நந்திக்கடல் பகுதி விடுவிக்கப்படமாட்டாது! : ராணுவம்

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதி படைத் தேவைக்கு அவசியமென குறிப்பிட்டுள்ள ராணுவம் குறித்த பகுதி விடுவிக்கப்பட மாட்டாதென தெரிவித்துள்ளது. படைத் தேவைக்காக இவ்வாறு சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு மாற்றுக் காணிகள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தின் ஒரு பகுதியை எதிர்வரும் 25ஆம் திகதி விடுவிப்பதாக ராணுவத்தினர் குறிப்பிட்டுள்ளனர். கேப்பாப்பிலவு கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும்...

முகமாலை பகுதியில் ராணுவத்தின் கெடுபிடியால் மக்கள் பாதிப்பு

கிளிநொச்சி முகமாலை பகுதி கடந்த வருடம் டிசம்பர் மாதம் மீள்குடியேற்றத்திற்காக கையளிக்கப்பட்டபோதிலும், ராணுவத்தின் நடவடிக்கைகளால் அங்கு நிம்மதியாக மீள்குடியமர முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏ – 9 வீதி கரையோரமாக உள்ள குறித்த காணியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், தமது காணிகளை உள்ளடக்கி வேலியமைத்துள்ளதால் தமக்கான இருப்பிடங்களை அமைக்க முடியாத நிலையில் உள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்....
Ad Widget

எம்.ஜி.ஆரின் சிலை திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டி துறை ஆலடி பகுதியிலுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 100 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த சிலை நேற்று மாலை வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்தினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த சிலை யுத்த காலத்தின் போது இராணுவத்தினரால் சேதமாக்கப்பட்ட நிலையில்...

ஓமந்தைச் சோதனைச்சாவடி முழுமையாக அகற்றப்படமாட்டாது!

வவுனியா-ஓமந்தை இராணுவ முகாம் மற்றும் ஓமந்தைச் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணிகளை விட்டு நேற்று சிறீலங்கா இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். அப்பகுதியில் கடந்த 25ஆண்டுகளாக இருந்த இராணுவ முகாம் மற்றும் சோதனைச் சாவடி அமைந்திருந்த காணிகள் நேற்று வவுனியா அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன. ஓமந்தையில் 1992ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இராணுவமுகாமே 2002ஆம் ஆண்டு வடக்கிலிருந்து தெற்குநோக்கிப் பயணிக்கும்...

வடக்குக், கிழக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மழைபெய்யக்கூடும்!

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த மழை வீழ்ச்சி நாட்டின் பல பாகங்களிலும் தற்பொழுது நிலவும் வறட்சி நிலைமைக்கு ஈடுகொடுக்க போதியதாக இருக்காது எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய இதனை தெரிவித்துள்ளார். காற்று வீசும் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக...

மாணவி துஷ்பிரயோகம்; தந்தை கைது

கொடிகாமம் தவசிக்குளம் பிரதேசத்தில், தனது மகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். 2015 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாறு துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு வருவதாக பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார், தந்தையை கைது செய்துள்ளனர். இச்சிறுமியின் தாய் கடந்த வருடம், கணவனை பிரிந்துச் சென்ற நிலையில், தந்தையுடனும் உறவினர்களுடனும் சிறுமி வசித்து வந்துள்ளார்....

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை : ஓரினச் சேர்க்கையை ஏற்றுக் கொள்ள முடியாது!

ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகையை மீள வழங்குவது குறித்து பரிந்துரை செய்யப்பட்டுள்ள செயற்திட்டங்கள் 58 இல் 6-01 இருந்து 6-08 வரையான பிரிவுகளை நீக்க தீர்மானித்துள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். இந்த பிரிவுகளில் ஓருனச் சேர்க்கை குறித்த விடயங்கள் அடங்குவதாகவும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்....

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டம்! நல்லூரில் அணிதிரள அழைப்பு!

தமிழ் நாட்டில் ஜல்லிக்கட்டிற்கான தடையை நீக்கக்கோரி தமிழகம் எங்கும் இளைஞர்கள், மாணவர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அலங்கா நல்லூரில் இரவிரவாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் மாணவர்களை நேற்று காலை பொலிஸார் கைது செய்தனர். இதனால் தமிழகம் எங்கும் மாணவர்கள், இளைஞர்கள் கொதித்தெழுந்தனர். சென்னையில் பெரும் போராட்டம் முற்றியது. மாணவர்களை விடுதலை செய்....

முன்னாள் போராளிகளின் பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் நேரடி பேச்சுவார்த்தை

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினால்ட் குரே தெரிவித்துள்ளார். கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொங்கல் விழா நிகழ்வின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ‘யுத்தத்திற்கு பின்னரான...

சிரேஸ்ட வைத்திய அதிகாரிகளின் அடாவடி! பெண் வைத்தியர் தற்கொலை முயற்சி!!

வவுனியா வைத்தியசாலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று பணிபுரியும் பெண் வைத்தியர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வெளிநாட்டில் படித்துவிட்டு பெண் நோயியல் பிரிவில் புதிதாக நியமனம் கிடைக்கப்பெற்று வவுனியா பொது வைத்தியசாலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் வைத்தியசாலை விடுதி 7 க்கு...

குடிநீர் தேவை ஏற்படின் 117 அழைக்கவும்

நிலவிவரும் வறட்சியுடனான காலநிலை காரணமாக நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், குடி நீர் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கும் வகையில், பவுசர்கள் மூலம் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், குடி நீர் பிரச்சினைகளை எதிர்நோக்குபவர்கள் 117 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை...

தமிழ் மக்கள் பேரவையில் மூன்று அரசியல் கட்சிகள் இணைவு

தமிழ் மக்கள் பேரவை எனும் சிவில் அமைப்பின் அணியில் தற்போது மூன்று அரசியல் கட்சிகள் இணைந்துள்ளன. எதிர்காலத்தில் இன்னும் பல அமைப்புக்களும் இணைவார்கள் என்று எதிர்பார்ப்பதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான மட்டக்களப்பு பிரதிநிதி ரீ.வசந்தராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவைக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் பலம் காரணமாக எம்மோடு...

வட மாகாண சபை கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு தமக்கு தேவையானவற்றை செய்யவில்லை!

வட மாகாண சபை அதிக அதிகாரங்களை கேட்கின்றது ஆனாலும் கொடுக்கப்பட்ட அதிகாரங்களுக்கு தமக்கு தேவையானவற்றை செய்யவில்லை என போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். வவுனியா, யாழ் வீதியில் அமைக்கப்பட்ட புதிய மத்திய பேருந்து நிலையத்தை மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிமல் சிறிபால நேற்று (திங்கட்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே இதனைத்...

தனியார் பேரூந்து ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்துகளை, தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஏ9 வீதியை வழிமறித்து தனியார் பேரூந்து ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். வவுனியா பேரூந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்துகளை நிறுத்துவதற்கான தரிப்பிடம் புதிதாகக் திறந்து...

ஈழத்தில் எங்களை நாங்கள் ஆளுவதே எம்.ஜி.ஆரின் விருப்பம் ; சிவாஜிலிங்கம்

தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் விரும்பியதை போன்று ஈழத்தில் எங்களை நாங்கள் ஆளும் ஆட்சியை வென்றெடுக்க வேண்டும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். தமிழகம் மற்றும் ஈழத்தின் இணைப்பு பாலமாக எம்.ஜி.ஆர். விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரனின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்று விசேட...

தொழில் முயற்சியாளர்களுக்கான புதிய கடன் திட்டம்

சிறிய, மத்தியதர தொழில் முயற்சியாளர்களுக்காக புதிய கடன் திட்டம் ஒன்றை இந்த மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்த தேசிய கொள்கை, பொருளாதார அலுவல்கள் அமைச்சு இலங்கை மத்திய வங்கியுடன் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர்கள், இளம் பட்டதாரிகள், பெண்கள், விசேட தேவையுடைய நபர்களின் நிதி மற்றும் தொழில்நுட்ப தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக இலங்கை...

58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியாகிய செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை

இலங்கைக்கு GPS+ வரிச்சலுகைகளை மீண்டும் வழங்குவதற்கு மிகப்பாரதூரமான 58 நிபந்தனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளதாக வெளியான செய்தியை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது. அரசதகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது நடைபெறும் மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு பக்கபலமாக இலங்கை ஐரோப்பிய சந்தையில் பிரவேசிப்பதற்கான வாய்ப்பை விரிவாக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம்...

ஒட்டுசுட்டானில் புனரமைக்கப்பட்ட இரண்டு குளங்கள் விவசாயிகளிடம் கையளிப்பு

ஒட்டுசுட்டானில் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தால் புனரமைக்கப்பட்ட இரண்டு நீர்ப்பாசனக் குளங்களை விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்ச்சி நேற்று திங்கட்கிழமை (16.01.2017) நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டு விவசாய அமைப்புகளின் தலைவர்களிடம் துருசுக் கதவுகளின் சாவிகளைச் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைத்துள்ளார். ஒட்டுசுட்டானில் அமைந்துள்ள வெளிவயல் குளம் மற்றும் துவரமோட்டைக் குளம் ஆகிய இரண்டு...

பொருத்து வீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு சாபம்! அங்கஜன்

பொருத்துவீட்டுத்திட்டம் தமிழ் மக்களுக்கு சாபம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தேசிய நல்லிணக்க வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலை மட்டத்தில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிகழ்வு நேற்றைய தினம் 11.30 மணியளவில் வட்டுக்கோட்டை இந்துக்கல்லூரியில் தேசிய ஒருங்கிணைப்பு நல்லிணக்க அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த...

காணாமல்போன கணவன், மனைவி! கட்டுண்டு மயங்கிய நிலையில் கணவர் மட்டும் மீட்பு

மர்மமான முறையில் கணவன், மனைவி ஆகிய இருவர் காணாமல் போகச் செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் கணவர் மட்டும் கை, கால்ககள் கட்டப்பட்டு, வாயில் பிளஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில் ஓமந் தைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை அதிகாலை, 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவது, ஓமந்தை பொலிஸாருக்கு வீதியால் சென்ற...
Loading posts...

All posts loaded

No more posts