- Tuesday
- August 18th, 2026
யுத்ததிற்கு பின்னர் போரினால் பாதிக்கப்பட்ட முக்கியமாக வடக்கு கிழக்கிற்கு அபிவிருத்தி திட்டங்கள் அரசினால் அதிகமாக முன்வைக்கப்படுகிறது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். நேற்றய தினம் உலகவங்கியினருடனான கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள சிவில் சமுக...
தெற்காசியாவின் மென்பான உற்பத்திக் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற அமெரிக்காவின் மென்பான உற்பத்தி நிறுவனமான கொக்கக்கோலா நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. கொக்கக்கோலா நிறுவனத்தின் ஆசிய பசுபிக் பிரிவுக்கான உதவித் தலைவர் ஜோன் முர்பி, இலங்கையின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவைச் சந்தித்து குறித்த விருப்பத்தினைத் தெரிவித்துள்ளார். தெற்காசியாவில் அதிக சந்தைவாய்ப்பைக்கொண்டுள்ள கொக்கக்கோலா நிறுவனம், சிறீலங்காவில் உற்பத்தி மையத்தை...
ஆவரங்கால் - நவோதயா வீதியில் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். அச்சுவேலி தெற்கு பகுதி இளைஞர்களுக்கும் ஆவரங்கால் இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினை தீர்த்து வைப்பதற்கு பெரியோர்கள் எடுத்த முயற்சியின்போதே இந்த...
1998ஆம் ஆண்டு அச்சுவேலி சிறுப்பிட்டி பகுதியில் இரண்டு சிவிலியன்கள் கைது செய்யப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அச்சுவேலி பொலிஸாரால் மேற்கொண்டு வரும் வழக்கு விசாரணை, போதிய சாட்சிகள் இல்லாமையினால் இழுத்தடிப்பு செய்யப்படுவது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் தனது அதிருப்தியினை வெளியிட்டுள்ளார். மேலும், போதிய சாட்சிகள் இன்றி தடுத்து வைக்கப்படுவதும்...
கௌதம புத்தர் அவதரித்த இந்தியாவின் மாதிரி கிராமம் ஒன்று இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ளது. 2017ம் ஆண்டு சர்வதேச வெசாக் தினத்தை கொண்டாடுவதுடன் தொடர்புபட்டதாகவும் உலக பௌத்த சம்மேளனத்தை ஒட்டியதாகவும் இந்த கிராமம் கெஸ்பாவவில் அமைக்கப்பட்வுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று நடைபெறவுள்ளது. கெஸ்பாவவில் 50 கோடி ரூபா செலவில் இந்த கிராமம் நிர்மாணிக்கப்படவுள்ளது. நீதியமைச்சர் விஜயதாஸ...
வலிகாமம் வடக்கில் காங்கேசன்துறைக்கும் மயிலிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் உள்ள ஊறணி பகுதியில் உள்ள 325 மீற்றர் நீளமான கடற்கரைப் பகுதியை மட்டுப்படுத்தப்பட்டளவில் மீனவர்கள் பயன்படுத்த இலாணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஊரணி மீன்பிடி துறைமுகதை மீண்டும் உள்ளூர் மீனவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கடந்த 14 ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படை தலைமையக படையினரின் பங்களிப்புடன் இடம்பெற்றது....
இலங்கையில் நிலவும் கடுமையான வறட்சி நிலை குறித்து தீவிர கவனம் செலுத்தியுள்ள ஜக்கிய நாடுகள் சபையும் அதன் துணை நிறுவனங்களும் வறட்சி நிவாரணங்களைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி செயலணிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளன. ஐ நா வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஐ நா அபிவிருத்தித் திட்ட வதிவிட பிரதிநிதி, உலக உணவுத் திட்ட...
இலங்கையில் அமைக்கப்படவுள்ள தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டில் உள்ள அரச மருத்துவ கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களும் எதிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாண மருத்துவ பீடத்தின் 36 ஆவது அணி மாணவர்கள் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வாரகால...
வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தினால் (NCIT) ஒழுங்கு செய்யப்பட்ட வடமாகாண தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களினை சேர்ந்தவர்களுக்கான வருடாந்த ஒன்றுகூடல் 15.1.2017 ஞாயிற்றுக்கிழமை இரவு கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் அதன் தலைவர் த.தவரூபன் தலைமையில் இடம்பெற்றது. இது வடக்கு தகவல் தொழில்நுட்பத்துறை சம்மேளனத்தின் உறுப்பினர்களும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்பம் சார்ந்த நிறுவனங்களும்...
வவுனியாவில் இன்று திங்கட்கிழமை காலை 10.30 மணியளவில் மத்திய போக்குவரத்து அமைச்சரினால் உத்தியோக பூர்வமாகத்திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையத்தில் தமிழ் எழுத்துப்பிழை காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பெருமளவில் தமிழர்கள் வாழ்ந்துவரும் வவுனியா மாவட்டத்தில் மத்திய அரசாங்கத்தினால் இவ்வாறான தமிழ் பிழைகள் இடம்பெற்றுள்ளமையானது வருந்தத்தக்கதென நிகழ்விற்கு வருகைதந்திருந்த சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பேருந்து நிலையத்தில்...
வலி வடக்கு மக்கள் தமது சொந்த வீடுகளில் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் உல்லாசம் அனுபவிப்பது கண்டு ஊறணி மக்கள் தமது ஆதங்கத்தினைக் கொட்டித் தீர்த்தவாறு கண்ணீர் மல்க வெளியேறினர். நேற்று முன்தினம் முதல் ஊறணிப் பகுதியில் ஓர் இறங்குதுறையின் ஊடாக மீனவர்கள் கடலுக்குச் சென்றுவரும் வாய்பு வழங்கப்பட்டது. இதற்காக 2 ஏக்கர் நிலப்பரப்பும் படையினரின் பிடியில்...
கிளிநொச்சி மாவட்டத்தில் காலபோகத்தில் செய்கைபண்ணப்பட்ட 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையில் அழிவை எதிர்கொள்ளும் 40 ஆயிரம் நெல்லை பாதுகாக்க நீர்ப்பாசனத் திணைக்களத்தினர் உடனடியாக 25 குழாய் கிணறுகளை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள 60 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கையில் சுமார் 20 ஆயிரம் நெல்லுக்கு ஓரளவு நீர்ப்பாசன வசதியினை ஏற்படுத்தக்கூடிய வாய்புக்கள்...
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வரட்சியை எதிர்கொள்ளும் நோக்கிலும், மின்பாவனையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், அரச அலுவலகங்களிலுள்ள (A/C) பாவனையை, குறைத்துக்கொள்ளுமாறு கோரி, சுற்றறிக்கையொன்றை வெளியிடப்படவுள்ளது. இந்தச் சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றும் அந்தச் சுற்றறிக்கையின் பிரகாரம், அரச ஊழியர்கள், A/C யினை 26 பாகை செல்சியஸுக்கு மேல் வைத்து பயன்படுத்துமாறும் குறிப்பிடப்படும் என்றும், எரிபொருள் மற்றும்...
பொதுமக்கள் போக்குவரத்து மற்றும் ஏனைய முச்சக்கரவண்டிகளுக்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் விசேட ஒழுங்கு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பொதுமக்கள் போக்குவரத்து முச்சக்கரவண்டிகளுக்கு மீட்டர் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன். கட்டணம் செலுத்தப்பட்டதன் பின்னர் பற்றுசீட்டு வழங்குவது சாரதியின் பொறுப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வலது பக்கத்தால் உள்நுழைய முடியாமல் முற்றாக அல்லது பகுதி அளவு...
நாட்டில் தற்பொழுது நிலவும் வறட்சியான காலநிலையினால் 9 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 50 அயிரம் பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர், திருகோணமலை, கண்டி, நுவரெலியா, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, காலி போன்ற மாவட்டங்களில் காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, இந்த வறட்சியான காலநிலையினால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான...
இந்நாட்டில் ஏனைய சமூகங்களுக்கு கிடைக்கும் சகல சலுகைகளும் தமிழ் மக்களுக்கும் கிடைக்கின்றன என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேசிய பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்- ”காணியுரிமை அற்றவர்களாக வாழ்ந்த மலையக மக்களுக்கு தற்பொது ஏழு...
வவுனியா மாவட்டம் ஓமந்தை சோதனைச் சாவடிக்கு அண்மையிலிருந்து இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வெளியேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். குறித்த சோதனைச் சாவடியில் இராணுவத்தினர் தமது தேவைக்காக அமைத்துள்ள கட்டடங்களையும் அகற்றிவருகின்றனர். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வடக்கில் இருந்து தெற்கிற்கும் தெற்கில் இருந்து வடக்கிற்குமான நுழைவாயிலாகவும் மக்களையும் பொருட்களையும் சோதனையிடும் பிரதான சோதனைச் சாவடியாகவும் இருந்த குறித்த பகுதி...
தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வுகாணும் யோசனையை அரசாங்கம் கைவிடுமேயானால், அரசியலமைப்பு உருவாக்கச் செயற்பாடுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளாது, அதிலிருந்து வெளியேறும் நிலை உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வி வழங்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தேசிய இனப்பிரச்சனைக்கு...
கிளிநொச்சி மாவட்டம் இரணைமடுவில் அமைந்துள்ள கனகாம்பிகை அம்மன்கோவிலில் மழைவேண்டி வழிபாடு நடாத்தப்பட்டுள்ளது. தற்போது நிலவரும் வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கா் வயல் நிலங்கள் அழிவடைந்துள்ளன. இந்த நிலையில் மழைவேண்டி கிளிநொச்சி இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளனம் விசேட பூசை வழிபாடுகளை மேற்கொண்டுள்ளனா். நேற்று காலை இரணைமடு குளத்திலிருந்து குடைபிடித்து ஊர்வலமாகச் சென்று கனகாம்பிகை...
கொழும்பில் கப்பம்கோரி தமிழ் இளைஞர் ஒருவரைக் கடத்தி காணாமல் போகச் செய்தவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்று குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கடைபடை அதிகாரியொருவரைக் கைதுசெய்துள்ளனர். கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த இளைஞனே 2008ஆம் ஆண்டு கடத்தப்பட்டு, கப்பம்கோரப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின்பேரில் நேற்றையதினம் கடற்படை அதிகாரியான லெப்.கொமாண்டர் அனில் தம்மிகவை குற்றப் புலனாய்வுப்...
Loading posts...
All posts loaded
No more posts
