- Wednesday
- August 19th, 2026
யாழ்ப்பாணம், கல்லுண்டாய் வெளிபகுதியில் பெண் மீது, முகத்திலும் மார்பிலும் கத்தியால் குத்திய சம்பவம் தொடர்பில், பொம்மை வெளிபகுதியினை சேர்ந்த 42 வயதுடைய நபரை ஞாயிற்றுக்கிழமை, கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். சோமசுந்தரம் வீதி ஆணைக்கோட்டை பகுதியினை சேர்ந்த எஸ்.வசந்ததேவி (வயது 38) என்றப் பெண், கத்திக்குத்துக்கு சனிக்கிழமை இலக்கானார். காயங்களுக்கு உள்ளாகி மயங்கி கிடந்த...
ஆவரங்கால், நவோதய வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், கைதான சந்தேக நபர்கள் மூவரை, எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதவான் ஏ.யூட்சன், ஞாயிற்றுக்கிழமை (29) உத்தரவிட்டார். இந்தச் சம்பவத்துடன், தொடர்புடைய குற்றச்சாட்டில் ஏற்கெனவே மூவர் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் மூவர், அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸாரால் சனிக்கிழமை (28)...
இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் ஊடுருவுபவர்களைத் தடுப்பதற்காக, இந்தியப் பாதுகாப்புத் தரப்பினர், பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான கடற்பகுதியில், ஏராளமான மணல் திட்டுகள் உள்ளன. இவற்றில் ஐந்து மணல் திட்டுகள், இந்திய கடல் எல்லைக்குள் அமைந்துள்ளன. ஏனையவை, இலங்கை கடல்...
யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் மூலமாக ஒரு கோடியே ஐந்து லட்சத்து ஒன்பது ஆயிரத்து இரண்டாயிரத்து இருநூற்று இருபது ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியின் நிதி திட்டமிடல் அதிகாரி தெரிவித்தார். பொருளாதார ரீதியான சந்தை வாய்ப்பினையும் மக்களின் புதிய தொழில்நுட்ப வளர்ச்சியினை மேன்படுத்துவதற்கான ஆரம்பிக்கப்பட்ட...
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புநோக்கிச் சென்ற பேருந்து மாடுகளை மோதித்தள்ளி கோர விபத்துக்குள்ளாகியுள்ளது. இச்சம்பவத்தில் 15 மாடுகள் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளதுடன், 25இற்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்துள்ளன. இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பேருந்தில் பயணித்த பயணியொருவர் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தின்போது பேருந்துச் சாரதி போதையில் இருந்ததாகவும் பயணிகள் விசனம் தெரிவித்துள்ளனர்.
“தென்னாபிரிக்காவில் அரசியல் ரீதியான ஒரு தீர்வு பெற்ற பின்னரே, உண்மை, நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டது. மத்திய அரசாங்கம் அதைச் செய்து விட்டு, மக்களுக்கான நியாயமான அரசியல் தீர்வைத் தராது விட்டு விடுமோ என்ற ஓர் ஐயம், எம்மைப் பீடித்தே இருக்கிறது” என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மயூரபதி ஆலய நலன்புரிச் சங்கத்தால், கல்விசார்...
கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஐந்நூறு மாணவா்களுக்கு மூன்று வருடங்களுக்கு ஆயிரம் ரூபா வீதம் உதவி வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று இடம்பெற்றது. பிரதமர் அலுவலகம். சிறுவா் பெண்கள் விவகார அமைச்சு, சிறுவா் நன்னடத்தை திணைக்களம்,கிளிநொச்சி மாவட்டச் செயலகம் ஆகியவற்றின் அனுசரணையில் கொழும்பு மயூரபதி அம்மன் நலன்புரிச் சங்கத்தினால் மேற்படி உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....
கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய நாட்டு யுவதி ஒருவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் புரிந்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களுக்கான பாதுகாப்புப் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று கல்கிஸ்ஸை கடல் பிரதேசத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மிரிஹான மற்றும்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை இராணுவம் யுத்தக் குற்றச் செயல்கள் புரிந்ததாக முறைப்பாடுகளை தயார் செய்து முன்வைத்ததாக கூறப்படும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் பணிபுரியும் நான்கு பேரை டொனல்ட் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். புதிய இராஜாங்க செயலாளராக ரெக்ஸ் மிலர்சன் நியமிக்கப்பட்டு, இந்த அதிகாரிகள் 4 பேர் நீக்கப்பட்டமையினால் தமிழீழ புலம்...
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் தீர்வு வழங்கப்படாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்து, அம்பாறை மாட்டத்தில் காணாமல் போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். அம்பாறை – திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால், அம்பாறை மாவட்ட காணாமல் போனோரை கண்டறியும் சங்கத்தின் தலைவி எஸ்.செல்வராணி தலைமையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முற்பகல்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா சம்பந்தனுக்கு திருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய தேவஸ்தானம் ‘இறைபணிச் செம்மல்’ பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. ஆலயத்தின் வருடாந்த மகா கும்பாபிஷேகம் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், ஆலயத்தின் பாலஸ்தான மண்டபம் நேற்றுத் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட இரா.சம்பந்தன் பாலஸ்தான மண்டபத்தைத்...
முல்லைத்தீவு – மார்க்கம் மற்றும் பிளம்ரன் – வவுனியா ஆகிய இரட்டை நகர ஒப்பந்தங்களின் மூலம் வடக்கு மாகாண மக்கள் அதிகளவான நன்மைகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறித்த இரட்டை நகர ஒப்பந்தங்கள் காத்திரமானவையல்ல என பலர் விமர்சித்து வருகின்றமைக்கு இது காரணமல்லவெனவும், குறித்த ஒப்பந்தங்கள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளதாகவும்...
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் தொடர்ந்தும் மழை பெய்யும் என எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. வானிலை அவதான நிலையம் இன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த தினங்களில் ஏழு மாவட்டங்களில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, 4065 குடும்பங்களைச் சேர்ந்த 12,575...
புதிய யாப்பு ஊடாக தேசியப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வு வந்துவிடுமோ என்ற அச்சத்தில் தென்னிலங்கையில் உள்ள இனவாத சக்திகள் தன்னை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சதித் திட்டம் ஒன்றை ஸ்ரீலங்கா அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளதாக இந்திய...
வடக்கில் புனர்வாழ்வளிக்கப்படாத 300 விடுதலைப் புலிகள் உள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடையாத 300 விடுதலைப் புலிகள் வடக்கில் வாழ்கிறார்கள். இவர்கள் அனைவரும் வெளிநாடுகளில் வாழும் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி வருகின்றனர் என இராணுவத்தினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு புனர்வாழ்வு அளிக்கப்படாத முன்னாள் புலி உறுப்பினர்கள்...
வடக்குமாகாணம் இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் இருந்து வேறுபட்ட தரைத்தோற்ற அமைப்பையும் வேறுபட்ட காலநிலையையும் வேறுபட்ட நீர்முலங்களையும் கொண்டது. எங்களிடம் நீர்வீழ்ச்சிகளோ பேராறுகளோ இல்லை. இவற்றின் பின்னணியில் நாம் எதிர்கொண்டுள்ள நீர்வள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு எமது மாகாணத்துக்கான தனியான ஒரு நீரியல் கொள்கையின் அவசியம் பலராலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைவாகவே, வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கு தற்போது...
வடமாகாணத்தின் நீர்வளத்தை மீட்டெடுக்க மாகாணம் சார்ந்த கொள்கை திட்டமிடல் ஒன்றை வகுக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது என வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ். பொது நூலக கேட்போர் கூட்டத்தில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வடமாகாண நீர்வள அபிவிருத்தி ஆய்வரங்கில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து...
பல்கலைக்கழகத்தின் மாணவிகளின் புதிய விடுதியில் தீ ஏற்பட்டமைக்கான காரணம் மின் ஒழுக்கு அல்ல. இருப்பினும் சரியான காரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. தற்போது குறித்த விடுதியில் இருந்த மாணவிகளிற்கு மாற்று விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். யாழ். பல்கலைக் கழகத்தினில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பாரிய தீ விபத்தினால் கட்டிடத்திற்குப்...
இந்த நாட்டுக்கே விடுதலையைப் பெற்றுத்தந்த ஒரு மாபெருந் தலைவன்தான் எங்களுடைய தலைவர் மதிப்பிற்குரிய தலைவர் மகிந்த ராஜபக்ஷ என கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் நேற்று மகிந்த ஆதரவான கூட்டு எதிரணியின் புதிய மாற்றத்திற்கான ஆரம்பம் என்ற கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்துள்ளார். அவர் உரையாற்றும்போது மேலும் தெரிவிக்கையில், இன்று ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ஷவை ஒருவராலுமே...
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ள 65ஆயிரம் பொருத்து வீடுகளிற்கு அமைக்கப்படவுள்ள போர்க் குழாய்க் கிணறுகளினால் பாரிய தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண நீரியல்வள அபிவிருத்தி ஆய்வரங்கு இன்று யாழ்ப்பாண பொது நூலகத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
