யாழில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய தூதரக அலுவலகம் [Consular Office] ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அலுவலகம் யாழ்மாவட்ட செயலகத்தில் நாளை 26ம் திகதி காலை 10.00 மணிக்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்துவைக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தனிமையில் இருந்த கர்ப்பிணிப் பெண் வெட்டிக்கொலை; இருவர் கைது

ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண், கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். 7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் மீதே இவ்வாறு கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு குழந்தையின் தயான இப்பெண்ணின் வீட்டுக்குள், திருடும் நோக்கோடு இன்று மதியம் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், கோடாரியால் கொத்தியுள்ளனர். இரத்த...
Ad Widget

ஜல்லிக்கட்டுக்கு வழங்கிய ஆதரவை காணாமல் போனோர் விவகாரத்திற்கும் வழங்குங்கள்

காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினையில் அரசாங்கம் இதுவரை எவ்வித தீர்மானத்தையும் அறிவிக்காத நிலையில், அண்மையில் இளைஞர்கள் ஒன்றுதிரண்டு ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு வழங்கியதைப் போன்று காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில்...

காலநிலையில் மாற்றம்! பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!

இலங்கைக்கு அண்மித்த வளிமண்டலப்பரப்பில் ஏற்பட்டுள்ள அலை வடிவான வளிமண்டல குழப்பத்தின் தாக்கத்தினால், நாட்டின் அநேகமான பகுதிகளில் காற்றுடனான காலநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்வு கூறப்படுகிறது.மேலும் இடிமின்னலும் அதிகமாக காணப்படும் நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுமாறு கோரப்பட்டுள்ளது.

கரவெட்டி இளைஞன் ஆபிரிக்காவில் அடித்து கொலை!

சுவிற்ஸர்லாந்துக்குச் செல்வதற்காக, யாழ்ப்பாணத்தில் இருந்து கடந்த வருடம் சென்ற கரவெட்டி பகுதியைச் சேர்ந்த ம.ரவிசங்கர் என்ற இளைஞன், மேற்கு ஆபிரிக்காவில் வைத்து அடித்துக் கொல்லப்பட்டுள்ளார் என, நெல்லியடி பொலிஸ் நிலையத்தில், திங்கட்கிழமை (23) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேற்கு ஆபிரிக்காவிலுள்ள கடற்கரை பிரதேசமான சியாரா லியோன் என்ற பகுதில் வைத்தே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். யுத்தத்தின் போது,...

முல்லைத்தீவில் குழவி கொட்டுக்கு இலக்கான மாணவர்கள்

முல்லைத்தீவு விஸ்வமடு மகா வித்தியாலயத்திற்கும் விசுவநாதர் ஆரம்ப வித்தியாலயத்திற்கும் இடையில் உள்ள மரத்தில் இருந்த குளவிக்கூடு நேற்று (23) கலைந்ததன் காரணமாக விசுவநாதர் ஆரம்ப வித்தியாலய மாணவர்கள் 30 பேரும் ஆசிரியர்கள் 5 பேரும் பாதிக்கப்பட்டனர். விஸ்வமடு மகா வித்தியாலய மாணவர்கள் 9 பேரும் ஆசிரியர்கள் 2 பேரும் குலவிக்கொட்டுக்கு இலக்காகி அவசர நோயாளர் காவுவண்டிகள்...

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளுக்கு புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!

காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் சாகும்வரையிலான உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புலனாய்வுத் துறையைச் சேர்ந்த சிலர் கமராவுடன் வருகை தந்து அவர்களை புகைப்படம் எடுத்துள்ளதோடு, அச்சுறுத்தலும் விடுத்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை தடைசெய்து...

கடும் மழைக்கு மத்தியில் மக்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் யுத்தத்தின்போதும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும் காணாமல் போகச் செய்யப்பட்ட தமது உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களை சேர்ந்தோர் வவுனியா ஏ 9 வீதியில் பிராதான தபாலகத்திற்கு முன்பாக இன்று இரண்டாவது நாளாகவும் காலவறையற்ற உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். வவுனியாவிலுள்ள முருகன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை...

சாகும்வரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குணி வைத்தியசாலையில் அனுமதி!

தலதா மாளிகைக்கு முன்னால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பிக்குணியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதையடுத்து கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதிய அரசியலமைப்புத் திருத்தம் மூலம் நல்லாட்சி அரசாங்கம் நாட்டைப் பிரிக்கமுயல்வதாகக் கூறி குறித்த பிக்குணி சாகும் வiரையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார். எனினும், இவர் தன்னை யார் என்று வெளிப்படுத்தவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும்...

மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்டத்துக்கு 250 பேர் தெரிவு

நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள வீடுகளுக்கான 250 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதனையடுத்து, இம்மாதம் 30 ஆம் திகதி வீடமைப்பு அமைச்சரினால் வீடுகளுக்கான அத்திவாரம் இடும் நிகழ்வு இடம்பெறவுள்ளதென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வருடங்களாக குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களின்...

கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கிழக்கு பல்கலைகழகத்தில் இடை நிறுத்தப்பட்டுள்ள விரிவுரைகளை மீண்டும் ஆரம்பிக்க கோரி, பல்கலைக்கழத்தின் பிரதான வயிலுக்கு முன்னால் நேற்றையதினம் (23) ஒன்றுகூடிய மாணவர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு பல்கலைகழக மாணவர்களின் விடுதி உரிமைப் போராட்டம் காரணமாகப் பல்கலைகழகத்தில் விரிவுரைகள் இடை நிறுத்தப்பட்டுள்ளனன. முன்னதாக கடந்த சனிக்கிழமை, மாணவர்கள் அனைவரையும் பல்கலைகழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டிருந்தது....

சொகுசு காரில் கஞ்சா: மூவர் கைது

தலைமன்னாரில் இருந்து மன்னார் ஊடாக கொழும்புக்கு, அதி சொகுசு கார் ஒன்றில் மறைத்து வைத்து கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி கேரள கஞ்சாப் பொதிகளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் வைத்து காரை மறித்து...

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள்

போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள் புளக்கத்தில் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இதனால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கையின் போது மிக அவதானத்துடன் இருக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர். களுத்துறை வடக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலரினால் அச்சிடப்பட்ட போலி ஐயாயிரம் ரூபா கள்ள நாணயத்தாள்கள் தரகர்கள் மூலம் புளக்கத்தில் விடப்பட்டுள்ளன. இது குறித்து மிக விழிப்புடன் செயற்படுமாறு,...

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்

2016-2017 பல்கலைக்கழக கல்வி ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாத ஜிசிஈ உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆணைக்குழுவின் செயலாளர் பிரியந்த பிரேமகுமார தெரிவிக்கையில்:...

இலங்கை கொடுத்தாலும் இந்தியா வாங்கத் தயாரில்லையாம்!

திருகோணமலைத் துறைமுகத்தின் பொறுப்பை இந்தியாவுக்கு வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களை இந்திய அரசாங்கம் மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. முன்னதாக, திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிஸர்லாந்து விஜயத்தின் போது, இந்திய...

வட. மாகாண ஆசிரியர்களுக்கான பணித்தடை உத்தரவு, ஜனநாயகத்தை நசுக்கும் செயற்பாடு: ஆசிரியர் சங்கம்

வெளி மாவட்டங்களில் பணியாற்றும் தங்களுக்கு இடமாற்றம் பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டம் நடத்திய வடக்கு மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளரால் பணித்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையானது ஜனநாயகத்தை நசுக்கும் செயற்பாடாகுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமக்கான இடமாற்றத்ததை வலியுறுத்தியும் சில ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணித்தடையை விலக்குமாறு கோரியும் வடக்கு...

திருமலை மக்களும் போராட்டத்தில் குதித்தனர்

கடத்தப்பட்டு காணாமல் போன மற்றும் ராணுவத்திடம் சரணடைந்த நிலையில் காணாமல் போன உறவுகள் தொடர்பான உண்மைத் தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திருகோணமலையில் அடையாள உண்ணாவிரத போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) நண்பகல் முதல்...

சம்பந்தனை எதிர்க்கும் பிரிவினை மனோபாவம் கொண்டவன் நான் அல்ல

வெளிநாட்டுக்கு செல்ல வேண்டாம் என இலங்கை எதிர்கட்சியின் தலைவரும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தன்னிடம் கோரவில்லையென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு விஜயத்தின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களுடன் இணங்கி செயற்படுமாறே இரா. சம்பந்தன் வலியுறுத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் இந்த மாத முற்பகுதியில் கனடாவிற்கு விஜயம் செய்திருந்தார். இந்த...

வறட்சி இயற்கையின் கொடூரம் அல்ல! இயற்கைக்கு நாம் இழைத்த கொடூரத்தின் விளைவு!!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் வறட்சிக்குப் பலரும் இயற்கையையே குற்றம் சாட்டிவருகிறார்கள். இயற்கை வஞ்சித்துவிட்டது என்றும் இயற்கையின் கொடூரம் என்றும் குறிப்பிட்டு வருகின்றார்கள். உண்மையில் வறட்சி இயற்கையின் கொடூரம் அல்ல இயற்கைக்கு நாம் இழைத்த கொடூரத்தின் விளைவுதான் வறட்சி என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு விவசாய அமைச்சின் 2016ஆம் ஆண்டுக்குரிய சாதனை விவசாயிகளைக் கௌரவிக்கும்...

இலங்கை வான்பரப்பில் வேற்றுகிரகவாசிகள்?

மாத்தறை ஊறுபொக்க பிரதேசத்தில் வேற்றுகிரகவாசிகளின் பறக்கும் தட்டு போன்ற ஒரு பொருள் தென்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஊறுபொக்க ,கொலன்ன ,ஹேயஸ், தாபன்ன போன்ற பிரதேசத்தில் வேற்றுகிரக வாசிகளின் பறக்கும் தட்டு போன்ற ஒன்று தென்பட்டுள்ளது. குறித்த மர்மப் பொருள் தென்பட்டுள்ளதாகவும், இதனால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இது வேற்று கிரக வாசிகளின்...
Loading posts...

All posts loaded

No more posts