Ad Widget

ஐநாவில் தமிழர் விவகாரத்தை பிற்போடுவதற்கு அரசாங்கத்துடன் கூட்டமைப்பு இணைந்து செயற்படுகின்றது!

ஐநாவில் சிறீலங்கா தொடர்பான விவாதத்தை இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பிற்போடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் சிறீலங்கா அரசாங்கம் ஐநாவைக் கோரியுள்ளதாக தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் சமஸ்டி ஆட்சி எமக்கு ஒருபோதும் கிடைக்கப்போவதில்லையெனவும், ஒற்றையாட்சியின் கீழே தீர்வு கிடைக்கும் என்பதும் நன்றாகவே புலப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 28ஆம் நாள் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் ஆதரவுடன் ஒன்றையாட்சி முறையை அழுல்படுத்தும் நடவடிக்கைகளை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related Posts