- Tuesday
- August 18th, 2026
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ். சதீஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் படுகொலை தொடர்பில் அவர்களின் பெற்றோர்களை தனது அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை செய்தமை தொடர்பில்...
ஒன்ராரியோ முதலமைச்சர் கத்தலின் வினிற்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பு ஒன்ராறியோ முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பொருளாதார அபிவிருத்தி மற்றும் பெண்களின் வலுவூட்டல், நிறுவன நல்லாட்சி மற்றும் பொதுசனசேவை, நிறுவனங்களின் துறைசார் விருத்திகள் உட்பட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் தங்கவைக்கபட்டிருந்த இலங்கை அகதிகள் 40 பேர் இன்று இலங்கையை வந்தடையவுள்ளனர். ஐக்கிய நாடுகளிள் அகதிகளுக்காக உயர்ஸ்தானிகர் மேற்கொண்ட நடவடிக்கைகையை அடுத்து இவர்கள் நாடு திரும்பவுள்ளனர். 14 குடும்பங்களை சேர்ந்த இந்த அகதிகள், திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. கோயம்புத்தூர்,...
வீட்டில் யாருக்கேனும் தடிமனுடன் காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று மருத்துவ சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கண்டி பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க, பொது மக்களிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.இது இன்ஃபிலுவென்சா ஏ எச்.வன்.என்.வன் வைரஸ் தாக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்பதறகாகவே இந்த உடனடி சிகிச்சை அவசியப்படுவதாக அவர் கூறியுள்ளார்.அதேநேரம்,...
நெதர்லாந்தில் இயர்லன் எனும் இடத்தில் வசித்து வந்த தருக்சன் செல்வம் என்ற 15 வயதுடைய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுவன், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடசாலையில் குறித்த மாணவனுடன் கல்வி கற்கும் சக மாணவர்களின் துன்புறுத்தல் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சக மாணவர்கள், சமூக...
நாட்டின் பல பாகங்களிலும் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலையுடன் கூடிய காலநிலை தொடர்ந்து நீடிக்குமென்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதிகாலை நேரங்களில், நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் உறைபனி காணப்படும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மேற்கு, சப்ரகமுவ மாகாணம், தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில், குறிப்பாக காலை வேளைகளில் பனிமூட்டம் காணப்படும் என்று...
யாழ் போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் 40 பேர் கொண்ட குழுவினர் இணைந்து நேற்று 12.01.17 நெடுந்தீவில் விசேட மருத்துவ முகாம் ஒன்றை நடாத்தினர்.இதில் 555 பேர் பயன் பெற்றனர். நெடுந்தீவு யாழ்ப்பாணத்திலிருந்து தொலைவில் இருக்கும் ஒரு பிரதேசம். இங்கு மருத்துவ வசதிகள் மிகவும் குறைவாகக் காணப்படுகின்றது....
இலங்கையில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை முழுவதிலும் நிலவும் வறட்சியான காலநிலையால், நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் சபை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. வறட்சியான காலநிலை காரணமாக, தொடர்ந்து நீரை விநியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அதி முக்கியமான தேவைகளுக்கு மாத்திரமே நீரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் பனைவிதைகளை நடுகை செய்து பராமரிக்கும் கற்பக கானகத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்று வியாழக்கிழமை (12.01.2017) நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் நடைபெற்றுள்ளது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி வைத்துள்ளார். கனடாவில் உள்ள நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் 2013ஆம் ஆண்டில் இருந்து நெடுந்தீவில் பாடசாலை மாணவர்கள் மூலம்...
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; இலங்கையில் நிகழும் ஆக்கபூர்வமான நிலைமாற்றத்தை கௌரவிக்கும் வகையில், ஐரோப்பிய ஆணைக்குழு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜேர்மனியிற்கு உத்தியோகபூர்வ...
உணவுக் கழிவுகளை ஏற்றிவந்து திருட்டுத் தனமாக காக்கைதீவுப் பகுதியில் கொட்ட முயன்ற யாழ் நகரின் மத்தியில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் உழவு இயந்திரம் மாநகர காவல் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. யாழ் நகரின் புறநகர்ப் புறத்தில் உள்ள ஒரு பிரபல விடுதியின் உணவுக் கழிவுகள் இறைச்சிக் கழிவுகளை உழவு இயந்திரத்தில் ஏற்றி காக்கைதீவில் கொட்ட முயன்றவேளையில்...
உள்நாட்டு அரிசியின் விலை 8 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக அரிசி இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து உள்நாட்டு அரியின் விலை குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் கேமக பண்டார தெரிவித்துள்ளார். அரிசி மீதான இறக்குமதி வரியை 65 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் கடந்த 6 ஆம் நாள் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனடிப்படையில், அரிசி...
அனுராதபுர விமானபடை தாக்குதல் வழக்கு தொடர்பில் சந்தேகத்தின்பேரில் பயங்கரவாத சட்டத்தின்கீழ் அனுராதபுர சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரை சிறைக்குள்ளே சிறைவைத்து இம்சைபடுத்துவதாக தெரிவிக்கபடுகிறது. கடந்த 2009 ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பாணம் சுன்னாகத்தை சேர்ந்த ராசவல்லவன் என்பவருக்கு எதிராக கடந்த 2008 ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அனுராதபுர விமானபடை தாக்குதல் சம்பவத்துடன்...
இனங்களுக்கிடையிலான இந்த நல்லிணக்கமானது கட்டாயமாக நாம் ஏற்றுக் கொள்ளவேண்டிய ஒன்றாகும். ஆனால் நாம் நல்லிணக்கம் என்று சொல்கின்றோம், பல செயற்பாடுகளை முன்னெடுக்கின்றோம். ஆனால் யாழ் மாவட்டத்தை பொறுத்தவரையில் “நல்லிணக்கம்” என்றால் என்ன என்று தெரியாத அளவில் மக்கள் வாழ்கின்றார்கள் என தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க வாரத்தினை முன்னிட்டு, தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க பிரகடனத்தினை முன்வைக்கும் நிகழ்வில்...
கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் அஜீத் காரியகரவன்ன, நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார். கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கட்டளைத் தளபதியாக இதுவரை செயற்பட்டு வந்த மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர, பட்டலந்த பயிற்சி முகாமின் புதிய கட்டளைத் தளபதியாக மாற்றப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்....
அரச முகாமைத்துவ உதவியாளர் சேவையில் மேலும் ஆயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று காலை வழங்கப்படவுள்ளன. சமீபத்தில் நடைபெற்ற போட்டிப்பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவான நியமனத்திற்கு இவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தற்பொழுது நிலவும் வெற்றிடங்களுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அரச ஒன்றிணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
வேகமாகச் சென்ற இராணுவ வாகனம் ஒன்று இளைஞர் ஒருவர் மீதும், பொலிஸ் வாகனம் தாதி ஒருவர் மீதும் மோதிய சம்பவம் வவுனியாவில் இருவேறு பகுதிகளில் பதிவாகியுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் விவசாயக்கல்லூரிக்கு முன்பாக இன்று (12) பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ வாகனம் மோதியதில் இளைஞன் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில்...
உத்தேச அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தை ஒத்த வகையில், அதிகாரங்கள் பகிரப்படுகின்ற அதேவேளை, அதில் காணப்படுகின்ற பொதுப்பட்டியல் நீக்கப்படுவதுடன் வடக்கு – கிழக்கு இணைப்பும், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெறும்வரை சாத்தியமாகாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பிருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.. தற்போது, சமஷ்டியா – ஒற்றையாட்சியா...
இலங்கையில் இன்று வெள்ளிக்கிரத்தைத் தெளிவாகப் பார்க்கமுடியுமென ஆதர்சி கிளார்க் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன்படி இன்று மாலை 6.30ல் இருந்து இரவு 9 மணி வரையில் இதனை பார்க்க முடியும் எனவும் இந்த நேரப்பகுதியில் மேற்கு வானில் வெள்ளிக் கிரகம் தெளிவாக தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளிக் கிரகத்தைப் பார்ப்பதற்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் பலமுறைகளில்...
வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு வடக்கு மாகாண முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவின் முன்னிலையில் 21பேர் சாட்சியமளித்துள்ளனர். ஊழல், மோசடி தொடர்பாக வடக்கு மாகாண சபை அமைச்சர்களுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் விசாரணை நடாத்துவதற்கு ஓய்வுபெற்ற நீதியரசர்களைக்கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
