- Tuesday
- August 18th, 2026
வாகனங்களின் முன் வாயில் ஜன்னல்களில் உள்ளிருப்பவர்களை மறைக்கும் வகையிலான திரைச்சீலைகள் (curtains) அல்லது கறுப்பு நிற ஸ்டிக்கர்கள் (tints) போன்ற திரைகளை இடும் நபர்களுக்கு எதிரான சட்டம் இன்றும் முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
மல்லாகம் உப ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல் வீச்சுத் தாக்குதலில், ஒருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு காயமடைந்த நபர் குறித்த ரயிலின் ஓட்டுநர் எனத் தெரியவந்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மீதே இவ்வாறு, தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் சம்பவத்தில் காயமடைந்தவர்...
ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவாக கிளிநொச்சியிலும் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை நான்கு மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இந்தப் போராட்டம் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. யாழ். நல்லூரில் நேற்றுமாலை ஆயிரக்கணக்கான...
திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது பற்றிய பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. டெல்லி சென்றிருக்கும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சரத் பொன்சேகா, அங்கு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியொன்றில் இத்தகவலை வெளியிட்டுள்ளார். திருகோணமலை துறைமுகம் விரைவில் இந்தியாவுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். “ஆழ்கடல் துறைமுகங்களில் திருணோகமலை துறைமுகம் முக்கியமான ஒன்று. அதை இந்தியாவுக்கு...
விபத்துக்களின் போது தங்களின் உறுப்புக்களை தானம் செய்வதற்கு அனுமதி வழங்கும் சாரதிகளின் விருப்பத்தை, சாரதி அனுமதி அட்டையில் பதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்காக அனுமதி கோரும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்துள்ளார். இதன்படி, விபத்துக்களின் போது உயிரிழக்கும் சாரதிகளின் உறுப்புக்களை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான...
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி, தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு அருகாமையில் நேற்று மாலை 4.00 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 03 ஆண்டுகளாக தடைவிதித்துள்ள நிலையில், அதற்கெதிராக தமிழகத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள்...
இறுதி யுத்தத்தில் காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் சரியான தகவலை வழங்காவிட்டால் தான் சாகும்வரையான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 22ஆம் திகதி இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது கணவர் உட்பட பலரின்...
கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது பதின்ம வயது மகளைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான தந்தையை, எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன், செவ்வாய்க்கிழமை (17) உத்தரவிட்டார். 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பிலேயே தந்தை, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார். பெற்றோரைப்...
எழுவைதீவு இறங்குதுறைக்கான சுமார் மூன்று கிலோ மீற்றர் வீதி நவீன முறையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. வடக்கிற்கான விசேட கருத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இந்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். ஊர்காவற்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள இந்த வீதி நீண்ட காலமாக திருத்தப்படாது காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பிரதேச செயலகம்...
நாட்டில் நிலவும் வறட்சியினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இது தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரயதர்ஷன யாப்பா, விவசாய அமைச்சர் துமிந்த திஸாநாயக்க மற்றும் நகர திட்டமிடல் மற்றும் நீர் முகாமைத்து...
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட வாகனங்களுக்கு பெற்று கொடுக்கப்படும் புதிய குத்தகை முறை இன்று முதல் அமுலுக்கு வரவுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கு 25 வீதமும், கார் மற்றும் வேன்களுக்கு 50 வீதமும் பாரஊர்திகள் (லொரி) மற்றும் கனரக வாகனங்களுக்கு 90 வீதமும் குத்தகை திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை (21) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் மக்கள் பேரவையின் எழுக தமிழ் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவரான ரி.வசந்தராஜா தெரிவித்தார். இதன்படி, எதிர்வரும் 28ம் திகதி சனிக்கிழமை இந்த நிகழ்வினை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பிற்பகல் மட்டக்களப்பு தாண்டவன்வெளியில்...
மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், இன்றைய தினம் மக்களை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கையில் யாழ். மருத்துவ பீட மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். யாழ். பேருந்து நிலையத்திற்கு முன்பாக கூடிய மாணவர்கள், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதேவேளை, கையெழுத்துக்களையும் சேகரித்து வருகின்றனர். தனியார்...
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் அரங்கு ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நேற்று முன்தினம் (16) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. இதில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைவர் திலங்க சுமதிபால தலைமையிலான அதிகாரிகள் மண்டைதீவு பிரதேசத்தில கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான இடத்தை ஆய்வுசெய்தனர். அத்துடன் இந்த மைதான நிர்மாணப்பணிகள் இவ்வருடம் இடம்பெறும் என...
'அரசியல்வாதிகளிடம் காணப்படும் பிரச்சினைகளால், வடக்குக்கு வரும் பணம் திரும்பி செல்கிறது' என்று வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சிக்கான, இணைந்த கட்டளைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில், வட்டக்கச்சியில் நேற்று நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், 'அரசியல்வாதிகளுக்குள் இருக்கும்...
காரைநகர் போக்குவரத்து சாலைக்குச் சொந்தமான பஸ்ஸை மறித்து தாக்குதல் மேற்கொண்ட 12 பேருக்கு, தலா 4,000 ரூபாய் வீதம் 48 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், 12 பேருக்கும் 1 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 5 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பஸ் மீது தாக்குதல்...
கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் அணிதிரள வேண்டும் என்று தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. யாழ் மாவட்ட தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் செயற்பாட்டாளர் சட்டத்தரணி வானதி காண்டீபன் இது தொடர்பாக அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில், தமிழ் மக்கள் பேரவையினால் இணைந்த வடக்கு - கிழக்கில்...
நாட்டை சுற்றிப் பார்க்க ஐக்கிய அமெரிக்காவில் இருந்து இலங்கை வந்துள்ள சுற்றுப்பயணி ஒருவர் தனது செயற்பாட்டால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சம்பவமொன்று சிகிரியா பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது. டேவிட் என்பவர் ஐக்கிய அமெரிக்காவில் இருந்து சுற்றுலாப்பயணத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இவர் ஒருவார காலம் இலங்கையில் தங்கியிருந்து சிகிரியா, கண்டி, நுவரெலியா, மிரிஸ்ஸ மற்றும் சிவனொளிபாதமலை...
கிளிநொச்சி மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்று (செவ்வாய்க்கிழமை) , இணைத்தலைவர்களான நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அங்கஜன் ராமநாதன், வடமாகாண பதில் முதலமைச்சர் பொ.ஜங்கரநேசன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம அறிமுக உரையுடன் ஆரம்பமான இந்த கூட்டத்தில், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினால் மாவட்டத்தின் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் வயல்கள் அழிவடைந்துள்ள...
ஒரே பிரசவத்தில் இரு ஆண் குழந்தை மற்றுமொரு பெண் உட்பட மூன்று குழந்தைகள் பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை விடுதி 22 இல் சத்திரசிகிச்சையின் மூலம் 3 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன. மகப்பேற்று பெண்ணியல் நிபுணர் கே. சுரேஸ்குமார் குறித்த சத்திரசிகிச்சையினை மேற்கொண்டுள்ளார் ஊர்காவத்துறை பகுதியைச் சேர்ந்த வசீகரன் காயத்திரி தம்பதியினருக்கே...
Loading posts...
All posts loaded
No more posts
