ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக யாழில் உண்ணாவிரதப் போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்ககோரி இன்றைய தினம் காலை யாழ். இந்திய துணை தூதரகத்தில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதுடன் உண்ணாவிரத போராட்டமும் நடத்தப்படுகின்றது.



தேசிய தமிழர் பண்பாட்டு பேரவையின் ஒழுங்கமைப்பில் இந்த மகஜர் கையளிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்.பொது நூலக முன்றலில் இன்று காலை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையுடன் இணைந்து வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோரும் இந்த ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கோரி யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜனிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர்.



இந்நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்ககோரி யாழ். பொது நூலகம் முன்பாக ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டமானது, தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related Posts