Ad Widget

தனியார் பேரூந்து ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்துகளை, தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று ஆர்ப்பட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா ஏ9 வீதியை வழிமறித்து தனியார் பேரூந்து ஊழியர்கள் 100 க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

வவுனியா பேரூந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பேரூந்துகளை நிறுத்துவதற்கான தரிப்பிடம் புதிதாகக் திறந்து வைக்கப்பட்ட போதிலும், தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் இலங்கைப் போக்குவரத்து சபைக்குரிய பேரூந்துகள் நிறுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஏ9 வீதியின் போக்குவரத்துக்கள் சில மணிநேரங்கள் தடைப்படுத்தப்பட்டது

அக்கறைப்பற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துக்குரிய பேரூந்து மற்றும் யாழ்ப்பாணம், வவுனியா பேரூந்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் இதுவரையில் நிறைவு செய்யப்படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தின் போது வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள கடைகள் மூடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மத்தி பேரூந்து நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்காக கட்டடப்பட்ட புதிய பேரூந்து நிலையத்தை போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று திறந்துவைத்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

வவுனியாவில் புதிதாக திறக்கப்பட்ட மத்திய பேருந்து நிலையத்தில் எழுத்துப்பிழை

Related Posts