இலங்கையில் இன்று வெள்ளிக்கிரகத்தை தெளிவாக பார்க்கமுடியும்!

இலங்கையில் இன்று வெள்ளிக்கிரத்தைத் தெளிவாகப் பார்க்கமுடியுமென ஆதர்சி கிளார்க் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன்படி இன்று மாலை 6.30ல் இருந்து இரவு 9 மணி வரையில் இதனை பார்க்க முடியும் எனவும் இந்த நேரப்பகுதியில் மேற்கு வானில் வெள்ளிக் கிரகம் தெளிவாக தென்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வெள்ளிக் கிரகத்தைப் பார்ப்பதற்கு இவ்வாறான சந்தர்ப்பங்கள் பலமுறைகளில் கிடைக்காது எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Posts