைத்தும் தமது ஊழல்களையும் அத்து மீறல்களையும் மறைப்பதற்காகவே முன்னெடுக்கப்படுகின்றன. புதிய ஆட்சி ஒன்றை கொண்டு வருவோமென கங்கணம் கட்டுவதற்கு காரணம்,தம்மை ஸ்திரப்படுத்து வதற்கேயாகும்.
எனவே எமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புக்களையோ இராஜதந்திர சந்தர்ப்பங்களையோ இழந்துவிடாமல் சாதூரியமாகவும் சாணக்கியமாகவும் நடக்க வேண்டிய காலத்தில் நாம் இருக்கின்றோம் என்பதைஎல்லோம் உணர்ந்து கொள்ளவேண்டும். அடையவேண்டிய இலக்கை அடையாமல் தமிழத் தேசியக் கூட்டமைப்பு வழிப்படுத்துதல் குழுவிலிருந்து வெளியேற வேண்டுமென கோருவது புத்திசாலித்தனமான நடவடிக்கையல்ல என்பதனை கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் என்றார்.