நாளை வடக்கு விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா

வடமாகாண விவசாய அமைச்சின் 2017 ஆம் ஆண்டுக்கான உழவர் பெருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை (22.01.2017) கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் மாலை 4 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்நிகழ்ச்சியில் வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த, 'பூமியை மீளுயிர்ப்பூட்டும்...

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சாவகச்சேரி கச்சாய் பகுதியில் படி ரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை (19) காலை இடம்பெற்ற விபத்தில் உதயகுமார் வினோத்குமார் (வயது 31) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரழந்துள்ளார். சாவகச்சேரி பகுதிக்கு சென்று விட்டு கச்சாயிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற போதே குறித்த...
Ad Widget

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யாழில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்ககோரி இன்றைய தினம் காலை யாழ். இந்திய துணை தூதரகத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதுடன் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படுகின்றது.

 தேசிய தமிழர் பண்பாட்டு பேரவையின் ஒழுங்கமைப்பில் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்.பொது நூலக முன்றலில் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையுடன்...

மதச்சார்பற்ற நாடாக இலங்கை மிளிரவேண்டும் ; சம்பந்தன்

இலங்கையிலுள்ள அனைத்து மக்களும் விரும்பக்கூடியதும் பாரபட்சம் அற்றதும் சமய அங்கீகாரத்துடன் கூடிய மதச் சார்பின்மையில் நாம் இணைந்து செயற்பட வேண்டும் அதுவே நாட்டில் சிறந்த சுழலை ஏற்படுத்தும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் உள்ள சமய புறக்கணிப்பு எதிர்காலத்தில்...

வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு

வட மாகாணத்தில் வரட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வரட்சியினால் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ள கிராமங்களுக்கு உடனடியாக குடிநீரை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாணத்தில் வரட்சியானல் பெருமளவு விவசாயம் அழிவடைந்துள்ளதுடன், பல கிராமங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த...

கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்களை வெளியேறுமாறு நிர்வாகம் அறிவிப்பு!

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரையும் பல்கலைக்கழகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்திற்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் செயற்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் குற்றம்சாட்டியுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் இரண்டாம், மூன்றாம் வருட மாணவர்களின் விடுதி வசதிகள் நீக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விடுதி வசதிகள் நீக்கப்பட்டமைப்கு எதிர்ப்புத் தெரிவித்து...

வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க திட்டம்

வடக்கு மாகாணத்தில் இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “இலத்திரனியல் முறையில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் வாகன வருமான வரி...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொழும்பு காலி முகத்திடலில் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. தமிழர்களின் கலாசாரம் என்ற ரீதியில் ஜல்லிக்கட்டுக்கு இந்தியாவின் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் பல தரப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இலங்கையிலும் தமிழ் இளைஞர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்திரல் ஈடுபட்டு வருகின்றனர்.

யாழில் போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட 5 சந்தேக நபர்கள் கைது!

வல்வெட்டிதுறை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்கள் அச்சிட்ட 5 சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 தொடக்கம் 27 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சந்தேக நபர்கள் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி மதுபானம் வாங்கும்...

எம் தமிழ் இன துரோகிகளை வீட்டுக்கு அனுப்புவோம்: ஜனநாயகப் போராளிகள்

தமிழ் மக்களுக்காக உயிரையும் கொடுக்க எமது அணி தயாராக இருக்கின்றது என ஜனநாயகப் போராளிகளின் கட்சி செயலாளர் இரா. கதிர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடி வெய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலைய மண்டபத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், ”கடந்த கால...

வட மாகாண சபை சாதனை

வட மாகாண சபையில் 81 கூட்டத் தொடர்களில் 321 பிரேரணைகளை நிறைவேற்றி சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2013 ஆம் ஆண்டு சி.வி. விக்னேஷ்வரன் தலைமையில் அமைக்கப்பட்ட வட மாகாண சபையில் இடம்பெற்ற கூட்டத்தொடர்களிலேயே இவ்வாறு பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதில் அதிகமான தீர்மானங்கள் இலங்கை அரசாங்கத்துக்கும், இராணுவத்துக்கும் எதிரானவை எனவும் கூறப்படுகின்றது. இந்த பிரேரணைகளில் அதிகமானவை...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துமாறு கூட்டமைப்பிடம் கோரிக்கை

பல வருடங்களாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்ய தமிழ் தேசிய கூட்டமைப்பு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கண்டி போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 18 தமிழ் அரசியல் கைதிகளை கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

முல்லைத்தீவு புலக்குடியிருப்பு கிராமத்தில் மீள்குடியேற்றுமாறு மக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு கேப்பாபுலவு கரைதுரைபற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட புலக்குடியிருப்பு கிராமத்தில் 64 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் காணப்படுவதாகவும் அவற்றில் தங்களை மீள்குடியேற அனுமதிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாக கடந்த 2008 ஆம் ஆண்டு சொந்த நிலங்களிலிருந்து வெளியேறிய மக்கள் மீண்டும் 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி மாதிரிக் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டனர்....

மாகாணசபை என அழைக்காது மாகாண அரசாங்கம் என அழையுங்கள்: சுமந்திரன்!

மாகாண சபைகள் என சொல்லப்படாமல் மாகாண அரசாங்கம் என சொல்லப்பட அழைப்பதுதான் உகந்தது. அதைவிட பிராந்திய அரசாங்கம் என்று சொல்லப்படவேண்டிய காலம் விரைவிலே வரவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றய தினம் நெடுந்தாரகை படகுச் சேவையினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் . இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....

புனர்வாழ்வளிக்கப்பட்ட 61 பயனாளிகளுக்கு சுயதொழில் கடன் வழங்கப்பட்டுள்ளது

புனர்வாழ்வளிக்கப்பட்ட 61 பயனாளிகளுக்கு சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு நேற்றய தினம்(20) யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா. செந்தில்நந்தனன் தலைமையில் இடம்பெற்றது. கடற்றொழில், மாடு வளர்ப்பு, கணனி , மின்னியல், தையல், தச்சு வேலை போன்ற துறைகளில் சுயதொழில் புரியவுள்ள காரைநகர் பிரதேச செயலக பிரிவினைச்சேர்ந்த 17 பேர்...

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கிழக்கு எழுகதமிழ் பெப்ரவரி 10 ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. இதுதொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளையும் அன்றாட ஒடுக்குமுறைகளையும் மக்கள் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்தும் ஜனநாயக எழுச்சியான எழுகதமிழ் நிகழ்வானது கிழக்கு மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தினத்தில் இருந்து தவிர்க்க முடியாத காரணங்களால் எதிர்வரும் மாசி...

நெடுந்தாரகை கப்பலின் முதல்ப்பயணம்! வடமாகாண சபையின் செயற்பாடுகளில் முக்கியமான ஒரு நிகழ்வு

நெடுந்தாரகை கப்பலின்முதல்ப் பயணம் குறிக்கட்டுவான் – நெடுந்தீவு 20.01.2016 வெள்ளிக்கிழமை காலை 09.30 மணியளவில் முதலமைச்சர் உரை குருர் ப்ரம்மா……………………………………… கௌரவ ஆளுநர் அவர்களே, அமைச்சர் கௌரவ பை(க)சர் முஸ்தபா அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மேன்மை தங்கிய Bryce Hutchesson அவர்களே, அவுஸ்திரேலியா நாட்டின் இலங்கைக்கான முதன்மைச் செயலாளர் அவர்களே, உலக வங்கியின்...

இறக்குமதி அரிசியை 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாது

இறக்குமதி செய்யப்படும் அரிசியை எக்காரணங் கொண்டும் 76 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்ய முடியாதென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தனியார் வர்த்தகர்கள் மற்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் விரும்பிபடி அரிசி விலையை அதிகரித்து பொதுமக்களை அசௌகரியத்துக்குள்ளாக்க முடியாது எனத் தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்க...

மனித உரிமை விவகாரங்களில் இலங்கையின் முன்னேற்றம் மகிழ்ச்சியளிக்கிறது

இலங்கையின் மனித உரிமை விவகாரங்களில் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற சாதகமான முன்னேற்றங்களுக்காக தான் மகிழ்ச்சி தெரிவிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சைய்த் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களின் அனைத்து உரிமைகளையும் பாதுகாக்கும் மற்றும் உறுதிப்படுத்தும் வேலைத்திட்டங்களின் நிலையானதாக முன்னெடுத்துச் செல்வது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் எதிர்பார்ப்பாகும் என்று அவர்...

விளையாட்டினால் இரு சகோரதர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்

வவுனியா - பாரதிபுரம் ஐம்பது வீட்டுத்திட்டம் பகுதியில் விளையாட்டு விபரீதமாகியதில் இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நேற்று மாலை மரத்தில் கயிற்றினைப் போட்டு அதை கழுத்தில் கட்டி விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராமல் கயிறு கழுத்தில் இறுகியுள்ளது. உடனடியாக இரு சகோதரர்களும் அயலவர்களின் உதவியுடன்...
Loading posts...

All posts loaded

No more posts