சரணடைந்த புலிகளின் தளபதிகளின் விபரத்தை வெளியிட்டுள்ளார் எரிக் சொல்கைம்!

வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் , முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகள் எரிக் சொல்கைமுக்கு அனுப்பியுள்ளார்கள். அதன் அடிப்படையில் அவர் வெளியிட்டுள்ள தகவல் இதுவாகும்.!!! 1.ஆதவன் 2.அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு), 3.அம்பி ( செயற்பாடு தெரியாது) 4.அராமுதன் ( இம்ரான் பாண்டியன் படை அணியின் பிரதி...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் இல்லை விவசாயிகள் சிரமம்

பரந்தன் பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில், எரிபொருள் இன்மையால், தருமபுரம் விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். ஏ-9 வீதியில் பரந்தன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், பூநகரி வாவியடி பகுதியில் இருந்து, பரந்தன் பகுதி வரையான 23 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள ஒரே எரிபொருள் நிரப்பு நிலையமாகும். தருமபுரம் விவசாயிகள்,...
Ad Widget

உணவு நஞ்சானதால் 15 பேர் வைத்தியசாலையில்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது உற்கொண்ட உணவு நஞ்சானதால், 12 வயதுக்குட்பட்ட 5 சிறுவர்கள் உட்பட 15 பேர் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி சி.சுதோகுமார் தெரிவித்தார். உப்புகிணற்றடி கரணவாய் வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது சமைக்கப்பட்ட உணவே இவ்வாறு விசமாகியுள்ளது....

இலங்கைக்கு கஞ்சா கடத்திய இரண்டு இந்தியர்கள் யாழில் கைது

இந்தியாவில் இருந்து கேரள கஞ்சாவினை கடத்தி வந்த இரண்டு இந்தியர்களை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் இந்தியா தமிழ்நாடு புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என காங்கேசன்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த நிறையானது 50 கிலோ என்றும், அதன் பெறுமதி 87 இலட்சத்து 50 ஆயிரம்...

ஊறணி பிரதேசம் தைப்பொங்கல் தினத்தன்று விடுவிக்கப்படும்

வலி. வடக்கு ஊறணி பிரதேசம் தைப்பொங்கல் அன்று (14.01) இராணுவத்தினரால் கையளிக்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று வியாழக்கிழமை தெரிவித்தார். வலி.வடக்குப் பகுதிகள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் கடற்றொழில் செய்யும் குடும்பங்கள் இருக்கின்ற காரணத்தினால், கடற்றொழிலை நம்பி வாழும் குடும்பங்களின் நலன் கருதியும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாகவும்,...

‘மீண்டும் ஜனாதிபதியானால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் ?’ : மஹிந்தவிடம் கேள்வி

மீண்டும் ஜனாதிபதியாக வாய்ப்பு கிடைத்தால் நாட்டில் வித்தியாசமாக எதனை செய்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, நாட்டை யார் ஆட்சி செய்தாலும் தற்போதைய தலைமுறையினருக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஏற்ற சரியானதை செய்ய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை அவரது...

வடக்கு சுகாதார அமைச்சருக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

வவுனியா கந்தசுவாமி ஆலய வளாகத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் இன்று (புதன்கிழமை) வடக்கு மாகாண சுகாதார அமைச்சருக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். வவுனியாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காணாமல் போனோரின் உறவினர்களினால் அடையாள உண்ணாவிரத போராட்டமோன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தின் போது, தமிழ் தேசிய...

இலங்கையை தமிழர்களே ஆட்சி செய்தார்கள் : அரசியல் ஆய்வாளர் அறிக்கை

பௌத்தரான ஆரியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னரே தமிழ் மொழி பேசுகின்ற திராவிட இனங்கள் வாழ்ந்து வந்தன என்பதற்கான தொல்லியல் சான்றுகள் இருக்கின்றன எனவும் அவைகள் மறைக்கப்பட்டுள்ளன எனவும் மட்டக்களப்பு பிரஜைகள் முன்னணி தலைவரும் அரசியல் ஆய்வாளருமான வி.கமலதாஸ் தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு...

மட்டக்களப்பில் மீண்டும் பிக்குகள் அட்டகாசம்

மட்டக்களப்பு எல்லை பகுதியான மயிலத்தமடு மாதவணை பகுதியில் மாடுகளை மேய்த்துக்கொண்டிருந்த பண்ணையாளர்கள் மீது, அப்பகுதியில் அத்துமீறி விஹாரை அமைத்திருக்கும் பௌத்த தேரர்கள் மூவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு அத்துமீறி அமைக்கப்பட்டுள்ள விகாரையின் விகாராதிபதியும் அவருடன் வருகை தந்த இரு பிக்குகளும் இப்பிரதேசத்தில் இனிமேல் மாடு மேய்க்கக்கூடாதெனக் கூறி தாக்குதல் நடாத்தியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்....

 ‘பாதை’ நேரத்தில் மாற்றம்

ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் இடம்பெறும் பாதை சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, ஊர்காவற்துறை பிரதேச செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, காலை 7.30 மணிக்கு காரைநகரிலிருந்து ஊர்காவற்துறைக்கு பாதை சேவை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறை பிரதேச செயலருக்கு அரச உத்தியோகத்தர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இவ் நேரமாற்றம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. ஊர்காவற்துறைக்கும் காரைநகருக்கும் இடையில் வீதி அபிவிருத்தித்...

இலங்கை மீண்டும் அழியும்: சங்கரி

“தேசிய அரசாங்கம் என்ற போர்வையில் நமது நாடு எங்கே செல்கின்றது என்று எவருக்கும் தெரியவில்லை. என்னுடைய 60 வருடகால அரசியல் அனுபவத்தை வைத்து நான் சொல்வதை எவரும் புரிந்து கொள்வதுமில்லை. ஆனால் மீண்டும் ஒரு அழிவை எமது நாடு சந்திக்கப் போகின்றது என்பது மட்டும் உறுதி” என்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ....

சிசுக்கள், கர்ப்பிணிகள், வயோதிபர்களுக்கு எச்சரிக்கை

தற்போது நாடளாவிய ரீதியில், காலை மற்றும் மாலை வேலைகளில் ஏற்பட்டுள்ள கடுமையான குளிர் காரணமாக, பிறந்த சிசுக்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் ஆகியோரின் உடல்நலம் பாதிக்கும் என்று, குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது. இந்தக் குளிர்காலத்திலிருந்து தங்களது சுகாதாரத்தை பாதுகாத்துக்கொள்வதற்கு, எந்நேரமும் உடலைச் சூடாக வைத்துக்கொள்வதற்கான ஆடையை அணியுமாறும், சூடான உணவுகளை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும்...

யாழ்.போதனா வைத்தியசாலையில் பிளாஸ்ரிக், பொலித்தீன் பாவனைக்கு தடை விதிப்பு!

எதிர்வரும் 16-ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தினுள் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் மற்றும் உணவு பொதி செய்வதற்கான லன்ஞ் சீற் கொண்டு வருவது தடை செய்யப்பட்டுள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைய அரச நிறுவனங்களில் பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி...

கிளிநொச்சியில் டெங்கு பரவும் அபாய நிலை மக்களை விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்குக் காய்ச்சலானது மிகத் தீவிரமாகப் பரவக்கூடிய அபாய நிலை அவதானிக்கப்பட்டுள்ளது எனவே பொது மக்களை அவதானமாக இருக்குமாறு கிளிநொச்சி மாவட்ட சுகாதார துறையினர் அறிவித்துள்ளனர். இது தொடாபில் அவர்கள் விடுத்துள்ள செய்தி குறிப்பில் இலங்கையில் பல மாவட்டங்களில் வேகமாகப் பரவிவரும் டெங்குக் காய்ச்சலானது தற்போது கிளிநொச்சி மாவட்டத்திலும் கால்பதித்துள்ளது. 2017ம் வருடத்தின் முதல்...

வழக்குத் தீர்ப்பு முதுகில் குத்தப்பட்டதாக உணர்த்தியது! : ராவிராஜ் குடும்பத்தினர்

வழக்குத் தீர்ப்பானது முதுகில் குத்தப்பட்டதாக உணர்த்தியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பத்து ஆண்டுகளின் பின்னர் ரவிராஜின் குடும்பத்தினர் முதல் தடவையாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு நடராஜா ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இது தொடர்பிலான வழக்குத் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. குற்றம்...

பைரவாவுடன் மோதும் படங்கள்!

நாளை பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் பைரவா வெளியாகிறது. இந்தப் படத்துடன் மோத மேலும் ஒரு படம் தயாராகி வருகிறது. ஆரம்பத்தில் பொங்கல் ஸ்பெஷலாக பைரவா மற்றும் 7 புதுப் படங்கள் வெளியாகவிருந்தன. செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை, ஜிவி பிரகாஷின் புரூஸ்லீ போன்ற படங்கள் இந்தப் பட்டியலில் இருந்தன. ஆனால் திடீரென இந்தப் பட்டியலிலிருந்து பெரும்பாலான படங்கள்...

வடக்கை விட தெற்கிலேயே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்

நாட்டில் தற்போது இடம்பெற்றுவரும் செயற்பாடுகளை நோக்கும்போது, வடக்கை விட தெற்கிலேயே நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான செயலணியின் தவிசாளருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்- ”தெற்கிலே அபிவிருத்தி செயற்பாடுகள் போதுமான அளவில்...

வடக்கு மாகாண சபை குறித்து தென்னிலங்கை அரசே புரளி கிளப்புகிறது

மாகாண சபை அதிகாரங்களை தொடர்ந்தும் தன்னகத்தே வைத்திருப்பதை நோக்காகக் கொண்டு, மத்திய அரசானது வட மாகாண சபை திறனற்று செயற்படுவதாக புரளியை கிளப்பி வருகின்றதென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கனடாவுக்கு விஜயம் செய்துள்ள வடக்கு முதல்வரிடம், வடக்கு மாகாண சபை திறனற்று செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றதே என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர். அத்தோடு, கையாடல் குற்றச்சாட்டிற்கு...

மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை தொடர்பில் வடமாகாண சபையில் அதிருப்தி

முல்லைத்தீவு - மல்லாவி நகரில் மாவீரன் பண்டாரவன்னியனின் உருவ சிலை அவமானப்படுத்தும் அளவிற்கு அதன் வடிவமைப்பு காணப்படுவதாக வடமாகாண சபையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் 82ஆவது அமர்வு நேற்றைய தினம் மாகாணசபை பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மாகாணசபை உறுப்பினர் எஸ்.மயூரன் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இந்த விடயத்தை சபைக்கு கொண்டுவந்தார்....

அம்பாந்தோட்டை விவகாரம், மகிந்தவிடம் விளக்கம் கோரினார் சீனத் தூதுவர்!

அம்பாந்தோட்டை விவகாரம் தொடர்பாக மகிந்த ராஜபக்ஷ தெரிவித்து வரும் எதிர்ப்புத் தொடர்பாக சீனா விளக்கம் கோரியுள்ளது. இலங்கைக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் நேற்று இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்துப் பேச்சு நடாத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, அம்பாந்தோட்டைத் துறைமுகம் மற்றும் காணிகள் ஒதுக்கீட்டுக்கு மகிந்த ராஜபக்ஷ எதிர்ப்புத் தெரிவிப்பதற்கான...
Loading posts...

All posts loaded

No more posts