Ad Widget

GSP+ அரசின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெற முடிந்தமை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இலங்கையில் நிகழும் ஆக்கபூர்வமான நிலைமாற்றத்தை கௌரவிக்கும் வகையில், ஐரோப்பிய ஆணைக்குழு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஜேர்மனியிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட சமயம் இதுபற்றி ஜேர்மன் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் போது, ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மீண்டும் கிடைக்க வழி செய்யப்போவதாக அஞ்சலா மேக்கல் அம்மையார் உறுதியளித்தார்.

இலங்கையின் நல்லாட்சி அரசாங்கம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி, நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்த முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு இந்த வரிச்சலுகை வலுவான சக்தியாக அமையும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது

Related Posts