- Tuesday
- August 18th, 2026
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் கைது செய்யப்பட்டும் சரணடைந்த நிலையிலும், காணாமல் போகச் செய்யப்பட்ட தமது உறவுகளை தேடிக் கண்டறியும் குடும்பங்களை சேர்ந்தோர் இன்று மூன்றாவது நாளாக உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா ஏ9 வீதியிலுள்ள தபாலகத்திற்கு முன்பாக தொடர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல்போன உறவினர்களில்...
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுக்கும் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அரசியல் கலப்பற்ற விதத்தில் இளைஞர்களின் ஆதரவு போராட்டத்துக்கான கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நாளை (26.01.2017) வியாழன் மாலை 4 மணிக்கு நல்லூர் முன்றலில் நடைபெறும். மேலும் வெள்ளிக்கிழமை 27.01.2017 அன்று காலை 9 மணிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் வவுனியா விஜயம் செய்யப்பட்டு உண்ணாவிரத...
முல்லைத்தீவு கேப்பாப்புலவு நோக்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்துக்கொண்டிருந்த உலங்கு வானூர்த்தி அவசரமாக மீண்டும் கொழும்புக்கு திரும்பியுள்ளது. கேப்பாப்புலவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்து முதற்கட்டமாக 53 குடும்பங்களுக்குரிய 243 ஏக்கர் காணியை ஜனாதிபதி விடுவிக்க உத்தேசித்திருந்தார். இதற்காக கொழும்பிலிருந்து விசேட வானூர்த்தி மூலம் அவர் முல்லைத்தீவிற்கான விஜயத்தை இன்று காலை ஆரம்பித்தார். எனினும் முல்லைத்தீவில்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவுக்கு இன்றைய தினம் விஜயம் செய்கின்ற நிலையில் கேப்பாப்புலவு மக்கள் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுத்து வருகின்றனர். முல்லைத்தீவு, கேப்பாப்புலவுக்கு ஜனாதிபதி வருகை தரும் போது கவனயீர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என இராணுவத்தினர் எச்சரித்துள்ள நிலையிலும் அவர்கள் போராட்டத்தை இன்று காலை முதல் முன்னெடுத்து வருகின்றர்....
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலையினை நேரில் கண்டதாக பன்னிரண்டு வயது, சிறுவன் காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஊர்காவற்துறை கரம்பெண் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணே படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது , நெடுந்தீவு பகுதியை சேர்ந்த இளம்...
நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்களுக்கு வீடமைத்து கொடுக்கும் நோக்குடன் அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றால் , நிகழ்வு நடக்கும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்து உள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாவற்குழியில் எதிர்வரும் 30ம் திகதி மானிய அடிப்படையில் வீடமைத்து...
தமிழகத்தின் அறவழிப் போராட்டங்கள் மீது காவல்துறையினரால் நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்... தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 8 ஆம் திகதி முதற்கொண்டு இடம்பெற்று வரும் அகிம்சை வழிப் போராட்டங்கள் மீது 23 ஆம் திகதி அன்று தமிழக காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதல்களை...
எட்டாவது சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ். வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்ஸே தெரிவித்துள்ளார் சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று(24) நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சர்வதேச கண்காட்சி கூடம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம், இலங்கை மாநகர...
நாட்டில் தற்போது யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தே செல்கின்றது எனலாம், அத்துடன் இவர்கள் தற்போது வீடுகளுக்கு சென்றும் பேருந்துகளிளும் ஏறி யாசகம் செய்து வருகின்றனர். இவ்வாறு பேருந்துகளில் ஏறி யாசகம் செய்பவர்களின் எண்ணிக்கை சுமார் 10 ஆயிரம் பேர் ஆக இருக்கக்கூடும் என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இவ்வாறு பேருந்துகளில் ஏறி...
க.பொ.த. உயர் தரப் பரீட்சைக்கு 2017 ஆம் ஆண்டில் தோற்றவுள்ள மாணவர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் விண்ணப்பம் கோரியுள்ளது. விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதி கால எல்லை பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியாகும். பாடசாலை மாணவர்களுக்கான அறிவுறுத்தல்கள் விண்ணப்பப்படிவங்கள் தபாலிடப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது. தனியார் பரீட்சார்த்திகளுக்கான மாதிரி விண்ணப்பப்படிவங்கள் தேசிய பத்திரிகைகளில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
உண்ணாவிரதம் இருப்பவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படின் அரசுக்கான ஆதரவு விலக்கிக்கொள்ளப்படும்: த.தே.கூ.
கடத்தப்பட்டு காணாமல் போன மற்றும் ராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டுமென கோரி வவுனியாவில் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள உறவுகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின், அரசாங்கத்திற்கு வழங்கிவரும் ஆதரவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விலக்கிக்கொள்ள நேரிடும் என கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற...
கடத்தப்பட்டும் கைதுசெய்யப்பட்டும் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டும் காணாமல் போன தமது உறவுகளின் நிலை குறித்து அறிவிக்குமாறு வலியுறுத்தி வவுனியாவில் இன்று (புதன்கிழமை) மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கொட்டும் மழையில் குளிருக்கு மத்தியில் உணவை தவிர்த்து இரவு பகலாய் தமது உறவுகளுக்காய் இம்மக்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவிலுள்ள...
ழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேரத்துரை சந்திரகாந்தனின் உத்தரவின் பேரிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டுள்ளது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் உச்சநீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது. பிள்ளையானின் உத்தரவின் பேரில் சாந்தன் என்பவரே இந்தப் படுகொலையை புரிந்திருப்பது பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் உச்சநீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது....
ஆனையிறவு கொம்படி வெளிப் பகுதியில், எம்ஐ24 உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்தி, 4 விமானப்படையினர் பலியாவதற்குக் காரணமாக இருந்தார் என விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரின் வாக்குமூலத்தை யாழ்ப்பாண மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இரத்துச் செய்துள்ளார். 1999ஆம் ஆண்டு டிசெம்பர் 17ஆம் நாள், ஆனையிறவு அருகேயுள்ள கொம்படி வெளியில் எம்.ஐ-24 உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தி...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை தொடர்பாக, ஜூரிகள் சபையினால் தீர்மானிக்கப்பட்டு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு, எதிர்ப்புத் தெரிவித்து அவரது மனைவியினால் மேன்முறையீடு செய்யப்பட்ட மனுவை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ரவிராஜ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் ஜூரிகள் சபையினால் நடத்தப்பட்ட விசாரணையின்போது நிரபராதிகள் என விடுதலை...
கொடிகாமம், கச்சாய் பகுதியில் உள்ள வீட்டில் திங்கட்கிழமை இரவு 18 பவுண் நகை, திருட்டு போயுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். கணவன் வெளியிடத்துக்குச் சென்ற நிலையில், தனிமையில் இருந்த பெண், இரவு உறங்குவதற்காக அயல்வீட்டுக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் வீட்டில் புகுந்த திருடர்கள், அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகைகளை திருடி சென்றுள்ளனர்....
ஆவரங்கால் பகுதியில் கடந்த வாரம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர், அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் திங்கட்கிழமை மாலை, கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் தலைமறைவாகி இருந்த நிலையில், கைதுசெய்யப்பட்டுள்ளனர். தைப்பொங்கல் தினத்தன்று, அச்சுவேலி தெற்கு பகுதி இளைஞர்களுக்கும், ஆவரங்கால் நவோதயா பகுதி இளைஞர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையினை தீர்த்து...
ஆச்சிரமமொன்றில் இணைக்கப்பட்ட 7 வயதுடைய முஸ்லிம் சிறுவனொருவன், பௌத்த பிக்குவாக மாறிய சம்பவமொன்று, திம்புலாகல வன ஆச்சிரமத்தில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து திம்புலாகல வன ஆச்சிரமத்தின் தலைமைத் தேரர் மிலானே சிறியலங்காரர் கூறியதாவது, “குறித்த சிறுவனின் தாய், வெளிநாடொன்றில் பணிபெண்ணாக தொழில் புரிந்துவரும் நிலையில், சிறுவனின் தந்தையான ஹமீட் ஸ்மைல், தனது மகனை இந்த ஆச்சிரமத்தில்...
இலங்கை மத்திய வங்கி அறிக்கை தொடர்பிலான விவாதம் பாராளுமன்றத்தில் நேற்று ஆரம்பமானது. பாராளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உரையாற்றுகையில் ஒவ்வொரு அரசாங்கமும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தாலும், நாளாந்தம் ஊழல் அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டினார். இது ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல என்றும் இதனால், ஊழலை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்...
வவுனியாவில் காணாமல் போனோரின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் உணவு தவிர்ப்பு போராட்ட தளத்திற்கு வருகை தந்த பொலிஸார் அங்கிருந்தவர்களிடம் தகவல்களை சேகரித்துள்ளனர். நேற்றய தினம் இரண்டாவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் ஈடுபட்ட நிலையில், அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகின்றது. இந்தநிலையில், நேற்று மாலை (24) போராட்ட தளத்திற்கு சென்ற...
Loading posts...
All posts loaded
No more posts
