மாங்குளம் பிரதான வீதியில் விசேட அதிரடிப்படையினரின் வாகனமொன்று மோட்டார் சைக்கிளில் மோதியதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த சமய போதகர் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்ற இவ் விபத்தில் ஒட்டுச்சுட்டான் 17ஆம் கட்டை பகுதியைச் சேர்ந்த 60 வயது நிறைந்த போதகர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
குறித்த போதகர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பான மேலதிக விபரங்களை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்;.