Ad Widget

மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்டத்துக்கு 250 பேர் தெரிவு

நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள வீடுகளுக்கான 250 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அதனையடுத்து, இம்மாதம் 30 ஆம் திகதி வீடமைப்பு அமைச்சரினால் வீடுகளுக்கான அத்திவாரம் இடும் நிகழ்வு இடம்பெறவுள்ளதென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல வருடங்களாக குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களின் நலன் கருதி, மானிய அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன் வந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நாவற்குழியில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான 250 வீடுகளை அமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இவ்வீட்டுத் திட்டத்துக்கான பயனாளிகளைத் தெரிவு செய்வதில் ஈடுபட்ட அதிகாரிகள் , இதுவரை 220 பயனாளிகளைத் தெரிவு செய்ததுடன் அவர்களுக்கான வங்கிக் கணக்குகளையும் ஆரம்பித்துள்ளனர்.

அதிகாரிகளின் நேரடிக் கண்காணிப்பில் அமைக்கப்படவுள்ள இந்த வீட்டுத் திட்டம், ஆறு மாத காலத்துக்குள் பூர்த்திச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts