- Tuesday
- August 18th, 2026
தென்னிந்திய பிரபல நடிகர் சூரியாவின் அகரம் அறக்கட்டளை நிலையம் தனது பணிகளை இலங்கையிலும் விஸ்தரிக்கவுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தனது சேவையைத் தொடர்ந்து வரும் குறித்த நிறுவனத்தின் வருடாந்த ஒன்றுகூடல் தமிழ் நாட்டில் நடைபெற்றது. இந்த ஒன்றுகூடலுக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது இந்த அறக்கட்டளை அமைப்பின் பணிகளை இலங்கையிலும்...
சுன்னாகம் நிலத்தடி நீர் அருந்தக்கூடியதா? இல்லையா? என்பது தொடர்பாக இதுவரை முறையான அறிக்கையெதுவும் சமர்ப்பிக்காததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் நிலத்தடி நீர் பிரச்சனை தொடர்பான வழக்கு விசாரணை நேற்றையதினம் நீதிமன்றில் நடைபெற்றது. இதன்போது, பிரதேச வைத்திய அதிகாரிகள், சுகாதார பரிசோதகர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள் மன்றில் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது, சுன்னாகம் நிலத்தடி நீரினை அருந்தலாமா?...
2019ம் ஆண்டுக்குள் சகல அரச நிறுவனங்களையும் முழுமையாக சூரிய சக்தியால் வலுவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சகல அரச நிறுவனங்களையும் சூரியசக்தியின் மூலம் வலுவூட்டும் தேசிய திட்டத்தின் முதல் கட்டத்தை நிதியமைச்சர் நேற்று நிதியமைச்சில் தொடக்கி வைத்தபோது இவ்வாறு கூறினார். இரண்டு வருடங்களுக்குள் சகல அரச நிறுவனங்களையும் சூரியசக்தி வேலைத்திட்டத்தில் இணைத்துக்...
நேற்று நாள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலை ஐந்து ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமையவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கமைய ஒரு லீற்றர் மண்ணெண்ணையின் புதிய விலை 44 ரூபா என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள நினைவு தூபிக்கு அருகில் நேற்று காலை ஒன்பது மணியளவில் நடைபெற்றது. வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் திருமதி அனந்தி சசிதரன் ஆகியோருடைய ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த இகழ்வில், வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் விவசாய அமைச்சருமான...
சுன்னாகத்தில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த சிறிஸ்கந்தராசா சுமணன் என்ற இளைஞனை சித்திரவதை செய்து கொலை செய்தது தொடர்பிலான வழக்கில், பொலிஸ் உத்தியோகத்தர்களது, பிணை மனு யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனினால்.நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள ஒருவருக்கு எதிராக சர்வதேச பிடியானை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் எதிரிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளவர்களில் 5 பொலிஸ்...
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் பசிப்பிணிபோக்கும் மருத்துவனாக மிகப்பெரும் மனிதாபிமானப் பணியை உலக உணவுத் திட்டம் ஆற்றி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வடக்கு மாகணத்தில் 964 பாடசாலைகளில், தரம் 1 தொடக்கம் 9வரை கல்விபயிலும் 1,60,000 வரையான மாணவர்களுக்கு ஆரோக்கியமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கை குறைந்த ஒரு தொகையல்ல் இது வடக்கு...
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்ற தடுப்புப் பிரிவினரால் சற்றுமுன் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில், இதுகுறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர் நிதிக்குற்ற தடுப்புப் பிரிவில் முன்னிலையாகியிருந்தார். இதற்கு முன்னரும் விமலிடம் பலமுறை விசாரணை...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை வழக்கில் சிங்கள மொழி பேசும் ஜுரிகைள் சபையினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேன்முறையீடு செய்துள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் இந்த மேன்முறையீட்டு மனுவை இன்றைய தினம் தாக்கல் செய்தார்.
பருத்தித்துறை சாரையடி பகுதியின் உள் வீதிவழியாக மணல் ஏற்றி வந்திருந்த கன்டர்ரக வாகனம் ஒன்றினை மறிப்பதற்காக காவல்துறையினர் ரயரிற்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும். இதன்போது யாழ். பருத்தித்துறை வீதி வழியே வந்த கயேஸ் வாகனத்துடன் மணல் ஏற்றிவந்த கன்டர் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் மூன்று பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை வைத்திசாலைக்கு சேர்ப்பதற்கு இளைஞர்கள் முயன்ற வேளை...
நல்லாட்சி அரசாங்கத்துடன், ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி (ஈ.பி.டி.பி), இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துகொள்ளப் போவதாக வெளியான செய்தி தொடர்பில், அவ்விரு கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. இந்தச் செய்தி தொடர்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிக்கையில், “அமைச்சுப் பதவியொன்றை ஏற்பதையோ அல்லது நல்லாட்சி...
வலிகாமம் வடக்கில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து காணிகளை கட்டம் கட்டமாக விடுவிக்காது ஒரேயடியாக முழுமையாக விடுவிக்கவேண்டுமென வலிகாமம் வடக்கு இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்ற குழு அரசாங்கத்தைக் கோரியுள்ளது. இதுதொடர்பாக அச்சங்கத்தின் தலைவர் எஸ்.சஜீவன் கருத்துதெரிவிக்கையில்- வலிகாமம் வடக்குப் பகுதியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படுகின்றது. கடந்த 4 ஆம் திகதி யாழ்.விஜயத்தின் போது வலி.வடக்கின் ஒரு பகுதி விடுவிக்கப்படும்...
வடமாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் தைப்பொங்கல் தினத்துக்கு முன்தினமான எதிர்வரும் வெள்ளிக்கிழமை (13) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பதில் பாடசாலை எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சரனி செயலாளர் இ.இராவீந்திரன் தெரிவித்தார். நாளை மறுதினம் 12 ஆம் திகதி விடுமுறை நாளாக உள்ளது. எதிர்வரும் 14 ஆம்...
உள்ளூராட்சி மன்ற தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதானது ஜனநாயகத்திற்கும் சர்வஜன வாக்குரிமைக்கும் விரோதமானதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணையகத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டு வருவது குறித்து தேர்தல்கள் ஆணையகம் மீது பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட...
சிறீலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 12பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இதனை நேற்று மகிந்த ராஜபக்ஷ நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் தெரியப்படுத்தினார். தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பில் 12பேர் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் மீது அவர் குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த சம்பவமானது அம்பாந்தோட்டை சம்பவத்தின் பின்னர் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று நாடாளுமன்ற அமர்வு முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றில், மாவை சேனாதிராசா கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மயக்கமடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து...
திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றி அமெரிக்க கடற்படைத் தளத்தை அமைப்பதற்கு சிறீலங்கா அரசாங்கம் அமெரிக்காவுக்கு அனுமதி அளித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாசக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடாத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே குற்றம் சுமத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், சீனா, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு முக்கிய நகரங்களைக்...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்வியங்காடு விளையாட்டு மைத்தானத்தில் வைத்து இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ். கோப்பாய் காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள புலவனார் வீதியால் குறித்த இளைஞர் சென்றுள்ளார். இதன் போது மோட்டர் சைக்கிளில் வந்த 6 பேர் குறித்த...
வேலணை மேற்கு சங்கத்தார் கேணிக்குளத்தில் நண்பிகளுடன் குளிக்க சென்ற யுவதி, நீரில் மூழ்கி நேற்று மதியம் உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். அதேயிடத்தை சேர்ந்த சுரேஸ் வினோஜா (வயது 16) என்ற யுவதியே உயிரிழந்துள்ளார். நீரில் மூழ்கியவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். குளித்துக்கொண்டிருந்த போது யுவதி,...
துர்க்கை அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும் தாம் சில நேர்த்திக் கடன்களை செய்வதற்கு கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைப்பதாகவும் நபரொருவர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் நேற்று தெரிவித்தார். கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் வைத்து 275கிராம் கஞ்சாவுடன் நீர்கொழும்பைச் சேர்ந்த முப்பது வயதான சந்தேகநபர், கிளிநொச்சிப் பொலிஸாரால் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார். அவரை, கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில்...
Loading posts...
All posts loaded
No more posts
