- Tuesday
- August 18th, 2026
யாழ். மாவட்ட பனை அபிவிருத்தி சபையின் கீழ் இயங்கி வந்த திக்கம் வடிசாலை வடக்கு மாகாண சபையின் ஆளுகையின் கீழ் கொண்டு வர இணக்கம் காணப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு தொடக்கம் திக்கம் வடிசாலையில் பணியாற்றிய ஊழியர்கள் 23 பேருக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என இன்றைய தினம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பனை அபிவிருத்தி...
தமிழ் மக்களுக்கு ஏற்பு இல்லாத ஒரு தீர்வினை, அவர்களது பிரச்சினைக்கு தீர்வாக அமையாத ஒரு தீர்வினை ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென தெரிவித்துள்ள எதிக்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், தீர்வு விடயத்தில் அவசரப்பட்டு ஒரு முடிவினை எடுக்கமுடியாது என்றும் இதனை தமிழ் மக்கள் மிகவும் கவனமாக சிந்திக்கவேண்டும் எனவும்...
வங்காள விரிகுடாவிலேயே பிரதான துறைமுகமாக திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெறுகின்ற உலக பொருளாதார மாநட்டில் கலந்து கொள்ள சென்றுள்ள பிரதரமர், இந்தியாவின் என்.டி.டீ.வி. இற்கு வழங்கியுள்ள செவ்வியில் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது திருகோணமலையின் திட்டமிடல் நடவடிக்கைகள் சிங்கப்பூரினால் மேற்கொள்ளப்படுவதாகவும், அது...
கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள் உள்ளன. அதுவொரு ஆரம்ப பாடசாலை. 2016 இல் கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் இருந்து வெளியேறிய கனுசியா டிசம்பர் பாடசாலை விடுமுறை...
தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் எமது மக்களை நாங்களே ஆளக்கூடிய வகையிலான உரிமையினை ஏற்படுத்தும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றும்போதே அவர்...
மத்திய அரசாங்கம் தம் நல்லெண்ணத்தை வெளிகாட்டும் ஒரு சில நடவடிக்கைகளை மாத்திரமே வடமாகாணத்தில் மேற்கொண்டிருக்கின்றது. அதனைவிட ஏனைய பெரும்பாலான விடயங்கள் தாங்கள் நினைப்பதை எங்களின் விருப்பத்தை அறியாமல் எங்கள் மீது திணிப்பதாகவே இருக்கின்றது என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார். நெடுந்தீவுக்கான போக்குவரத்து படகு நெடுந்தாரகை இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) வெள்ளோட்டம்...
ஜல்லிக்கட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று கிளிநொச்சியில் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டத்தினை கிளிநொச்சி மாவட்ட கல்வி கலாசார அமையம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந் பெருமளவான இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழக மக்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக போராட்டத்தில்...
ஐநாவில் சிறீலங்கா தொடர்பான விவாதத்தை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பிற்போடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் சிறீலங்கா அரசாங்கம் ஐநாவைக் கோரியுள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் சமஸ்டி ஆட்சி எமக்கு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லையெனவும், ஒற்றையாட்சியின் கீழே தீர்வு கிடைக்கும் என்பதும் நன்றாகவே புலப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்....
கிளிநொச்சியில் நேற்று மாலை ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கெதிரான போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வீடுதிரும்பிய ஊடகத்துறை மாணவன் ஒருவன் விபத்தில் பலியானார். ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதுமாக போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. தமிழகத்துக்கு ஆதரவாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு உந்துருளியில் வீடுதிரும்பிக்கொண்டிருந்த சுப்ரமணியம் முரளீதரன் என்ற ஊடகத்துறை...
நெருங்கிய உறவினரிடையேயான பாலுறவு, பலவந்தப் பாலுறவு, சிறுவயதுக் கர்ப்பம், கருவில் கடுமையான குறைபாடு ஆகிய நிலைமைகளில் கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்க, அமைச்சரவையில் அங்கிகாரம் கோரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் தொடர்பான குழுவும் சாவித்திரி குணசேகர தலைமையிலான இன்னொரு குழுவும், கருக்கலைப்பை குற்றவியல் குற்றமாக்கும்படி செய்த பரிந்துரைகளுக்கு அமைய, நீதியமைச்சு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இந்தக் குழு, 1995ஆம் ஆண்டில் ஒரு...
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை பொது மக்களிடம் நேற்று கையளித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு அமைவாக நிலைபேறான மூன்றாவது வருடத்தை ஆரம்பிப்பேம் என்ற தொனிப்பொருளிலான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இன்று முன்னெடுத்துள்ள திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு...
குறிகட்டுவான் நெடுந்தீவுக்கிடையிலான நெடுந்தாரகை பயணிகள் படகு போக்குவரத்து சேவை இன்று ஆரம்பமாகிறது. இதுதொடர்பான நிகழ்வில் இலங்கைக்கான அவூஸ்ரேலியத் தூதுவர் , உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கை படகுகட்டுமான நிறுவனமான டொக்கியாட் நிறுவனத்திளால் இந்த நெடுந்தாரகை பயணிகள் படகு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு 150...
வறட்சிக் காலநிலை நீங்கி மழைவேண்டி மலையகத்தில் உள்ள ஆலயங்களில் தண்ணீர் ஊற்றி பூஜைவழிபாடுகளில் பொதுமக்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். லிந்துலை டில்குற்றி தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று ஆலயத்தில் சுற்று வட்டாரங்களுக்கும் சுவாமி விக்ரங்களுக்கும் நீராபிஷேகம் செய்யப்பட்டது. இதில் இத்தோட்ட மக்கள் தண்ணீர் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதேவேளை நாட்டில் காலநிலையில் இன்று முதல் மாற்றம் நிலவவுள்ளதாக...
கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். பரந்தன் பகுதியிலிருந்து புளியம்பொக்கணையில் அமைந்துள்ள இளைஞனின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது, எதிர் திசையில் மணல் ஏற்றி வந்த லொறி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பணித்த இளைஞன் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்....
சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போகின்றேன் என சில இணைய தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார். காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் சரியான பதிலை வழங்காது விடின் அனந்தி சசிதரன் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் , எதிர்வரும் 21ம் திகதி அவர் தனது போராட்டத்தை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜ் ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணியற்றவர்களிடமிருந்தும் பொருத்து வீட்டுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என பொது அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. பொருத்து வீடுகள் முற்றிலும் பொருத்தமற்றது என வடக்கில் எல்லோராலும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் மீள்குடியேற்ற அமைச்சு மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள் ஊடாக பெருத்து வீட்டுக்கு விருப்பம் தெரிவிக்கின்றவர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று வருகிறன. அந்த வகையில் கிளிநொச்சி...
பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பன் பகுதியில் இருந்து 81 ரக மோட்டார் குண்டுகள் இரண்டு இன்று (19) மீட்கப்பட்டதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். அம்பன் கிழக்கு பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து இந்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு, அங்கு சென்ற பொலிஸார் குறித்த குண்டுகளை மீட்டுள்ளனர்....
வடக்கில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், யாழில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இதுகுறித்து வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியை வளர்ப்பதற்காகவா வடக்கு மக்களுக்கு பொருத்து வீட்டுத் திட்டத்தினை திணிக்கின்றீர்கள் என இதன்போது ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் ராஜாங்க...
யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 50 மில்லியன் ரூபா பெறுமதியான வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தக்காரர்களை நியமிப்பது, பெரும் சவாலாக உள்ளதென யாழ். அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த வேலைத்திட்டங்களில் குறிப்பாக வறட்சி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகிய திட்டங்களை...
Loading posts...
All posts loaded
No more posts
