- Tuesday
- August 18th, 2026
கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் முன்னாள் போராளியொருவர் பயங்கரவாத குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருவையாற்றை சேர்ந்த முருகையா தவவேந்தன் என்ற புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளியொருவரே இவ்வாறு நேற்று இரவு 11 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாத புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கைதுசெய்தவர்கள் தாம் காவல்துறையினர் எனத் தெரிவித்ததுடன் வவுனியாவில் இருந்து வருவதாகவும்...
இலங்கையில் 40ஆண்டுகளில் இல்லாத மோசமான வறட்சி நிலவி வருவதுடன், அதை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சிறீலங்காவின் சராசரி மழைவீழ்ச்சியில் 70 வீத மழைவீழ்ச்சியே சிறீலங்காவுக்கு கிடைத்தது. இதனால் நீர்த்தேக்கங்கள் எதுவும் நிறையவில்லை. தற்போது நீர்த்தேக்கங்களில் உள்ள நீரானது இன்னும் இரண்டு மாதங்களுக்கு மாத்திரமே குடிநீர்த் தேவைக்குப் பயன்படுத்தமுடியும்....
கிளிநொச்சி, ஆனைவிழுந்தான் கிராமத்திலுள்ள வீடொன்றின் சுவாமியறையிலிருந்து, 16 வயது சிறுவனின் சடலத்தை பொலிஸார மீட்டுள்ளனர். அதேபகுதியைச் சேர்ந்த நாகலிங்கம் கஜேந்திரன் என்ற சிறுவனே, கடந்த வௌ்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர், க.பொ.சா/த பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுக்காக காத்திருந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சிறுவனது நண்பன், அண்மையில் உயிரிழந்து விட்டதன் பின்னர், இந்தச் சிறுவன் வெகுநாட்களாக...
அண்ணன் பிரபாகரன் எந்த மூலையில் வாழ்ந்தாலும் நலமோடு வாழவேண்டும். தமிழ் மக்களுக்கான உரிமைகள் கிடைக்கின்றபோது அவர் மீண்டும் இங்கு வரவேண்டும். அவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என வடமாகாண போக்குவரத்து கடற்றொழில் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்தார். வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் சனிக்கிழமை (14) மாலை இடம்பெற்ற பட்டப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர்...
கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இன்மையால், உரிய நேரத்துக்கு முறைப்பாடுகளை செய்வதில், சிரமம் ஏற்பட்டுள்ளதாக, பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், போதியளவு தமிழ் பேசும் மற்றும் தமிழ் பொலிஸார் இல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால் பொலிஸ் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் பொருட்டு, பொலிஸ் நிலையத்துக்குச் செல்லும்...
சாவகச்சேரி கல்வயல் வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் இருந்து சுவிஸ் பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இரவு படுக்கைக்கு சென்றவர் விடிந்து பலமணி நேரமாகியும் எழுந்திராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த விடுதி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறி வித்துள்ளார். குறித்த விடுதிக்கு வந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்து பார்த்த பொழுது குறித்த நபர் உயிரிழந்து...
புதிய பிரிவினைவாத அரசியலமைப்பு ஒருபோதும் நிறைவேற்றப்படாது என்பதை சகலரும் அறிவர், ஆனால் எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மாத்திரம் அதனை அறியாதுள்ளார். அவர் முன்வைக்கின்ற கோரிக்கைகள் என்று நிறைவேறப்போவதில்லை என நாடளுமன்ற உறுப்பினரும் கூட்டு எதிரணியின் தலைவருமான தினேஸ் குணவர்தன தெரிவித்தார். எவ்வாறாயினும் மக்கள் விரும்பாத ஒரு அரசியலைமப்பினை எந்த சந்தர்ப்பத்திலும் நிறைவேற்ற முடியாது என்பதே...
வடக்கு – கிழக்கிலுள்ள சகல பௌத்த விஹாரைகள் மற்றும் வீதியோரங்களில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலைகள் ஆகியவற்றிற்கு இராணுவ பாதுகாப்பு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திருகோணமலை பிரதேசத்தில் அண்மையில் சில விசமிகளால் புத்தர் சிலைகள் சேதமாக்கப்பட்டிருந்தன. இதனையடுத்தே இராணுவ பாதுகாப்பு தொடர்பான அறிவித்தலை பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வடக்கு – கிழக்கில்...
இந் நாட்டில் சரித்திர ரீதியாக வாழ்ந்த தமிழ் மக்கள், சுயகௌரவத்துடன் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்றும் இது தனது கடமை என்றும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் மற்றும் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு...
தான் ஆட்சியில் இருக்கும் வரை நாட்டில் சமஷ்டி ஆட்சியை ஏற்படுத்தவோ பிளவுபடுத்தவோ ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். காலியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்- ”நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் காணப்பட்டன. அவற்றை தீர்க்கும் பொறுப்பை நாம்...
வலிகாமம் வடக்கில், காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 400 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை, மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த சிறீலங்காப் படையினர் அனுமதியளித்துள்ளனர். இடம்பெயர்ந்து மாவிட்டபுரம் – நல்லிணக்கபுரம் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள 130 குடும்பங்கள் தமது வாழ்வாதாரத் தொழிலான மீன்பிடித் தொழிலை மேற்கொள்வதற்கு, ஊறணிப் பகுதியில் இருந்து அத்தொழிலை...
யாழ்ப்பாண மாவட்டத்தில், 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்பாட்டில், இந்தியாவும் சிறீலங்காவும் நேற்று கையெழுத்திட்டன. சிறீலங்காவின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சியும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதியும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்தத் திட்டத்திற்காக 300 மில்லியன்...
ஊர்காவற்துறையில் தேர்தல் பரப்புரைக்குச் சென்றவர்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான இரட்டைக் கொலைவழக்கு விசாரணையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈபிடிபி கட்சியினர் இருவரையும் பிரித்தானியாவிலிருந்து சிறீலங்காவுக்கு நாடுகடத்துமாறு யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பரிந்துரைசெய்துள்ளார். தூக்குத் தண்டனைகளில் தீர்ப்பளிக்கின்ற நீதிபதி ஆட்சியாளர் மைத்திரிபாலசிறிசேனவுக்கு தமது தனிப்பட்ட அபிப்பிராயத்தை அனுப்பிவைக்கவேண்டும் என்ற நடைமுறைக்கமைய,...
சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து படகொன்றில் தமிழகத்தின் தனுஷ்கோடியை அடைந்த இலங்கை இளைஞனை கைதுசெய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்டம், பேசாலைப் பகுதியைச் சேரந்த 36 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் எம். ஜீ. ஆர் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் எம்.ஜீ.ஆரின் 100 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் கல்வியங்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள எம்.ஜீ.ஆர் சிலையருகே நடைபெறவுள்ளது. ஈழத்து எம். ஜீ. ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக இந்திய உயர் ஸ்தானிகர் ஆ.நடராஜன்,...
எதிர்காலத்தில் சமூர்த்தி பயன்பாட்டாளர்களுக்கு சூரிய சக்தி மூலம் இலவசமாக மின்சாரம் வழங்கும் வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க கூறினார். எதிர்காலத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு பதிலீடாக இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என்று ஹிங்குராங்கொட, சமூர்த்தி மாதிரி கிராமத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அமைச்சர் கூறினார். குறித்த...
யாழ்ப்பாண வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் மயிலிட்டி, ஊறணி மற்றும் நல்லிணக்கபுரம் பகுதிகளை சேர்ந்த மக்கள் கடற்றொழில் செய்வதற்காக சுமார் 400 மீற்றர் நீளமான கரையோர பகுதியும், அதுமட்டுமன்றி 2 ஏக்கர் நிலமும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தேசிய ஒருமைப்பாட்டுக்கும், நல்லிணக்கத்திற்குமான அமைச்சினால் நடை முறைப்படுத்தப்படும் தேசிய நல்லிணக்கவாரத்தை முன்னிட்டு இன்றைய தினம் (14) ஊறணி...
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாள், நாளை (சனிக்கிழமை) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படவுள்ள நிலையில், வடக்கு, மலையகம் என நாட்டின் அனைத்து பாகங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் களைக்கட்டியுள்ளது. யாழ்.குடாநாட்டின் பல்வேறு இடங்களிலும் தைப்பொங்கல் வியாபாரம் மும்முரமாக இடம்பெற்று வருகிறது. பொதுமக்கள் பொங்கலுக்குத் தேவையான பொருட்களை மக்கள் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து வருகின்றனர். கிளிநொச்சி மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு இம்முறை...
கடுமையான வரட்சியை நாடு எதிர்க்கொள்ளவுள்ள நிலையில், நீரையும், மின்சாரத்தையும் இயன்றளவு சிக்கனமாக உபயோகிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அமைச்சர், ‘எதிர்வரும் மூன்று மாத...
2013ஆம் ஆண்டு அப்போதைய வடக்கு மாகாண ஆளுநராக இருந்தவரினால் வடக்கு மாகாண சபைக்கென ஒதுக்கப்பட்ட 110 மில்லியன் ரூபா வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரேயினால் தற்போது வடக்கு மாகாணத்துக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை அப்போது ஆளுநராக இருந்தவர் சட்டவிரோதமாக ஆளுநர் நிதியத்திற்குத் திருப்பியிருந்தார். மாகாணசபையிடமிருந்து சட்டவிரோதமாக பெறப்பட்ட 110...
Loading posts...
All posts loaded
No more posts
