- Tuesday
- August 18th, 2026
வெளியான, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை மீள் திருத்தத்துக்கான திகதியை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விண்ணப்பத்தாரிகள் தங்களுடைய விண்ணப்பங்களை ஜனவரி மாதம் 23ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டப்ளியு. எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்தார். பாடசாலை பரீட்சார்த்திகள் பாடசாலை அதிபரின் ஊடாகவும், தனிப்பட்ட பரீட்சார்த்திகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பங்கள்...
எதிர்வரும் 9ஆம் திகதி திங்கட்கிழமையன்று அதிகாலை 4 மணிமுதல் காலை 6 மணிவரையிலான 2 மணிநேரத்துக்கு, 119 தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்த வேண்டாமென பொலிஸ் தலைமை அலுவலகம் கடந்த 5ஆம் திகதியன்று அறிவித்திருந்தது. பொலிஸ் அவசர மத்திய நிலையத்தின் குறுகிய இலக்கமான 119 தொலைபேசி வலையமைப்பில் அவ்வப்போது ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் வகையில் அவ்வலையமைப்பில்...
முல்லைத்தீவு மாவட்டத்தை வரட்சியினால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாகப் பிரகடனப்படுத்தி, வரட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடுகள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முல்லைத்தீவு மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் வே.ஆயர்குலன் தெரிவித்தார். மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் குறித்த மீளாய்வு கூட்டம், இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போதே ஆணையாளர் இவ்வாறு...
கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் இரண்டு இளைஞர்கள் இன்றையதினம் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய உபபொலிஸ் பரிசோதகர்கள் நடத்திய தேடுதலின் போது இரு இளைஞர்கள் நுகர்விற்காக கஞ்சா கலந்த மாவாவை கொள்வனவு செய்த போது கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 84 கிராம் கஞ்சா கலந்த மாவாவை...
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இந்திய மீனவர்கள் 06 பேர் இன்று (08) இலங்கை கடற்படையினால் யாழ்ப்பாண நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த இந்திய மீனவர்கள் 06 பேர்களும் யாழ்ப்பாண நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர். ஒரு ட்ரோலர் படகுடன் ஏனைய மீன்பிடி உபகரணங்களுடன் அவர்கள் கைதானதாக கடற்படையினர்...
இன்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது முகநூல் (Facebook) பக்கத்தில் மக்களால் எழுப்பப்பட்ட சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். இதன்படி, யுத்த முடிவுக்கு பின்னர் வடக்கில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் நிறுத்தப்பட்டுவிட்டன, முன்னாள் போராளிகளுக்கு வழங்கப்பட்ட தொழில் கடன்களும் நிறுத்தப்பட்டுவிட்டன, இவற்றை கருத்தில் கொண்டு பொது எதிரணியாக இப் பிரச்சினைக்கு தீர்வு காண என்ன நடவடிக்கைகளை வருங்காலத்தில்...
அம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில் ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் யிசியென் லியேன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற அம்பாந்தோட்டை முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டு...
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதமொன்றில் மிதி பாலகையில் பயணித்த இளைஞர்கள் சிலர் பகிரங்கமாக சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்கள்.புகையிரதத்தில் பயணிக்கும் இவர்கள் கஞ்சாவினை பயன்படுத்தியுள்ளனர்.மேலும் புகையிரதம் நிறுத்தப்படும் இடங்களில் வெளியில் செல்லும் பெண்களிடம் முறையற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளனர்.இதன்போது இவர்களது இந்த செயலை தனியார் தொலைக்காட்சி செய்திப் பிரிவு ஒன்று...
யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்திக்காக 2016 ஆம் ஆண்டு 7,724 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டதில் 99.45 வீதமான நிதி செலவிடப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 2015 ஆம் ஆண்டு, 3623 மில்லியன்...
2016ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் கணிதப் பிரிவில் மூன்று பாடங்களிலும் ஏ தரச் சித்தியெத்தி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட மாணவி சிவதுர்க்கா அண்மையில் மாகோ பிரதேசத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியாகியவராவார். வவுனியா இறம்பைக் குளம் மகளிர் கல்லூரியைச் சேர்ந்த சிவதுர்க்கா சிறந்த பெறுபேற்றை பெறுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று...
வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவத் தளபதி கொப்பாகடுவவின் சிலைக்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த குழாய்கிணறு ஒன்றை சில வருடங்களாக காணவில்லையென வவுனியா நகரசபை செயலாளரான ஆர்.தயாபரனிடம் சமூக நலன்விரும்பி ஒருவரால் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ் விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, கடந்த பல வருடங்களுக்கு முன்பு வவுனியா நகரசபையினால் பொதுமக்கள் பாவனைக்காக வவுனியா நகரின் மத்தியிலுள்ள இராணுவ தளபதி...
இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கி அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் காரியாலயத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...
வடமாகாண சபையும் கனடாவின் மார்க்கம் நகர சபையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர் உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திடவுள்ளன. இவ் ஒப்பந்தமானது எதிர்வரும் 14ஆம் திகதி பொங்கல் தினத்தன்று கைச்சாத்திடப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண சபை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கனடா விஜயம் செய்துள்ளனர். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...
சமஸ்டி முறைமை மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு உள்ளிட்ட விடயங்களைத் தவிர வேறு தீர்வுகளை அரசாங்கம் முன்வைத்தால் அதனை நிராகரிக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள், கூட்டமைப்பின் தலைவரிடம் கூட்டாக இணைந்து வலியுறுத்தியுள்ளன. அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்குச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா....
யாழில் மூளைச்சாவடைந்த நபர் ஒருவருடைய சிறுநீரகங்களை இன்னொரு நபருக்குப் பொருத்துவதற்காக, கொழும்பில் இருந்து வருகை தந்த உடல் உறுப்புக்கள் மாற்று சிகிச்சை நிபுணர் குழுவினரால் சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கொழும்பு தேசிய வைத்திய சாலையில் இருந்து உடல் உறுப்புக்கள் மாற்று அறுவைச் சிகிச்சை நிபுணர் றுவான் திஸ்ஸநாயக்க தலைமையில் வைத்தியர் பிரசாட்...
நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் காரணம் கண்டறியமுடியாத சிறுநீரக நோய் பரவி வருவதாக ஜனாதிபதி செயலணி அறிவித்துள்ளது. நாட்டில் சிறுநீரக நோயாளர்களின் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அதனைத் தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்ற போதிலும் குறித்த சில இடங்களில் இந்நோய்க்கான காரணம் கண்டறியப்படவில்லையெனவும் அச்செயலணி தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் சிறுநீரக...
யாழ்பாண பல்கலைக்கழகத்தின் இவ்வருட பட்டமளிப்பு விழாவில் 2151 மாணவர்கள் பட்டம் பெறவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் முற்பகல் 9.00 மணியளவில் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயெ மேற்கண்டவாறு தெரிவித்தார் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா எதிர்வரும் ஐனவரி 10, 11ம் திகதிகளில் நடைபெறவுள்ளது....
பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காட்டுக்கு செல்லும் இறுதி பஸ் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறைசாலையின் முகாமையாளர் கே.கந்தசாமி தெரிவித்தார். பின்தங்கிய கிராமமான கட்டைக்காடு கிராமத்துக்கு இதுவரை இறுதி பஸ் மாலை 4 மணிக்கு புறப்பட்டது. இதனால், அக்கிராமத்திலிருந்து வெளியிடங்களுக்குச் செல்லும் மக்கள் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர். இதனையடுத்து, பருத்தித்துறையிலிருந்து கட்டைக்காட்டுக்கு செல்லும் இறுதி பஸ் மாலை 6 மணிக்கு நேற்று...
வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து, நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணியற்ற குடும்பங்களுக்கு காணிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில், தாம் பெற்றுக்கொள்ள விரும்பும் அரச காணிகளை அடையாளம் காட்டுமிடத்து, அவற்றைப் பெற்றுக்கொடுப்பது தொடர்பில், பரிசீலனை செய்யப்படும் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
Loading posts...
All posts loaded
No more posts
