இறுதி யுத்தத்தில் காணாமல் போனோர் தொடர்பாக அரசாங்கம் சரியான தகவலை வழங்காவிட்டால் தான் சாகும்வரையான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 22ஆம் திகதி இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த தனது கணவர் உட்பட பலரின் தொடர்பு இதுவரை கிடைக்கவில்லை.
இவ்வாறு காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதாவது காணாமல் போன தமது உறவுகளை தேடிக்கண்டுபிடிக்கவேண்டிய தேவை அவர்களுக்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.