Ad Widget

கர்ப்பிணி பெண் கொலை : கண்டனம் தெரிவித்து மனித சங்கிலி போராட்டம்

ஊர்காவற்றுறை பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் நாநேந்திரன் கம்சிகா அடித்து கொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மனித சங்கிலி போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மனித சங்கிலி போராட்டத்தின் நிறைவில் அப்பகுதி மக்களினால் ஊர்காவல்துறை உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பகுதியில் கடந்த 24 ஆம் திகதி 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் முச்கக்கர வண்டியில் வந்த இருவரினால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இருவர் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஊர்காவல்துறை ஊர்காவல்துறை பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று காலை பொது மக்கள், வர்த்தகர்கள், அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், மதகுருமார், இணைந்து மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன் வர்த்தகர்கள் கடைகளை மூடி மனித சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். உயிரிழந்த பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரியும், பொலிஸார் தமது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும் மனித சங்கிலி போராட்டம் இடம்பெற்றுள்ளது.

போராட்டத்தின் இறுதியில், மதகுருமார்களினால் ஊர்காவல்துறை உதவி பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

Related Posts