வறட்சி காலநிலை: மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!

வறட்சி காலநிலையின் காரணமாக முக்கிய நீர்த்தேக்கங்களில் நீரின் அளவு வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்தும் தேவையை மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் மின்சாரத்தை சிக்கமான பயன்படுத்தினால் நாளாந்தம் 100 மெகாவோட்ஸ் மின்சாரத்தை சேமிக்க முடியும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த வருடத்தின் மே, ஜூன் மாதத்தில் போதுமானவளவு...

பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல்

2016 – 2017ம் ஆண்டு கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான கைநூல் அடுத்த மாத முதற்பகுதியில் வெளியிடப்படவுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவிக்கையில்: கடந்த வருடங்களிலும் பார்க்க தெளிவான வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக பிரவேசத்திற்கான கைநூலை இணையத்தளத்திலும் பார்வையிட முடியும். பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையத்தளத்தின் ஊடாக...
Ad Widget

சங்கத்தானை விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் விசேட வானுார்தி மூலம் அனுப்பி வைப்பு

சாவகச்சேரி சங்கத்தானை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த 10 பேரின் சடலங்கள் விசேட வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்திலிருந்து களுத்துறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சங்கத்தானை பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் வேனில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர். களுத்துறையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற வேனும் யாழ்ப்பாணத்தில் இருந்து...

வடக்கில் 10,000 பொருத்துவீடுகளை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 10 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக மூத்த அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி கொழும்பிலுள்ள ஆங்கிலக ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பொருத்து வீடுகளை அமைத்துதருமாறு மக்கள் கோருவதாகவும் குறித்த அதிகாரி தெரிவித்தார். 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதிப்படுத்திய...

ஆளுநரின் அதிகாரம் குறித்து அரசிற்கு எதுவும் கூறவில்லை : சி.வி.கே

புதிய அரசியலமைப்பு முன்மொழிவுகளில் முதலமைச்சரின் ஆலோசனையின் பிரகாரம் அரச பிரதிநிதியொருவரை ஜனாதிபதி நியமிக்க முடியும் என பரிந்துரை செய்துள்ளதாக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் குறிப்பிட்டுள்ளார். ஆளுநரின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என வட மாகாண சபை பரிந்துரை செய்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் குறித்து வினவிய போதே அவர் இவ்வாறு...

தியாகி லெப்.கேணல்.திலீபனின் நினைவுத் தூபியில் சுவரொட்டிகள்!

நல்லூரில் அமைந்துள்ள தியாகி லெப்.கேணல்.திலீபன் நினைவுத் தூபியை சூழ சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுளதாக மக்கள் கவலை வெளியுட்டுள்ளனர். இது தொடர்பில் பொது மக்கள் தெரிவிக்கையில் தியாகி லெப்.கேணல். திலீபனின் நினைவிடத்தில் குப்பைகளும் சுவரொட்டிகளும் குவிந்து கிடப்பதாகவும், குறிப்பாக மக்கள் விடுதலை முன்னணியின் பெயர் குறிப்பிடப்பட்டு “புல்மோட்டையில் கனிய வளத்தையும், கடஹ கஷா நிலக்கரி சுரங்கத்தையும் விற்பதற்கு எதிராக...

கர்நாடக சங்கீதம் பழக விரும்பும் யாழ். மாணவர்களுக்கு அரிய சந்தர்ப்பம்!

கர்நாடக சங்கீதம் மற்றும் நடனம் கற்க ஆர்வமுள்ள மாணவர்களை யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தைத் தொடர்புகொள்ளுமாறு இந்திய துணைத் தூதுவர் ஏ.நடராஜன் தெரிவித்துள்ளார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் திகதி இந்தியத் துணைத் தூதரகத்தில் குறித்த பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே இந்தியத் துணைத் தூதரகம் ஹிந்தி மொழி மற்றும் யோகாப்...

நாளை முதல் உணவுப் பொதியின் விலை அதிகரிப்பு!

அரிசியின் விலை அதிகரித்துள்ளதால் நாளைமுதல் ஒரு உணவுப் பொதியின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச் சாலைகள் சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின் செயலர், அரிசி வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் உணவுப் பொதியொன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம். இது இலாபமீட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட திட்டமல்ல. அரிசியின் விலை...

வலுகட்டாயமாக பொருத்து வீடுகளை வழங்க வேண்டாம்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களால் விரும்பப்படாத பொருத்து வீடுகளை, வலுகட்டாயமாக அவர்களுக்கு வழங்குவதற்கு, மீள்குடியேற்ற அமைச்சு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது' என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு, 65 ஆயிரம் பொருத்து வீடுகள் வழங்கப்படவுள்ளன. இந்த வீடுகள் தொடர்பில், பல்வேறு தரப்பினரால் எதிர்ப்புக்குரல் எழுப்பப்பட்டு வருகின்றமை தொடர்பில், அவரிடம்...

மரண விசாரணை அதிகாரிகள் இன்மையால் மக்கள் அவதி

முல்லைத்தீவு மாவட்டத்தில் மரண விசாரணை அதிகாரிகளைத் தேடி அலையவேண்டிய நிலை தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 6 பிரதேச செயலகப் பிரிவுகளிலும், 41,855 குடும்பங்களைச் சேர்ந்த 1,33,152 பேர் மீள்குடியேறி 7 வருடங்கள் கடந்துள்ள நிலையில், அரச நிர்வாக கட்டமைப்புக்கள் அனைத்தும் சரியான முறையில் இயங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், மரண...

சாவகச்சேரியில் கோர விபத்து: 10 பேர் பரிதாப மரணம்

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்து இன்று (சனிக்கிழமை) மதியம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதன் போது யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த அரச பேருந்து ஒன்றும் கொழும்பில் இருந்து சென்ற ஹயஸ் ரக வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த...

யாழில் துவிச்சக்கர வண்டி கொள்ளைக்காரர் மூவர் கைது

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் துவிச்சக்கர வண்டிகளை களவாடிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 21 புதிய துவிச்சக்கர வண்டிகள் மீட்க்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

 யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல நாட்களாக துவிச்சக்கரவண்டிகள் களவாடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

 இதனடிப்படையில் கல்வியங்காடு, குருநகர், பாசையூர்...

முன்னாள் போராளிகள் மூவர் விடுதலை

பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருட புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் மூவர் சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போதே இவர்கள் சமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைந்து கொண்ட முன்னாள் போராளிகளின் 200...

1.2 பில்லியன் ரூபா செலவில் யாழில் கலாச்சார மண்டபம்!

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியில் சுமார் 1.2 பில்லியன் ரூபா செலவில் யாழ்ப்பாண நகரில் கலாசார மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இந்திய உதவியுடன், 1.2 பில்லியன் ரூபா செலவில் மூன்று வருடங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கலாசார நிலையத்துக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை மகிந்த ராஜபக்ஷ காலத்தில் கைச்சாத்திடப்பட்டது. யாழ்ப்பாண நூலகத்துக்கு அருகாமையில் யாழ்ப்பாண மாநகர சபைக்கு...

வடமாகாணத்தில் குறித்த திகதியில் ஆசிரிய இடமாற்றம் நிகழும்

வடமாகாண ஆசிரியர்களுக்கான வருடாந்த இடமாற்றம் எதிர்வரும் முதலாம் தவணையிலிருந்து அமுலுக்குவரும் என்று, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மீண்டும் உறுதிபட தெளிவுபடுத்தியுள்ளார். சங்கத்தின் பொதுச் செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பிலேயே, மேற்கண்ட உறுதி வழங்கப்பட்டள்ளது. அந்தச் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, '16.12.2016 திகதி அன்று வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில், இடமாற்றத்துக்காக விண்ணப்பித்த ஆசிரியர்களின்...

சமூக வலைத்தளங்ளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

இலங்கையில் சமூக வலைத்தளங்கள் தொடர்பாக புதிய சட்டங்களை தயாரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் சமூக வலைத்தளங்ளை கட்டுப்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சைபர் குற்றத்தின் கீழ் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான சட்டங்கள் நாட்டில் காணப்படாத நிலையில் புதிய சட்டங்களை உருவாக்கி அதனூடாக நடவடிக்கை...

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சநிலையிலேயே வாழ்கின்றனர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் பெண்களின் பிரதிநிதி கதிர்செல்வம் கருணாநிதி தெரிவித்தார். பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வலுப்படுத்தல், நல்லிணக்க வழிமுறையின் முன்னேற்றப் பாதை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு ரில்கோ ஹோட்டலில்...

வடக்கு சம்பவங்களுக்கு முன்னாள் புலி உறுப்பினர்கள் சம்பந்தமில்லை

வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் இடம்பெற்ற எந்தவொரு அமைதியற்ற செயற்பாடுகளுக்கும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று புனவாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜானக ரத்நாயக்க கூறினார். புனர்வாழ்வு பயிற்சி வெற்றிகரமாக அமைந்ததால் அவர்கள் மீண்டும் ஒருபோதும் மோதலுடன் தொடர்புபட மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். எதிர்வரும் இரண்டு...

முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் விவகாரம் முடிவுக்கு வந்துள்ளது

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் செயலாளர் தொடர்பில் நீடித்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இதற்கமைய கடந்த பேராளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட மன்சூர் ஏ.காதர் கட்சியின் பொதுச் செயலாளராக கடமையாற்றுவார் என்றும் தெரிவித்த ஹக்கீம் இது குறித்து தேர்தல் ஆணைக்குழுவிற்கும் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். ஸ்ரீலங்கா...

இளைஞர்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்துவர்: கெஹலிய ரம்புக்வெல எச்சரிக்கை

நல்லாட்சி அரசாங்கம் ஸ்ரீலங்காவை சர்வதேச போர்த் தலமாக மாற்றிக் கொண்டிருப்பதாக குற்றம் சுமத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி, மீண்டும் ஆயுதங்களைக் கையில் ஏந்தும் நிலைக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றது. நாட்டிற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்ற புதிய அரசியலமைப்பை அவசர அவசரமாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் சமர்பித்து நிறைவேற்றிக் கொள்ள அரசாங்கம்...
Loading posts...

All posts loaded

No more posts