மேலைத்தேய ஆடைகளுக்கு விடுமுறை; ஜனாதிபதி உத்தரவு

அரச உயர் அதிகாரிகள், ஐரோப்பிய முறையிலான ஆடைகளை அணிவது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த சுற்றுநிருபத்தை தான் இல்லாது செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், அரச சேவையின் உயர் அதிகாரிகள், இனிமேல் அத்தியாவசிய தேவைகளை விடுத்து, ஏனைய சந்தர்ப்பங்களில் கழுத்துப் பட்டி மற்றும் கோட் உடனான உத்தியோகப்பூர்வ ஆடை அணிய வேண்டியதில்லை...

இடமாற்ற கொள்கையில் தீர்வின்றேல் பணிப்புறக்கணிப்பு

இடமாற்றக் கொள்கை நிறைவேற்றப்பட்ட பின்னரே இடமாற்ற விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் இல்லாவிடின் மீண்டும் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்வோம் என வடமாகாண பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் நேற்று (9) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இந்த அறிவித்தை விடுத்துள்ளனர். வடமாகாண சுகாதார அமைச்சு தமது பணிப்புறக்கணிப்பின்...
Ad Widget

இந்திய பாத யாத்திரிகர்கள் யாழ் வருகை

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இந்திய பாத யாத்திரிகர்கள் நேற்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். குறித்த யாத்திரிகர்கள் டிசம்பர் மாதம் 17ம் திகதி மதுரையிலிருந்து இலங்கைக்கான பயணத்தை ஆரம்பித்திருந்தனர். மாத்தறை விஷ்ணு ஆலயத்தில் இருந்து ஆரம்பித்த யாத்திரை நேற்றைய தினம் காங்கேசன்துறையில் நிறைவடைந்தது. உலக சமாதானத்தையும், இனங்களுக்குகிடையிலான நல்லிணக்கத்தையும் வலியுறுத்தும் வகையில் 87 நாட்களை கொண்ட குறித்த...

வவுனியாவில் காணாமல்போன கிணறு கண்டுபிடிப்பு

வவுனியா நகரின் பிரதான வீதியிலிருந்த குளாய்க்கிணறு இன்று வவுனியா நகரசபையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வவுனியா நகரசபையின் செயலாளர் ஆர். தயாபரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, கடந்த வாரம் வவுனியா நகரின் பிரதான வீதியின் அருகே காணப்பட்ட பொதுக் கிணறு ஒன்று காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று சம்பவ இடத்திற்குச் சென்று நகர சபையின்...

த.தே.கூட்டமைப்பின் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை அம்பாறையில்

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர்களுடனும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த கலந்துரையாடலை விரைவில் அம்பாறையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் கூட்டமைப்பின் பங்களிப்பு குறித்து ஆராய்வதற்காக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற...

சம்பந்தன், அமெரிக்க தூதுவருக்கிடையில் சந்திப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷாப் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. ஸ்ரீலங்காவில் அனைத்து மக்களின் மகிழ்ச்சிக்கும் நன்மைக்குமான தனது சமாதானம் மற்றும் நல்லிணக்க எண்ணக் கருக்களை இதன்போது சம்பந்தன் பகிர்ந்துகொண்டதாக அமெரிக்கத் தூதுவர்...

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு 2300 பேர் உள்வாங்கல்

கடந்த 2015 ம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய 2305 மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், இந்த வருடம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களின் அனுமதிக்காக இதுவரை 1118 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். ஆனால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்ட...

முல்லைத்தீவில் வரலாற்றுச்சின்னங்கள் அழிந்து போகும்நிலையில்!

ஒல்லாந்தரினால் முல்லைத்தீவினை ஆட்சி செய்த காலத்தில் மாவீரன் பண்டாரவன்னியனுக்கும் ஒல்லாந்தருக்குமிடையில் ஏற்பட்ட நேரடி மோதலின் போது 1803 ஆம் ஆண்டு பண்டாரவன்னியன் முல்லைத்தீவு நகரத்தையும் ஒல்லாந்தர் கோட்டையையும் கைப்பற்றி தனது இராட்சியத்தினை முல்லை நகரில் (தற்போதைய மாவட்ட செயலக வளாகம்) ஒல்லாந்தர் கோட்டையை தனது கோட்டையாக ஆட்சி செய்து வந்துள்ளார். போருக்கு முன்னர் விடுதலைப்புலிகளின் காலத்தில்...

திருகோணமலை மாவட்டத்திலுள்ள புத்தர் சிலைகளை பாதுகாக்க விசேட நடவடிக்கை

திருகோணமலைப் பிரதேசத்திலுள்ள புத்தர் சிலைகளின் பாதுகாப்பு தொடர்பில் விசேட நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பிரணாந்துவின் தåலைமையில் நேற்று (08) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் அப்பிரதேசத்திலுள்ள விகாரைகளின் பிக்குகளும் கலந்துகொண்டுள்ளனர். திட்டமிட்ட குழுவொன்றினால், திருகோணமலை மாவட்டத்தின் 4 இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர்...

தமிழ் பேசும் மக்களுக்கு புதிய தொலைக்காட்சி அலைவரிசை

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு, நாட்டின் 25 வீத தமிழ் பேசும் மக்களுக்காக புதிய தொலைக்காட்சி அலைவரிசை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. தேசிய தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் 3ஆவது அலைவரிசையாக ஆரம்பிக்கப்படவுள்ள குறித்த அலைவரிசை ”நல்லிணக்க அலைவரிசை” என்ற பெயரில் தனது சேவையை வழங்கவுள்ளது. இந்த அலைவரிசைக்காக நல்லிணக்க அமைச்சர்...

எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழப்பு

கடந்த வருடத்தில் எயிட்ஸ் நோயாளர் தொகை அதிகரித்துள்ளதாகவும் வருட இறுதிவரை எச்.ஐ.வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய பாலியல் நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் இறுதி வரையில் எச் .ஐ. வி நோய்த் தொற்றுக்குள்ளாகி 44 பேர் உயிரிழந்துள்ளதாக...

ஆட்சியை கவிழ்க்க எவராலும் முடியாது, புதிய அரசும் தேவையில்லை ; ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் – சர்வதேச அழுத்தங்களுக்கு முகங்கொடுக்க முடியாமல் ஆட்சியை விட்டோடிய மகிந்த நல்லாட்சி அரசின் செயற்பாடுகளை விமர்சிப்பது வேடிக்கையான செயலாகும் எனவும் வெட்டிப்பேச்சுக்களுக்கு அரசாங்கம் அச்சமடையாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்று இரண்டு வருடங்கள் நிறைவை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று மாலை நடைபெற்றது....

பற்றுச்சீட்டு இல்லாத பயணிகளுக்கு அபராதம் அதிகரிப்பு

பற்றுச்சீட்டொன்றைப் பெற்றுக்கொள்ளாத நிலையில், தனியார் பஸ்களில் தூரப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகளுக்கு, அபராதத் தொகையொன்றை விதிக்க, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வாறு, பற்றுச்சீட்டின்றிப் பயணிக்கும் பயணியொருவருக்கு, ஆயிரம் ரூபாய் மற்றும் பற்றுச்சீட்டுக் கட்டணத்தின் இருமடங்கையும் செலுத்தக்கூடிய வகையில், இந்த அபராதம் விதிக்கப்படும் என்றும் அவ்வாணைக்குழு தெரிவித்தது. அதற்கு ஏற்றவகையிலான சட்டத்திருத்தங்களை, தற்போது தயாரித்து...

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 285 கைதிகள் விடுதலை

ஜனாதிபதியின் இரண்டாம் ஆண்டு பதவிக்கால பூர்த்தியை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், நாடளாவிய ரீதியில் 285 கைதிகள், நேற்று காலை,விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். இதன் அடிப்படையில் யாழ் சிறைச்சாலையில் கைதிகள் இருவர் பொது மன்னிப்பின் கீழ் நேற்று காலை யாழ் சிறைச்சாலை...

தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளது!

ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் அரசியல் தீர்வை வழங்குவதில் தற்போதைய அரசாங்கமும் தோல்வியடைந்துள்ளதாக, ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரமல்லாது தமிழ் மக்களும் கூட ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரத்தை பரவலாக்கும் தீர்விற்கு விருப்பத்துடன் உள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே...

80 மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தம்!

இம்முறை கஸ்டப் பிரதேசங்களில் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு தோற்றிய 80 மாணவர்களது பெறுபேறுகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் திணைக்களத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார சுட்டிக்காட்டியுள்ளார். கோட்டா முறையில் கஸ்டப் பகுதி பாடசாலை மாணவர்களுக்கு பல்கலைக்கழகத்துக்கான அனுமதி வழங்கப்படுகின்றது. இந்தநிலையில் இந்த சிறப்புச் சலுகையைப்...

ஜனாதிபதி பதவியேற்று இன்றுடன் இரண்டு வருடம் நிறைவு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் (08) இரண்டு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நாடுமுழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமய நிகழ்ச்சிகள் மற்றும் இன்று மாலை பி.எம்.ஐ.சி.எச். இல் ஜனாதிபதியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த விசேட கலந்துரையாடல் என்பனவும் இடம்பெறவுள்ளன. இதில், வெளிநாட்டுப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் 2043பேர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பம்!

யாழ் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 43 பேர் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பத்துள்ளார்கள் என தெரிவித்த யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன், பொருத்துவீட்டை பெற்றுக்கொள்ளவிட்டால் கல் வீடு வழங்கப்படாது என பொதுமக்களிடம் பரப்பப்படும் கருத்துக்கள் தவறானவை எனவும் தெரிவித்துள்ளார். மீள் குடியேற்ற அமைச்சினால் வடக்கில் பொருத்து வீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குறித்த பொருத்துவீட்டு திட்டத்தில்...

சட்டமா அதிபர்மீது குற்றம் சுமத்தியுள்ளது குற்றப் புலனாய்வுப் பிரிவு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர் கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட வழக்குடன் தொடர்புடைய முக்கிய இரு குற்றவாளிகளைக் கைதுசெய்ய சட்டமா அதிபர் அனுமதி மறுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. சுவிற்சர்லாந்துக்குத் தப்பிச் சென்ற இந்தப் படுகொலையின் இரண்டு முக்கிய சந்தேக நபர்களையும் கைது செய்து,...

வாள்வெட்டு சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான விஷேட பொலிஸ் குழுவினால் வாள் வெட்டு குழுச் சேரந்த சந்தேகநபர்கள் ஐவர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
Loading posts...

All posts loaded

No more posts