கிளிநொச்சி புளியம்பொக்கணை பகுதியில் நேற்று இரவு 7.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
பரந்தன் பகுதியிலிருந்து புளியம்பொக்கணையில் அமைந்துள்ள இளைஞனின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது, எதிர் திசையில் மணல் ஏற்றி வந்த லொறி மோதியதில் மோட்டார் சைக்கிளில் பணித்த இளைஞன் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
புளியம்பொக்கனை கண்டாவளையை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் என்ற 24 வயதுடைய இளைஞரே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.