- Tuesday
- August 18th, 2026
2016 ஆம் வருட கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ளன. குறித்த பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற பரீட்சைத் திணைக்களத்தின் இணைய முகவரியில் பார்வையிட முடியும். இதேவேளை, அனைத்து டயலொக் வாடிக்கையாளர்களும் கையடக்க தொலைபேசி மூலம் தமது பெறுபேறுகளை அறிந்து கொள்ள முடியும். exam இடைவெளி intex number 7777 என்ற...
கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது கல்லறை அமைத்தமை தொடர்பாக நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்ட நபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு முரணான வகையில் கல்லறை அமைக்க முற்பட்டர்கள் என்ற குற்றச்சாட்டில் மாவீரர்களது உறவினர்கள், முன்னாள் போராளிகள் ஆகியோருடன் கரைச்சி பிரதேச சபை செயலாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது. இவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட...
வடக்குக் கிழக்கு மக்களின் அபிலாசைகளை அரசாங்கத்திற்கும் சர்வதேசத்திற்கும் அழுத்திக் கூற எதிர்வரும் 21ஆம் நாள் மட்டக்களப்பில் நடைபெறும் எழுக தமிழ் நிகழ்வில் அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களுள் ஒருவரான வசந்தராசா அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையினால் எதிர்வரும் 21ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிகழ்வு தொடர்பாக...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தை கொழும்பில் நடத்துவது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிந்த நிலையில், கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் இக் கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 இற்கு நடைபெறவுள்ளது. புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் உள்ளக விசாரணை பொறிமுறை போன்றன குறித்து அண்மைய நாட்களாக பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு...
கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டிய முன்னாள் போராளிகள் கிளிநொச்சி பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பபட்டுள்ளனர். மாவீரர்களுக்கான பொதுக் கல்லறையொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தொடர்பில், கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.சம்சநாதன் செய்த முறைப்பாட்டிற்கு அமையவே குறித்த பேராளிகளை கிளிநொச்சி பொலிஸார் இன்று விசாரணைக்கு அழைத்திருந்தனர். கிளிநொச்சி...
கடந்த வருடம் இறுதியில் நெடுந்தீவு கடல்பகுதியில் கைதான இந்திய மீனவர்கள் 32 பேரும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கு அமைய, ஊர்காவற்துறை நீதிமன்றினால், இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசெம்பர் காலப்பகுதியில் வெவ்வேறு தினங்களில் 6 விசைப்படகுடன் 32 மீனவர்கள் iது செய்யப்பட்டிருந்தனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மீனவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தின்...
வொக்ஸ்வெகன் நிறுவனத்தின் முதலீடு இன்றி வொக்ஸ்வெகன் வாகனங்களை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்கு 2016ம் ஆண்டு ஆரம்ப பகுதியிலேயே தீர்மானிக்கப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறுகின்றார். 2015ம் ஆண்டு காலப்பகுதியில் வொக்ஸ்வெகன் தொழிற்சாலையை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், சர்வதேச ரீதியாக அந்த தொழிற்சாலை வீழ்ச்சியடைந்து காணப்பட்ட காரணத்தால் இறுதியில் வெஸ்டர்ன் ஒட்டோமொபைள் நிறுவனத்துடன் இணைந்து இந்த...
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட இந்துபுரம் கிராம அலுவலர் பிரிவில் 5.6 கிலோக்கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று மாலை கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், மாங்குளம் பொலிஸ்நிலைய சிறுகுற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இந்துபுரம் பகுதியில் வீடொன்றில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த கேரள...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் மேற்கொள்ளவுள்ள திருத்தப் பணிகள் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. குறித்த திருத்தப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 06 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை விமான நிலையத்தின் ஓடுபாதையின் திருத்தப் பணிகள் மேற் கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக 8...
போர்க்குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது என்ற கருத்தை ஐ.நா. முற்றாக நிராகரித்துள்ளது. யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான விடயங்களுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு நீதி வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளிட்ட பலர் அரசை வலியுறுத்தி...
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், அங்கிருக்கும் ஏனைய கைதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவி வித்தியாவின் படுகொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சுவிஸ்குமார் உள்ளிட்ட சந்தேக நபர்கள் வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தமது ஆதிகத்தினைச் செலுத்தி ஏனைய...
நாவற்குழியில் குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு வீடமைப்புத்திட்டம் அமைத்து கொடுக்கப்படவுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ். மாவட்ட முகாமையாளர் எம்.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2016ம் ஆண்டு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 989 பேருக்கான வீட்டுக் கடன்களை யாழ். மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது. இதன்படி,...
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பூர்வீக நிலங்களைத் துண்டாடுவதற்கு துணைபோகக்கூடாது எனவும், அவ்வாறு துணைபோனால் மீண்டும் போர்ச்சூழல் உருவாகும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தலைப்பிடப்பட்ட குறித்த துண்டுப்பிரசுரங்கள் நேற்றைய தினம் கிளிநொச்சியின் பல பிரதேசங்களில் வீசப்பட்டுள்ளதால் அங்கு ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளதாகத் தெரியவருகின்றது. இதேவேளை, கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொதுக்கல்லறையொன்றை அமைப்பதற்கான...
வடகிழக்கு சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்தி தொடர்பாக கனடாவில் இடம்பெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கு வடகிழக்கில் இருந்து வடமாகாண அமைச்சர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவினர் எதிர்வரும் வாரமளவில் கனடா நாட்டிற்கு பயணமாகவுள்ளனர். 15, 16, 17 ஆம் திகதிகளாக 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டின் ஆராம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்துகொள்ளவுள்ளார். குறித்த...
மாமனிதர் குமார் பொண்ணம்பலத்தின் 17வது நினைவு தினம் நேற்று வியாழக்கிழமை மாலை 5 மணியளவில் த.தே.ம.மு அலுவலகத்தில் நடைபெற்றது. எஸ். இளங்கோ தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும் நினைவுப் பேருரைகளை கட்சியின் மகளிர் அணி தலைவி பத்மினி சிதம்பரநாதன், அரசியல்...
“பொருத்து வீடு வேண்டாம் என்று கூட்டமைப்பு சொன்னால், வேறு வீட்டுத்திட்டத்தை கொண்டு வரவேண்டும்” என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான், தெரிவித்தார். வவுனியா ரம்பவெட்டி கிராமத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் முன்னெடுக்கப்படும் வீட்டுத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, புதன்கிழமை அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்தும் அங்கு...
வட மாகாண முஸ்லிம்கள் கள்ளத்தோணியில் வந்தவர்கள் அல்லர். அவர்கள் இலங்கையர்கள் என, மேல் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் முஜிர்பு ரஹ்மான் தெரிவித்தார். வில்பத்து பிரச்சினை தொடர்பாகத் தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில், முஸ்லிம் பிரதிநிதிகள் கலந்துகொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் இதனைத் தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் அதன்...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கைத்தொழில் பேட்டை தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. அது தொடர்பாக எந்தவொரு குழு அறிக்கையும் வெளியிடப்படவில்லை என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஐம்பதாவது ஆண்டுவிழாவில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். நாட்டின் மரபுரிமைக்கும் கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படக்கூடியவாறோ அரசியலமைப்புக்கு புறம்பான முறையிலோ எந்தவொரு நாட்டுடனோ...
யாழ் மாவட்டத்தில் கோவா அறுவடை தற்போது இடம்பெற்றுவருகிறது. சந்தையிலும் பெருமளில் கோவா விற்பனைக்காக இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். ஒரு கிலோ கோவா 25-30 ரூபாய் வரை யாழ்ப்பாண சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தியாளர்களிடமிருந்து 15-20 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படுவதினால் போதிய வருமானம் கிடைப்பதில்லை என உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு...
அரிசியை கொள்வனவு செய்யும் போது அதன் தரம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை பொது மக்களிடம் கோரியுள்ளது. மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 14,000 கிலோ கிராம் அரிசி, அதிகார சபையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு - 11 மற்றும் கொழும்பு 12 ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக,...
Loading posts...
All posts loaded
No more posts
