- Wednesday
- August 19th, 2026
முன்னாள் விடுதலைப் புலிப் போராளியொருவரின் புகலிடக் கோரிக்கையை நிராகரித்து அவரைச் ஸ்ரீலங்காவிற்கு திருப்பியனுப்பியமைக்காக மனித உரிமைக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அவருக்கு 30,000 யூரோக்களை இழப்பீடாக செலுத்தும்படி சுவிட்சர்லாந்து அரசிற்கு உத்தரவிட்டிருக்கின்றது. பெயர் குறிப்பிடப்படாத இந்த முன்னாள் போராளியையும், அவரது குடும்பத்தினதும் புகலிடக்கோரிக்கையினை நிராகரித்திருந்த சுவிட்சர்லாந்து அரசாங்கம் அவர்களை 2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்கு திருப்பியனுப்பிருந்தது. முன்னாள்...
மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை சிறிலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான பாதுகாப்பு அச்சுறுத்தில் இருப்பது தொடர்பாக சிறிலங்கா பிரதமர் செயலகத்தில் இருந்து, இந்த மாத முற்பகுதியில் சுமந்திரனுக்குத் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. இந்த தகவல் சுமந்திரனுக்குப் பரிமாறப்பட்டது என்று சிறிலங்கா...
மாங்குளம் 06ஆம் கட்டை அம்பாள்புரம் கிராமத்தில் இரு குழுக்களுக்கடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம், வாள்வீச்சாக மாறியதில் 5 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கிராமத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த நால்வரே மதுபோதையில் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அவதானித்த வீதியால் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் விலக்குத்தீர்க்க முற்பட்ட வேளை,...
தெஹிவளை - படோவிட பகுதி கால்வாயில் இருந்து இரண்டு சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எதுஎவ்வாறு இருப்பினும், உயிரிழந்தவர்கள் யார் என்ற விபரம் இதுவரை தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழ்.பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் கடுமையாக பாதிக்கப்பட்ட இரண்டு மாணவர்கள் நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாதரவத்தை மற்றும் கொடிகாமத்தை சேர்ந்த கலைப்பீட இரண்டாம் வருட மாணவர்கள் இருவரே மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24ஆம்திகதி குறித்த மாணவர்கள் உள்ளிட்ட 8 மாணவர்களை ஏனைய மாணவர்கள் சிலர் பகிடிவதைக்கு உட்படுத்தி கடுமையான முறையில் தாக்கியுள்ளனர். இதில்...
கிளிநொச்சி – முகமாலை பகுதியில், இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த ஐந்து ஏக்கர் காணி நேற்று (27) விடுவிக்கப்பட்டது. கிளிநொச்சி – முகமாலையில், இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவு முகாம் அமைந்திருந்த பொதுமக்களின் காணி நேற்று விடுவிக்கப்பட்டன. பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், இராணுவத்தினர் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 552 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரியினால், கிளிநொச்சி மாவட்ட...
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலையின் சாட்சியான சிறுவனின் வீட்டுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ. சபேசன் காவல்துறையினருக்கு உத்தரவு இட்டுள்ளார். சாட்சியான சிறுவனின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது என சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் நேற்று வெள்ளிக்கிழமை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் இ.சபேசனின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்....
இதுவரையில் முச்சக்கர வண்டி தொடர்பில் அறிமுகம் செய்துவந்த புதிய சட்டங்கள் அனைத்தும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, இது தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானி அறிவித்தல் மேற்படி திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. அறிமுகமாகியுள்ள புதிய சட்டதிட்டங்களின் படி, அனைத்து...
ஊர்காவற்றுறை பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் நாநேந்திரன் கம்சிகா அடித்து கொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. மனித சங்கிலி போராட்டத்தின் நிறைவில் அப்பகுதி மக்களினால் ஊர்காவல்துறை உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த 24 ஆம் திகதி 7...
ஸ்ரீலங்காவில் சித்திரவதைகளுக்கு ஆளாகக்கூடிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள வெளிநாடுகளில் தஞ்சமடைந்துள்ள ஈழத் தமிழர்களை நாடு கடத்த வேண்டாம் என ஐக்கிய நாடுகள் சபை வெளிநாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. ஸ்ரீலங்காவில் கடந்த ஏப்ரல் மாதத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள் இடம்பெற்றுள்ளதாக ஆதாரங்களுடன் தகவல்களை வெளியிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதைகளுக்கு எதிரான குழு, சிறிலங்காவின் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களம்...
கனடா உட்பட வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பைப் பெறவேண்டுமெனில், புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பணியகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் உரையாற்றுகையில், “கனடா...
2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளும் வெளிநாடு செல்லலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வவுனியா புனர்வாழ்வு முகாமிலிருந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர் நேற்றைய தினம் சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இவர்களை விடுதலை செய்வதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த புனர்வாழ்வுத் திணைக்களத்தின் வன்னிப்...
நாட்டிலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பகுதியிலும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இது குறித்து திணைக்களம் இன்று அதிகாலை 5.30க்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் : சில இடங்களில் 100 மில்லி மீற்றர்களை தாண்டிய மழை பெய்யலாம். இடியுடன் கூடிய மழையின்போது வலுவான காற்றும் வீசக்கூடும். இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள்...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் மேலதிக விசாரணை அறிக்கை குற்றப்புலனாய்வு பிரிவினரால் இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி சவீஸ்கரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டது. இதன்போது, வழக்கு குறித்த மேலதிக விசாரணை அறிக்கையினை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளனர். குறித்த வழக்கு...
மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் இன்றும் (வெள்ளிக்கிழமை) பாரிய எதிர்ப்பு பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்றைய எதிர்ப்பு பேரணியை மாணவர்கள் ஆரம்பித்துள்ளனர். அவர்கள் பல்கலை வளாகத்திலிருந்து பலாலி வீதி வரை சென்று அங்கிருந்து வைத்தியசாலை வீதியூடாக...
எமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என காணாமல் போனோர் குறித்த தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் பெற்றோர்களிடம் கேட்டுக் கொள்கிறேன் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சின் பிராந்திய கிளை காரியாலயம் யாழ்ப்பாணத்தில் நேற்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு...
‘தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் 2017 ஆம் ஆண்டுக்குள் தீர்க்கப்படவேண்டும்’ என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் பிராந்திய தூதரக சேவைகளுக்கான பணியகம், யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று திறந்து வைக்கப்பட்டபோது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், பெரும்பான்மையான சிங்கள...
நாட்டின் பல இடங்களில் இன்றும் நாளையும் இடியுடன் கூடிய கடுமையான மழை பெய்யக்கூடுமென எதிர்பார்ப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்து வரும் 48 மணித்தியாலத்துக்குள் வடக்கு, கிழக்கு உட்பட வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் கடுமையான மழை எதிர்பார்க்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மட்டக்களப்பில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட...
மாங்குளம் - துணுக்காய் வீதியில் உள்ள வன்னிவிளாங்கும் பகுதியில் வியாழக்கிழமை (26) இரவு இடம்பெற்ற விபத்தில் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் படுகாயங்களுக்கு உள்ளாகி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். ஓய்வு பெற்ற பதில் தபாலதிபரான மாப்பாணப்பிள்ளை கதிர்காமநாதன் (வயது – 57) என்பரே படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளார். முதியவரை மோதிய...
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலிருந்து புனர்வாழ்வு பெற்று ஒரு வருடத்தினை பூர்த்திசெய்த மூவர் நேற்று சமூகத்துடன் இணைக்கப்பட்டுள்ளனர். கார்த்திகேசு நாதன் (முல்லைத்தீவு), குழந்தைவேல் தயாபரன் (கிளிநொச்சி), கணபதிப்பிள்ளை யோகராசா (மட்டக்களப்பு) ஆகிய மூவருமே சமூகத்துடன் இணைத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்நிகழ்வில் வவுனியா புனர்வாழ்வு நிலையப் பொறுப்பதிகாரி, பூந்தோட்ட புனர்வாழ்வு நிலைய அதிகாரி, புனர்வாழ்வு நிலைய இணைப்பதிகாரி, காவல்துறை அதிகாரிகள்...
Loading posts...
All posts loaded
No more posts
