Ad Widget

போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள்: அரசின் கருத்திற்கு ஐ.நா. மறுப்பு

போர்க்குற்ற விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டுள்ளது என்ற கருத்தை ஐ.நா. முற்றாக நிராகரித்துள்ளது.

யுத்தத்தின்போது இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதிரான விடயங்களுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை பொறிமுறை ஏற்படுத்தப்பட்டு நீதி வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளிட்ட பலர் அரசை வலியுறுத்தி வரும் நிலையில், குறித்த விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்வாங்குவதில்லை என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக உள்ளதென அமைச்சர் ராஜித சேனாரத்ன அறிவித்திருந்தார்.

அத்துடன், தமது நிலைப்பாட்டை, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஏற்றுக் கொண்டதாகவும் அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையிலேயே ஐ.நா. தரப்பில் அரசின் கருத்து நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசின் இக்கருத்திற்கு தனது டுவிட்டர் பதிவில் மறுப்பு ஐ.நா மனித உரிமை உயர்ஸ்தானிகர் செய்த் அல் ஹுசைன், சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றப் பொறிமுறை ஒன்றினூடாகவே இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதனையே நாம் ஆரம்பம் முதல் வலியுறுத்தி வந்துள்ளோம். எமது இந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts