கொக்குவில் பகுதியில் இளைஞர்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த மோதல் சம்பவம் நேற்று மாலை கொக்குவில் மேற்கு கேணியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் சிலர் மது அருந்திய நிலையில் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு ஏற்பட்ட கருத்து மோதலானது கைகலப்பாக மாறிய நிலையில் இளைஞர்களுக்கு இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு அது கைலப்பாக மாறியுள்ளது.
இதனை தொடர்ந்து சில இளைஞர்கள் தம்மோடு முரண்பட்டுக்கொண்ட ஏனைய இளைஞர்களது வீட்டின் மீது தாக்குதல் நடாத்தியிருந்ததுடன் வீடுகளில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளனர்கள்.
இதனால் மூன்று பேர் படுகாயமைந்துள்ளதுடன் வீடுகளில் காணப்பட்ட பொருட்கள் சேதமடைந்துள்ளன.
படுகாயமடைந்த மூன்று பேரும் வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.