Ad Widget

முன்னாள் போராளிகள் அனைவரும் வெளிநாடு செல்லலாம்!

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளும் வெளிநாடு செல்லலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வவுனியா புனர்வாழ்வு முகாமிலிருந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மூவர் நேற்றைய தினம் சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

இவர்களை விடுதலை செய்வதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த புனர்வாழ்வுத் திணைக்களத்தின் வன்னிப் பிரிவுப் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.ஹெமிடோன், மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், முன்னாள் போராளிகள் அவர்களின் தேவையின் நிமித்தம் வெளிநாடு செல்வதற்கு விரும்புவார்களாயின், அதற்கான ஏற்பாடுகளை, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தினூடாக மேற்கொள்ளமுடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts