- Tuesday
- August 18th, 2026
தற்போது நடைமுறையில் இருக்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் உடன் ரத்துச் செய்ய வேண்டும் என்றும் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில், சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் சட்டத்தரணி ஒருவர் அவரை சந்திப்பதற்கு முன்னர் வாக்குமூலம் பதிவுசெய்யப்படும் நடைமுறையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் ஜூவான் மெண்டஸ் குறிப்பிட்டுள்ளார். கடந்த...
ஜல்லிக்கட்டு மிருவதை அதனை ஏற்க முடியாது. என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகவியளாலர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தன்னெழுச்சி போராட்டத்தை வரவேற்கிறேன். ஆனால் ஜல்லிக்கட்டு மிருகவதை. எனவே...
யாழ்ப்பாணம், எழுவைதீவு, நயினாதீவு ஆகிய தீவுகளில் வாழும் மக்களுக்காக இலங்கை கடற்படையினால் அமைக்கப்பட்ட உவர்நீரை நன்னீராக்கும் (ஆர்.ஓ பிளாண்ட்) திட்டம், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஐய குணரட்னவினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. எழுவை தீவுக்கான இறங்குதுறை அமைக்கும் பணியில் கடற்படையினர் பணியாற்றிய போது கிடைத்த சம்பளத்திலேயே இந்த நன்னீராக்கும் திட்டம் எழுவைதீவு,...
கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து மாணவர்களை வெளியேற்றுவதை நிறுத்துமாறு கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மட்டக்களப்பு வந்தாறுமூலை ஏறாவூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றைய தினம் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'விடுதி மாணவர்களை வெளியேற்றுவதை நிறுத்து, சகல பல்கலைக்கழக மாணவர்களுக்கும் விடுதி வசதிகளைப் பெற்றுக் கொடு' என்ற வாசகங்களைத் தாங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதுடன் அந்த சுவரொட்டிகளில் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்...
கொக்குவில் பகுதியில் இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் நேற்று மாலை கொக்குவில் மேற்கு கேணியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் சிலர் மது அருந்திய நிலையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஏற்பட்ட கருத்து மோதலானது கைகலப்பாக மாறிய நிலையில் இளைஞர்களுக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு அது...
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். வவுனியாவிலுள்ள முருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொண்ட பின்னர் பேரணியாக சென்று வவுனியா மாவீரன் பண்டாரவன்னியன் உருவச்சிலைக்கு முன்பாக சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட...
இயற்கையைப் போற்றுவதற்கும், பூமிக்கு மழையை வழங்குவதற்கு உதவுகின்ற சூரிய பகவானை துதிப்பதற்கும், முற்றி விளைந்த நெற் கதிர்களை பெற்றுக்கொள்வதற்கு உதவிய உழவர்களைப் பாராட்டுவதற்கும், உழவுத் தொழிலுக்கு உதவிய எருதுகளை வணங்கித் தட்டிக் கொடுப்பதற்கும் ஏற்ற ஒரு தமிழர் திருநாளாக தைப்பொங்கல் இருந்து வருகின்றது என வடமகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில்...
கிளிநொச்சி மாவட்டம் திருவையாறுப் பிரதேசத்தில் மீண்டுமொரு முன்னாள் போராளி கைதாகியுள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட கராளசிங்கம் குலேந்திரன் என்பரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காப்புறுதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்த குறித்த முன்னாள் போராளி கடந்த வாரம் வெளியில் சென்றிருந்தபோது பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு தற்போது வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. புனர்வாழ்வு...
சகோதரியின் வங்கி கணக்கில் இருந்து போலியான கையெழுத்து மற்றும் அடையாள அட்டையினை காண்பித்து 45ஆயிரம் ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்ட பெண்ணைத் தேடி தெல்லிப்பழை பொலிஸார் வலை விரித்துள்ளனர். மணற்குளம் அளவெட்டி தெற்கு பகுதியினை சேர்ந்த பெண்ணுக்கு சமூர்த்தி வங்கியில் இருந்து கிடைத்த பணத்தை, அளவெட்டி பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றில் வைப்பிட்டுள்ளார். இதனையடுத்து, கடந்த...
வடமராட்சி கிழக்கு பகுதியில் போலி நாணயத்தாளை அச்சடித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 4 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை,பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி கந்தசாமி, சனிக்கிழமை (21) மாலை உத்தரவிட்டார். வல்வெட்டித்துறை விடுதி ஒன்றில் வௌ்ளிக்கிழமை போலி நாணயத்தாளை வழங்க முற்பட்ட நபர் பொலிஸாரால் கைது...
வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடபுல முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதாகவும் முஸ்லிம்களைப் புறக்கணித்துவிட்டே வடமாகாண சபையின் அரசியலை அரங்கேற்றுவதாக, சிலர் முன்வைத்து வருகின்ற விமர்சனங்களை மறுப்பதாக, வடமாகாண சபை உறுப்பினர் முகமது றயீஸ் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 'வடக்கு முதல்வர், ஒருபோதும் வடக்கு முஸ்லிம்களின் எதிராளி அல்ல. முஸ்லிம்கள் தொடர்பாக முதலமைச்சர்...
இலங்கையை சுற்றி, 1268 கிலோ மீற்றர் தூரத்தை நடந்தே கடப்பதற்கான முயற்சியில், தேவிகா காசிஷெட்டி என்ற பெண் இறங்கியுள்ளார். தனது நடைபயணத்தைக் கடந்த 10ஆம் திகதியன்று கதிர்காமம் கிரிவேஹர விகாரைக்கு அண்மையில் ஆரம்பித்த இவர், காலி மாவட்டத்தில் உள்ள அஹங்கம நகரத்தை நேற்றுக் கடந்தார். தனது பயணத்தை எதிர்வரும் மே மாதத்தன்று, கதிர்காமம் கிரிவேஹர விகாரையிலேயே...
விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகள் இணைத்துககொள்ளப்படவுள்ளனர். இதற்கான அறிவித்தல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகியுள்ளது. அமைச்சர் அகில விராஜ் காரியவசமின் பணிப்புரைக்கமைய, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளிலும் விஞ்ஞானம் மற்றும் கணித பாட ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் இந்த வருடத்திற்குள் பூர்த்திசெய்யப்படவிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாரச்சி தெரிவித்தார். போட்டிப்...
கிளிநொச்சி - உதயபுரத்தை சேர்ந்த தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவர் நீண்ட நாட்களாக பாடசாலை அனுமதியின்றி அலைந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் அவர்களின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. குறித்த குடும்பத்தாருடன் இது தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் அம்மாணவியை கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் (கனிஸ்ர) சேர்த்துக்கொள்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு...
முல்லை – பரந்தன் வீதியில் வெளிச்சம் இல்லாத நிலையில் சட்டவிரோதமாக மண் ஏற்றி வரும் மண் டிப்பர்களை உரியவர்கள் தடுத்து நிறுத்துவார்களா என்று மக்கள் கேட்கின்றனர். அண்மையில் யாழ் பல்கலைக்கழக ஊடக வள நிலையத்தின் இதழியல் டிப்ளோமாதாரியான மாணவர் ஒருவர் மண் டிப்பர் மோதி பலியானார். புளியம்பொக்கனை கண்டாவளைபகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் முரளிதரன் (வயது 24)...
மாங்குளம் பிரதான வீதியில் விசேட அதிரடிப்படையினரின் வாகனமொன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சமய போதகர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் ஒட்டுச்சுட்டான் 17ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 60 வயது நிறைந்த போதகர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார். குறித்த போதகர் கிளிநொச்சி மாவட்ட...
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களிலும் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் மக்கள் பெரிதும் இன்னல்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், நேற்று முதல் மழை பெய்ய ஆரம்பித்துள்ளமையானது மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. வறட்சியால் நிலம் காய்ந்து பயிர்ச்செய்கைகள் பாதிக்கப்பட்டதால், விவசாயிகள் விளைச்சலை இழந்ததோடு பல பிரதேசங்களில் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது மழை பெய்ய ஆரம்பித்துள்ளமையானது...
கிளிநொச்சி – உருத்திரபுரம் காந்தி சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் கடந்த 17 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக காந்தி சிறுவர் இல்லத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது. இவ்வாறு காணாமல் போனவர்கள் 14 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது....
தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களின் சங்கத்தினர் சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். நான்கு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து போராடப்போவதாக அறிவித்துள்ள அச்சங்கத்தினர் அது தொடர்பான கடிதத்தினை ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில்விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளனர். குறித்த உணவுத்...
பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை 8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி அச்சம் எழுந்துள்ளது. புவியல் அமைப்பின்படி ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா மற்றும் சாலமன் தீவுகளில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவின்...
Loading posts...
All posts loaded
No more posts
