- Wednesday
- August 19th, 2026
“நல்லாட்சி அரசாங்கமானது, தமிழ் மக்கள் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றாது தொடர்ந்தும் இழுத்தடித்து ஏமாற்றி வருவதால், நல்லாட்சி அரசாங்கத்துக்கு வழங்கி வருகின்ற ஆதரவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீள்பரிசீலனை செய்ய வேண்டும்” என, கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில், ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே...
லங்கையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் எனக் கோரி நான்கு நாட்களாக நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை மாலை அரசாங்கம் அளித்த உறுதிமொழியொன்றையடுத்து கைவிடப்பட்டிருக்கின்றது. உண்ணாவிரதம் இருந்தவர்களை நேரடியாக வந்து சந்தித்துப் பேச்சுக்கள் நடத்திய பிரதி பாதுகாப்பு அமைச்சர் ருவான் விஜேவர்தன எழுத்து மூலமாக அளித்த உறுதிமொழிக்கமைவாகவே தாங்கள்...
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டத்திற்கு தொடர்ச்சியாக ஆதரவு பெருகி வருவதாக அறியமுடிகின்றது. வவுனியாவில் இன்று நான்காவது நாளாகவும் இன்று உண்ணா விரதப் போராட்டம் தொடர்ந்து வருகின்றது. இந்நிலையில், உண்ணாவிரதமிருப்போருக்கு ஆதரவாக அறவழிப் போராட்டமொன்றும் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. இதற்கு ஆதரவாக மதத்தலைவர்கள் , பிரதேசவாசிகள் , அரசியல் பிரமுகர்கள் என...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்கள் விடுதியில் திடீரென தீப்பரவியுள்ளது.மின் ஒழுக்கினால் இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.எனினும் இந்த தீப்பரவலால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
வெளிவிவகார அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் காரியாலயம் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. வெளிவிவகார அமைச்சின் பிராந்திய சேவைகளை வழங்கும் நோக்கில், யாழ். மாவட்ட செயலகத்தில் இவ் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க...
இந்தியாவின் 68ஆவது குடியரசுத் தினம் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது. இந்தியத் துணைத் தூதுவர் என் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மகாகவி பாரதியாரின் கொள்ளுப்பேரனான ராஜ்குமார் பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்வில் இந்திய தேசியக் கொடி ஏற்றப்பட்டு, இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர், இந்திய குடியரசுத்...
அரச சேவையாளர்களின் தொழிற்தரத்தை மையமாக கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 2 ஆயிரம் ரூபா தொடக்கம் 16 ஆயிரம் ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பை மீண்டும் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த சம்பள அதிகரிப்பானது இம்மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய தொழிற்சங்க முன்னணியின் தலைவர் சமன்ரத்ன பிரிய தெரிவித்தார் கொழும்பில் அமைந்துள்ள அரச மருந்தாளர் சங்கத்தின் கேட்போர்...
காணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து இன்று காலை ஆரம்பமான குறித்த பேரணி, வவுனியா நகரை சென்றடைந்து தற்போது உண்ணாவிரதம் இடம்பெற்றுவரும் பிரதான தபாலக முன்றலுக்குச் செல்வதாக எமது பிராந்திய செய்தியாளர்...
முஸ்லீம் ஆசிரியையினால் கிளிநொச்சி அதிபருக்கு எதிராக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் காரியாலயத்தில் முறைபாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாடு கிளிநொச்சி மகாவித்தியாலய ஆசிரியரினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட ஆசிரியை தனது கையொப்பத்துடன் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதத்தில், கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட...
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் பெப்ரவரி மாதத்திற்குள் வழங்கி வைக்கப்படும் என வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அண்மையில் வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்களின் பிரதிநிதிகள், சிறுவர் விவகார இராஜாங்க...
காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு கோரி வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்.நல்லூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத பேராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட பகுதியில் கைதுசெய்யப்பட்டு காணாமற்போனோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். நல்லூர் ஆலய முன்றலில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல் இவ் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டு...
காணாமல் போனோர் குறித்த ஒரே தீர்வு அவர்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பதாகுமென தெரிவித்துள்ள அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன, காணாமல் போனோரை தேடுவது சிக்கலான விடயம் என்றும் அனைவரும் இறந்துவிட்டதாக மரண சான்றிதழ் வழங்கவும் முடியாதென்றும் குறிப்பிட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்...
தமிழர் தாயகத்தில் காணாமல் போன தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறும் தமது உறவுகளுக்கு என்ன நடந்ததென்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்குமாறும் வலியுறுத்தி வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழ் அரசியல் கைதிகள் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள...
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண் கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும் பெப்ரவரி 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார். ஊர்காவற்துறை கரம்பன் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணியான ஞனசேகரம் ரம்சிகா (வயது27) என்ற பெண் கொடூரமான முறையில்...
துரையப்பா விளையாட்டு மைதானம் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டாலும் அது விளையாட்டு வீரர்களுக்கு பயன்படுவதில்லை என யாழ் மாவடட விளையாட்டு பிரிவு வடடாரங்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ். துரையப்பா விளையாட்டு மைதானம் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் பல மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் ஜனவரி 18ம்...
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடுகள் மற்றும் வர்த்தக முயற்சிகள், வேலைவாய்ப்பு தொடர்பாக அமெரிக்காவின் மிலேனியம் சவால் நிதிய உயர் அதிகாரிகள் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர். மிலேனியம் சவால் நிதியத்தின் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு சிறீலங்காவுக்கு உதவிகள் வழங்கப்படவுள்ளன. இந்த நிலையில், அமெரிக்காவின் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு அமைப்பின் பிராந்திய பிரதி உதவித் தலைவர், பாத்திமா...
வவுனியாவில் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமலாக்கப்பட்ட ஒருவரின் தாயார் மயக்கமுற்று விழுந்த நிலையில் வவுனியா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் 14பேர் இன்றுடன் நான்காவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் உடல்நிலையைப் பரிசோதனை செய்த வைத்தியர் குழு இவர்களின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவந்த தாயார்...
டெங்கு நுளம்பு பரவும் விதத்தில் சூழலை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களின் சுற்றுச்சூழலிலும் பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, தனியார் மற்றும் அரச நிறுவனங்களில், டெங்கு நுளம்பு பரவும் இடங்களைத் துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன. குறித்த...
ட்ரோன் புகைப்படக் கருவியை பயன்படுத்தும் போது, கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுக்க விழுமியங்கள் மற்றும் சட்ட விதிமுறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வை அரச தகவல் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த செயலமர்வு அரச தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில், எதிர்வரும் 31ஆம் திகதி,முழுநேர செயலமர்வாக நடைபெறும் என்றும் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊடக வர்த்தகம் மற்றும்...
கிளிநொச்சி கட்டை பகுதியில் ரயிலில் மோதி நபரொருவர் பலியாகியுள்ளார். யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில், ரயில் கடவையை கடக்க முற்பட்ட மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த என் கவிந்திரன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளதுடன், அவர், கிளிநொச்சி அன்னை சாரதா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமை புரிவதுடன், பாடசாலை விட்டு...
Loading posts...
All posts loaded
No more posts
