Ad Widget

யாழில் வெளிவிவகார அமைச்சின் பிராந்திய அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது

வெளிவிவகார அமைச்சின் பிராந்திய கொன்சியூலர் காரியாலயம் யாழ்ப்பாணத்தில் இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

வெளிவிவகார அமைச்சின் பிராந்திய சேவைகளை வழங்கும் நோக்கில், யாழ். மாவட்ட செயலகத்தில் இவ் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பிரதியமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி.சில்வா ஆகியோர் அதிதிகளாக பங்கேற்றனர்.

வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகமொன்று வெளிமாவட்டத்தில் திறந்துவைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்ட சேவைகளை இனி இவ் அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

Related Posts